தேவதை பொய்கள்
|
|
எனற்கு நானே சிறைசாலையா? அப்படிதான் சொல்லுகின்றது என் இதயம் உனை கண்ட பின்.. சில கேள்விகளுக்கு மௌனம் பதில் சில கேள்விகளுக்கு கண்ணீர் பதில் என் எல்லா கேள்விகளுக்கும் நீயே பதில்.. எல்லா நாளும் உன் விழி விடியல் கொடு இல்லை ஒரே நாள் உன் விழி மடியல் கொடு.. அழகாய் இருக்க வேண்டியது இல்லை அவளாய் இருந்தால் போதும்! உன் கூந்தல் வழி நிலவு உன் கொலுசொலியில் கலையும் உறக்கம் உன் நககீறல் தழும்பு ஒரு முறையேனும் இறப்பதற்குள்.. இமை மூடியதும் வந்து நிற்கும் நீ.. இமை திறந்ததும் மறைந்து போகும் மாயம் சொல்லி கொடு எனக்கும்.. உனற்கென எழுதியது என நானும் எனற்கென பிடித்தது என நீயும் சொல்கையில் எது பொய்? எது மெய்? விழி பேச்சு வேறாகவும் மொழி பேச்சு வேறாகவும் தேவதையும் பொய்கள் சொல்லும்.. |