கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2024-05-01
10:42 PM

Welcome Guest | RSS Main | ஓசையில்லா விமானம் வடிவமைப்பு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

அமெரிக்க கணினி வலையமைப்பில் ஊடுருவல்: சீனா மறுப்பு!

அமெரிக்க பெண்டகன் பாதுகாப்புத்துறைத் தலைமையகம்
அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில், உள்ள கணினி வலையமைப்புகளில் சீன இராணுவம் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளதாக வெளிவந்த ஊடகத் தகவல்களை சீனா மறுத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகமான பென்டகனில் உள்ள கணினி வலைப் பின்னல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எங்கிருந்து வந்தது என்பதை தாம் துல்லியமாகச் சுட்டிக் காட்டிவிட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று எனவும் இது பனிப் போர் நடைபெற்ற காலத்தில் நிலவிய மனநிலையில் இருந்து வந்த குற்றச்சாட்டு என்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

ஜெர்மனிய அரசின் கணினி வலைப்பின்னலுக்குள் சீன இராணுவம் ஊடுருவியுள்ளது என்று சில ஊடகங்கள் வெளியிட்ட குற்றச்சாட்டையும் கடந்த வாரம் சீனா நிகாகரித்திருந்தது.

Login form
Login:
Password:

Search

Calendar
«  வைகாசி 2024  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz