கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
6:53 AM

Welcome Guest | RSS Main | புதிய கணினியின் திறம... | Registration | Login
Site menu

Statistics

Total online: 6
Guests: 6
Users: 0

புதிய கணினியின் திறமையைச் சோதிப்பது எப்படி?

புதிதாக வாங்கிய கணினிக்கு அதிகப்படியான வேலைப்பளுவைக் கொடுத்து அது அவ்வளவு அழுத்தத்தையும் தாங்குகிறதா? எனச் சோதிப்பதற்கு ஏதேனும் மென்பொருள் இருக்கிறதா?

அதிகப்படியான வேலைப்பளுவையும், மிகுந்த அழுத்தத்தையும் தரக்கூடிய ஒரு கடினமான சோதனையைச் செய்யும்படி கணினியைப் பணிப்பது எப்படி?

எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும், மனம் தடுமாறாமல் கவனத்தைப் பிற விசயங்களில் ஈடுபடுத்தாமல் ஒரே மனநிலையில் இயங்குபவர்களே வாழ்வில் வெற்றிபெறுவர்.

எவ்வளவு மன அழுத்தம் இருப்பினும், அதை வெளிக்காட்டாமல் தனது கடமையில் இன்னமும் சிறப்பாகச் செயல்படமுடியுமா? எனக் கடமையில் கருத்தாய் இருப்பவர்களை நாம் தினமும் பார்க்கிறோம்.

இந்த வேலையைச் செய்து நமக்கு உதவுவதற்காகவே Heavy Load எனப்படும் இலவச மென்பொருள் உள்ளது.

மிகக்கடினமான வேலையைச் செய்யும் கணினியானது குறித்த நேரத்துக்குள்ளாக தனக்கு இட்ட பணியைச் செவ்வனே செய்து முடித்துவிடுகிறதா என்பதை இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கண்டறியலாம்.

கணினியின் பல்வேறு பாகங்களான CPU, நினைவகம், வன்வட்டு (Hard disk), இயங்குதளம் (OS), வலைப்பின்னல் (Network) ஆகியவற்றின் திறமையை இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

இந்த மென்பொருளானது அளவில் பெரிய கோப்புகளை (Files) கணினியில் தற்காலிகமாக எழுதிப் பார்த்துச் சோதிக்கும். சோதனை முடிந்தபிறகு உருவாக்கிய தற்காலிகக் கோப்புகளை (Temp Files) அழித்துவிடும்.

தரவுத்தள மேலாண்மைக் (Database Management) கணினிகளை உற்பத்திப் பிரிவுக்கு (Production) அனுப்புவதற்கு முன்னர் இதைப் பயன்படுத்திச் சரிபார்க்கலாம் - அதன் வேகத்திறமையை.

இதன் சிறப்பம்சம் என்னவெனில் கடினமான கணக்கீடுகளைச் செய்து கணினியின் Micro Processor ஐ அதிகமான வேலை வாங்கி அதன் முடிவுகளை ஒரு வரைபடமாகக் காண்பிப்பதே.

தரவிறக்கம் செய்ய உதவும் சுட்டி கீழே:

http://www.jam-software.com/heavyload/hload.zip
Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz