கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
6:14 AM

Welcome Guest | RSS Main | கணினி வலையமைப்பு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

கணினி வலையமைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று தகவல் அல்லது தரவுகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு அமைப்பு. கணினி வலையமைப்பை நிரந்தரமானது (வலையமைப்பு கம்பி இணைப்புகள்) அல்லது தற்காலிகமானது (மோடம் இணைப்புகள்) என்று மேலோட்டமாக இரு வகையாகப் பிரிக்கலாம். வலையமைப்புகளை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கீழே அந்த பிரிவுகளைக் காணலாம்.

வலையமைப்பு வகைகள்

வலையமைப்பு அமைந்திருக்கும் பரப்பின் படி

  • தனிநபர் பரப்பு வலையமைப்புகள் (Personal Area Networks or PAN)

  • குறும்பரப்பு வலையமைப்புகள் (Local Area Network or LAN)

  • பெரும்பரப்பு வலையமைப்புகள் (Wide Area Network or WAN)

  • பெருநகர் பரப்பு வலையமைப்புகள் (Metropolitan Area Network or MAN)

வலையமைப்பின் செயல்தன்மைப் படி

  • வாடிக்கையாளர்-சேவையகம் (Client-Server)

  • பல அடுக்குக் கட்டமைப்பு (Multitier architecture)

  • சக கணினிகளுக்கிடையே தொடர்பு (peer-to-peer)

வலையமைப்பு இணைப்பு முறைப் படி

  • பாட்டை வலையமைப்பு (Bus Network)

  • விண்மீன் வலையமைப்பு (Star Network)

  • வளைய வலையமைப்பு (Ring Network)

  • கண்ணி வலையமைப்பு (Mesh Network)

  • விண்மீன்-பாட்டை வலையமைப்பு (Star-bus Network)

வலையமைப்பின் சிறப்புத் தன்மையின் படி

  • தேக்கக வலையமைப்பு (Storage Network)

  • சேவையகப் பண்ணைகள் (Server Farms)

  • செயல் கட்டுப்பாட்டு வலையமைப்பு (Process Control Network)

  • மதிப்புக் கூட்டும் வலையமைப்பு (Value Added Network)

  • சிறு மற்றும் வீட்டில் இயங்கும் அலுவலக வலையமைப்பு (SOHO Network)

  • கம்பியில்லா சமூக வலையமைப்பு (Wireless Community Network)

இணைப்பு நெறிமுறை அடுக்குகள்

கணினி வலையமைப்புக்களை செயல்படுத்த பலவகை நெறிமுறை அடுக்கு (Protocol Stack) கட்டமைப்புகளும், ஊடகங்களும் (Media) நடப்பில் உள்ளன. ஒரு கணினி வலையமைப்பை ஒன்று அல்லது பல ஊடகங்களையும், நெறிமுறை அடுக்குகளையும் இணைந்து செயல் படச் செய்து வடிவமைக்கலாம். உதாரணத்திற்குச் சில:

  • ஆர்க்நெட் (ARCnet)

  • டெக்நெட் (DECnet)

  • ஈதர்நெட் (Ethernet)

  • இண்டர்நெட் நெறிமுறை (Internet Protocol or IP)

  • போக்குவரத்து கட்டுப்பாட்டு நெறிமுறை (Transport Control Protocol or TCP)

  • பயனர் Datagram நெறிமுறை (User Datagram Protocol or UDP)

திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் (OSI Model)

பலவகை இயக்க மென்பொருள் அமைப்புகளும் (Operating Systems), வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புகளும் (Networking Hardware), நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி விட்ட கணினி உலகில், கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்பு பெறும் முறை, அக் கணினியின் வன்பொருள் அமைப்பு, அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையில்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப் பட்டது.

இந்தப் படிமத்தின் முக்கிய நோக்கங்கள்:

  • ஒரு கணினி சக கணினியுடன் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளையும் (எந்த ஒரு குறிப்பிட்ட வன்பொருளையோ அல்லது மென்பொருளையோ சாராமல்) கண்டறிவது

  • அவற்றை ஏழு தேர்ந்தெடுத்த கட்டங்களில் வகைப் படுத்தித் தொகுப்பது

  • ஏழு கட்டங்களில் எந்த ஒரு கட்டச் செயல்பாடுகளும் சக கணினியிலுள்ள அதற்கு இணையான கட்டத்துடன் தொடர்பு கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நெறிமுறைப் படி தரவுப் பறிமாற்றம் செய்ய அதன் கீழுள்ள கட்டத்தில் சேவைகள், செயல்பாடுகளை அமைப்பது. அவற்றிற்கு திறந்த நியமங்களுடன் இடைமுகங்கள் அமைப்பது

இந்தப் படிமத்திலுள்ள ஏழு கட்டங்களாவன:

  • பயன்முறைக் கட்டம் (Application Layer 7)

  • தரவுக் குறிப்பீட்டுக் கட்டம் (Presentation Layer 6)

  • அமர்வுக் கட்டம் (Session Layer 5)

  • போக்குவரத்துக் கட்டம் (Transport Layer 4)

  • வலையமைப்புக் கட்டம் (Network Layer 3)

    • மடைமாற்றல் (Switching)

    • பாதை தெரிவு செய்தல் (Routing)

  • தரவு இணைப்புக் கட்டம் (Data Link Layer 2)

  • பருநிலைக் கட்டம் (Physical Layer 1)

Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz