கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-26
12:43 PM

Welcome Guest | RSS Main | காதல் சிரிப்புகள் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

காதல் சிரிப்புகள்

காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...?

காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!

காதலன்: அப்புறம்...?

காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!

JJJJJ

ஒருத்தி: காதல் பாதை கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி...!
மற்றவள்: ஏன்...?
ஒருத்தி: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...!

JJJJJ

ஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா...!
மற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா...?
ஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...!
 

JJJJJ

ஒருத்தி: என்னடி லவ் வெட்டர் எழுதி, அட்ரஸ் எழுதாத கவர் ஒன்னு கூட வைத்து அனுப்பி

இருக்கிறாரே...!

மற்றவள்: நான் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடைய தோழி யாருக்காவது அனுப்பச்

சொல்லி இருக்கிறார்.

JJJJJ

காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?

காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

JJJJJ

காதலன்: ராஜி...என்ன இன்னிக்கு சாம்பல் கலரில் சேலை கட்டிக்கொண்டு வந்திருக்கிறாய்...?

காதலி: நான் கர்ப்பமாகி இருக்கேன் என்பதை உங்களுக்கு உணர்த்தத்தான்...

JJJJJ

ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு!


மற்றவன்: ஏன்?


ஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz