கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2026-09-11
11:31 PM

Welcome Guest | RSS Main | காதலே ...என் காதலே... | Registration | Login
Site menu

Statistics

Total online: 2
Guests: 2
Users: 0

காதலே ...என் காதலே... 

1. தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ
தாபமாய் தவிக்கறது மனது...

2. நீ சொல்லாமலே இருந்துவிடு
நீ என்னைக்காதலிக்கிறாய் என்ற
நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
நீ சொல்லாமலே இரு....

3. ஆம் அல்லது இல்லை
என்பதை விட-உன்
மெளனம் அழகாய் சொல்கிறது
உன் காதலை.....

4. வானம் நீர் தெளிக்க
காகங்கள் பூபாளமிசைக்க
நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்-
என் கவிதை காட்சியாக்கப்பட்டது....

5. நீ சொல்லாவிட்டாலும்
ஊர் சொல்லும் நம் காதலை....

6. என் கனவுக்குள் நீ
உன் கண்களுக்குள் நான்
நம் நடுவே காதல்
யாருக்கும் புலப்படாமல்-
பூவுக்குள் நுழையும் காற்றுபோல்.....

7. காற்று இசையமைக்க
பறவைகள் பாட்டிசைக்க
மென்தூரலில் நாம் மரமொதுங்க...
வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
நீ காதலைச்சொன்னாய்
உலகம் நிசப்தமானது.......

Login form

Search

Calendar
«  புரட்டாதி 2026  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2026 Create a free website with uCoz