நாலுபேர் சொன்னார்கள்...
முன்னொரு காலத்தில் கிரமம் ஒன்றின் வைத்தியர் வேறு ஒரு கிராமத்திற்கு வைத்தியம் பார்ப்பதற்காக சென்றார் அவர் திறமையாக வைத்தியம் செய்து நோயை குணப்படுத்தியதால் நோயாளி அவ்வைத்தியருக்கு ஒரு ஆட்டுக்குட்டியை பரிசாகக் கொடுத்தனுப்பினான். வைத்தியரும் தனக்குக் கிடைத்த அவ்வாட்டுக்குட்டியை தோழில் சுமந்த வாறே தனது ஊருக்குப் பயணமானார். இதை உற்று நோக்கிய நான்கு திருடர்கள் தமக்குள் ஏதோ இரகசிமாகப் பேசிக்கொண்டார்கள். வைத்தியர் செல்லும் பாதையில் மறைந்திருந்தனர். சற்று தூரம சென்ற வைத்தியரை ஒரு திருடன் வழிமறித்து என்ன வைத்தியரே ஒரு நாய்க்குட்டியை காவிக்கொண்டு செல்கின்றீர் உமக்குப் பைத்தியமா என வினாவினான்.
வைத்தியர் இதனை அலட்சியப்படுத்தியவராக தொடர்ந்து நடந்தார். இன்னும் சற்று தூரம் கழிந்திரக்கும் மற்றைய திருடன் வைத்தியரை வழிமறித்தான் அவனும் முதலாம் அவன் கூறியது போலவே கூறினான். வைத்தியருக்கு லேசாக சந்தேகம் ஏற்பட்டது. தனது தோழில் இருந்த ஆட்டுக்குட்டியை இறக்கி விட்டார் அதை நன்கு தடவிப்பார்த்தார். அக்குட்டிக்கு கொம்பு செவிகள் இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியவராய் தொடர்ந்து நடக்கலானார்.
இன்னும் சற்று தூரம் நடந்தாரில்லை மற்றைய திருடன் வைத்தியரை வழிமறித்தான் "என்ன வைத்தியரே ஒரு நாய்க்குட்டியை தோழில் சுமந்து செல்கின்றீரே உமக்குப் பித்துப்பிடித்து விட்டதா என ஏழனச் சிரிப்புடன் கேட்டான். இதைக்கண்ட வைத்தியர் சிந்தித்தார் " ஊரில் உள்ள பலபேர் சொல்வதால் இது உண்மையிலையே ஒரு நாய்க்குட்டியாகத்தான் இருக்கமுடியும். நம் கண்ணில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும் அதனால்த்தான் இது ஆட்டுக்குட்டியாக எனக்குத் தென்படுகின்றது. இனியும் இதை ஏன் சுமக்க வேண்டும்? " என்றவாறே ஆட்டுக்குட்டியை அந்த இடத்தில் இறக்கி விட்டு நடக்கத்தொடங்கினார். உடனே திட்டமிட்டபடி அத் திருடர்கள் நால்வரும் ஆட்டுக்குட்டியைக் கைப்பற்றிக்கொண்டனர்.
இப்படித்தான் பலர் இன்று இந்த வைத்தியரைப்போல் வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். தமக்கென ஒரு மூளை; தமக்கென ஒரு சிந்தனை என்பன இருப்பதை மறந்து பலர் சொல்கின்றார்கள் என்பதற்காக பல விடையங்களை ஒழுங்கமைத்துக்கொள்கின்ற அவல நிலையில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் நாமாக ஒரு விடையத்தைப்பற்றி சிந்திப்பது என்பது வெகுவாகக் குறைந்துவருகின்ற இந்த நிலமையானது நம் சுய சிந்தனா சக்தியினை முற்று முழுதாக இல்லாமல் செய்வதோடு நம்மை மற்றவரில் தங்கி வாழ்கின்ற ஒரு துர்பாக்கிய நிலையினையும் அது ஏற்படுத்திவிடுகின்றது.