நன்றியும் வருத்தமும்..
வார்த்தைகள் அடங்கி
வார்த்தைகள் அடங்கி
மெளனமாய் வருத்தும்
இரவின் நேரத்தின்
இனிமையான
இடைவெளிகளில்
நுழைந்து சிரிக்கிறது
உன் நினைவு..
பிரிவின் காரணமாய்
கசப்புற்ற மனம்
கவிதையாக எழுந்தது..
கண்ணீர் விட்டும்
சிலநேரம்
அமைதியாய் அழுதது..
நிசங்களை ஏற்கும்
பக்குவம் அதற்கில்லை..
நித்திரை நேரமென்ற
எல்லைகளும் இல்லை..
பத்திரமாய் பதிந்துவிட்ட
பகல்கனவாய் என்காதல்,
சித்திரங்கள் போலவே
சிந்தையில் சிரிக்குதடி..
அன்பினால் அகப்பட்டு
அதன்வலியை உணரும்
அனுபவத்தை தந்த
காதலுக்கும் காதலிக்கும்
வருத்தங்களுடன் நன்றி..
நன்றியுடன் வருத்தங்கள்..