கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்
2019-11-18
4:23 PM

Welcome Guest | RSS Main | பிறந்த நாள் ஆண்டு பலன் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

பிறந்த நாள் ஆண்டு பலன்


                                                                      ஜூன் 19,2009,00:00   IST


ஜூன்-19


இந்த தேதியில் பிறந்த தாங்கள் வாழவும், பிறரை வாழ வைக்கவும் பிறந்தவர்கள். வெற்றி ஒன்று தான் தங்களின் இலக்காக இருக்கும். தங்களுக்கு இந்த பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் பல வகையிலும் மாற்றங்கள் ஏற்படும், மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். பழைய திட்டங்களை தங்களின் புதிய அணுகுமுறையால் மிகப் பெரிய வெற்றிக்கு வழிவகுப்பீர்கள். தன்னிச்சையான முடிவுகளை மட்டும் மறுபரிசீலனை செய்து கொள்ளுதல் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை என்றபோதும் சிற்சில நேரங்களில் ஏற்படும் அசவுகரியங்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளுதல் மனக்குறையை அகற்றும். புதிய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தெளிவான வரையறைகளோடு செயல்படுதல் லாபத்தை கூடுதலாக்கும். புதிய வேலை வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். குடும்பத்தில் சந்தோஷம், அமைதி இருக்கும். புதிய நபர்களின் வருகை மகிழ்ச்சி தரும். சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் வெற்றி தரும். செய்தொழில் மற்றும் வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் இருக்கட்டும்.
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19
அதிர்ஷ்ட மாதங்கள்: ஆகஸ்ட், டிசம்பர்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2ஜூன்-20இந்த தேதியில் பிறந்த தாங்கள் வைராக்கிய குணம் கொண்டவர்கள் முயற்சி செய்தால் முடியாத காரியம் எதுவும் இல்லை என்ற கொள்கை கொண்டவர்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்றமும் மாற்றமும் வளர்பிறை தேய்பிறையாகத் தான் இருக்கும். கடந்த காலங்களில் பொருளாதார நிலையில் வளர்ச்சியான நிலையை எட்டி இருந்த போதும், மனதில் இனம் புரியாத குறைகள் இருக்கத் தான் செய்திருக்கும். இருப்பினும் இந்த பிறந்த நாளிலிருந்து ஓராண்டு காலம் எல்லா வகையிலும் சிறப்பானதொரு நிலை இரட்டிப்பான சந்தோஷம் என்று இருக்கும். சொத்துக்களால் வருமானங்கள் கூடுதலாகும். கூட்டு முயற்சிகள், புதிய ஒப்பந்தங்கள் மூலமாக லாபங்கள் கூடுதலாகும். உடல்நலத்திற்காக செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கடன்கள் குறையும் . வீடு, வாகன வகையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இல்லறத் துணையின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பது வீண் சச்சரவுகளை தவிர்க்கும். குழந்தைகளின் முன்னேற்றங்களிலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். இந்த ஆண்டின் சிறப்பாக தெய்வ ஸ்தல யாத்திரைகள் மற்றும் தெய்வ பிரார்த்தனை நிறைவேற்றிக் கொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.
அதிர்ஷ்ட கிழமை: திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 20
அதிர்ஷ்ட மாதங்கள்: ஜூலை, நவம்பர்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7ஜூன்-21இந்த தேதியில் பிறந்த தாங்கள் நல்லதையும் நல்லவர்களையும் நேசிப்பவர்கள். தவறுகள் கண்டு பொங்கி எழும் சுபாவம் கொண்டிருந்த போதிலும், சடுதியில் பொறுமையை ஏற்படுத்திக் கொள்ளும் குணமும் கொண்டவர்கள். கடந்த காலத்தில் தகுந்த முற்சியின் பெயரில் ஒவ்வொரு காரியங்களில் ஈடுபட்டிருப்பீர்கள். இருப்பினும், வெற்றிகள் கூட, அவ்வளவாக திருப்தி தந்திருக்காது. ஆனால், இந்தப் பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம், எடுத்துக் கொண்ட காரியங்களில் எளிதான வெற்றியும் அதிகப்படியான லாபத்தையும் தாங்கள் எதிர்பார்க்கலாம். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.பொருளாதார நிலையில் வரவுகள் வந்தபோதும், உருப்படியாக எதுவும் செய்து கொள்ள முடியாமல் இருந்த சூழ்நிலை மாறி, சிறுயோசனை அதிகப்படியான லாபம் சொத்துக்களின் சேர்க்கை, வங்களில் சேமிப்பு, ஷேர் வர்த்தகங்களில் முதலீடு என தங்களின் நடவடிக்கைகள் விரிவடையும். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு சில ஏற்பாடுகள் மேற்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சியின் பாதையில் செல்லும். உத்தியோகஸ்தர்களுக்கு, இடமாற்றம், பதவி மாற்றம் மகிழ்ச்சி தரும். இந்தாண்டின் சிறப்பாக நீண்ட காலமாக ஆசைப்பட்ட விஷயங்களை ஓசையில்லாமல் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமை: வியாழன்
அதிர்ஷ்ட தேதிகள்: 3, 12, 21
அதிர்ஷ்ட மாதங்கள்: அக்டோபர், ஜனவரி
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3ஜூன்-22இந்த தேதியில் பிறந்த தாங்கள், சாதனையாளர்கள்; சரித்திரம் படைப்பவர்கள். எடுத்துக்கொண்ட திட்டங்களை வெற்றிகரமாக முடிக்கும் வரை உணவு, உறக்கம் போன்றவற்றைப் பொருட்படுத்திக் கொள்ளாது செயல்படும் பக்குவம் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் எல்லா வகையிலும் ஏற்ற-இறக்கமான சூழ்நிலையே காணப்பட்டிருக்கும். திட்டம் தெளிவாக இருந்தபோதும், வெற்றி மட்டும் தாமதப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் தங்களின் தெளிவான சிந்தனைகளாலும், செயல்பாடுகளாலும் திட்டமிட்ட வளர்ச்சியைப் பெறுவீர்கள். தங்களின் புத்திக் கூர்மை மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும். பொருளாதார நிலையில் வரவுகள் கூடும். கடன், வட்டி, வரி மற்றும் வாடகை போன்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ள தீவிர முயற்சி மேற்கொள்வீர்கள். இல்லறத் துணையின் மூலம் வரவுகள் வரும். யோசனைகள் வெற்றி தரும். குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் கவனம் இருக்கட்டும். உடன்பிறப்புகளின் அன்பும், ஆலோசனையும் பெருமை கொள்ளச் செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபங்கள் கூடும். சந்தையில் தனக்கென ஒரு முத்திரையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, இந்தாண்டு பொறுப்புகள் கூடும்; புரிந்து செயல்படுங்கள். இந்தாண்டின் சிறப்பாக தடைப்பட்ட சுப காரியங்கள் நிறைவேறும். சொத்துக்களின் சேர்க்கை ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு
அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19
அதிர்ஷ்ட மாதங்கள்: செப்டம்பர், மார்ச்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4ஜூன்-23இந்த தேதியில் பிறந்த தாங்கள் சுதந்திரமான செயல்பாடுகளை பெரிதும் விரும்புபவர்கள்; நியாயங்களை நேசிப்பவர்கள். அதிகாரமிக்க பொறுப்புகளில் செயல்பட்டபோதும் அன்பாகப் பழகும் பக்குவம் கொண்டவர்கள். தங்களுக்கு கடந்த காலங்களில் பல விஷயங்களைச் செய்ய நினைத்திருப்பீர்கள். எல்லாம் மனதளவிலேயே இருந்திருக்கும். சில காரியங்களில் நிர்ப்பந்தங்கள் காரணமாக விருப்பமற்றுச் செயல்பட்டிருப்பீர்கள். ஆனால், இந்தப் பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் தங்களின் மன விருப்பத்திற்கு ஏற்றவாறு சூழ்நிலைகள் அமையும். மன நிறைவான நிகழ்ச்சிகள் அதிகம் இருக்கும். பொளாதார நிலையில் பெரும்பாலும் பற்றாக்குறை இருக்காது. இல்லறத் துணையின் செயல்பாடுகள் மனதிற்கு ஆறுதல் அளிக்கும். குழந்தைகளின் இயல்புகளுக்குத் தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் எதிர்பார்க்கும் விஷயங்களுக்குச் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி காணப்படும். கூட்டு முயற்சிகள் அல்லது கூட்டு ஒப்பந்தங்களில் மிகுந்த கவனம் இருக்கட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பளு கூடியபோதும் மனநிறைவோடு செய்து முடிப்பீர்கள். இந்தாண்டில் சிறப்பாக தொழில் ரீதியாகவோ அல்லது படிப்பு ரீதியாகவோ வெளிநாட்டுப் பயணம் ஒன்று ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமை: புதன்
அதிர்ஷ்ட தேதிகள்: 5, 14, 23
அதிர்ஷ்ட மாதங்கள்: அக்டோபர், ஏப்ரல்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5ஜூன்-24இந்த தேதியில் பிறந்த தாங்கள் கடுமையாக உழைப்பவர்கள். பிரதி பலனை எதிர் நோக்காது பணியாற்றும் குணம் கொண்டவர்கள். வாழ்க்கையில் போராட்டமா, போராட்டமே வாழ்க்கையா என்று அடிக்கடி கவலைப்பட்டுக் கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். தங்களுக்கு இந்தப் பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் மன நிறைவான விஷயங்கள் அதிகம் உண்டு. எடுத்த காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவீர்கள். செயல்பாட்டுக்குத் தகுந்த வெற்றியும் கிடைக்கப் பெறுவீர்கள். பண நிலையில் தாங்கள் மேற்கொள்ளும் எச்சரிக்கையான நடவடிக்கைகளால் சேமிப்பும், எதிர்பாராத செலவுகளையும் சமாளிக்க ஏதுவானதாக இருக்கும். கடன்களில் பெரும் பகுதிக்குத் தீர்வு காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். தாமதப்பட்ட சுப நிகழ்ச்சிகளை பிறர் போற்றும்படி செய்து முடிப்பீர்கள். பொதுநலப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கவுரவமான பதவிகள் தேடிவரும். பயனுள்ளதாகவும் தங்களுக்கு அது அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கப் பெறும். தெய்வீகத் திருப்பணிகளுக்குத் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி
அதிர்ஷ்ட தேதிகள்: 6, 15, 24
அதிர்ஷ்ட மாதங்கள்: ஜூலை, டிசம்பர்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9ஜூன்-25இந்த தேதியில் பிறந்த தாங்கள் எதிலும் ஒழுக்கம், முறையான நடவடிக்கைகள், தாமதமில்லாத செயல்பாடுகள், காலம் தவறாமை போன்ற நல்ல இயல்புகளைக் கொண்டவர்கள். தங்களுக்கு, இந்தப் பிறந்த நாளிலிருந்து வரும் ஓராண்டு காலம் திட்டமிட்டச் செயல்பாடுகள், வேகமான நடவடிக்கைகள் என்று இருந்த போதும், எல்லா வகையிலும் பலன் தாமதமாகக் கிடைக்கப் பெறுவீர்கள். அதற்காக மனம் வருந்திக் கொள்வதை விட, சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படுதல் நல்லது. பண நிலையில் எதிர்பார்த்த வரவுகள் வரும். வருமானங்களைக் கூட்டிக்கொள்ளச் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். கடன்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். புதிய கடன்கள் கிடைக்கப்பெறும். தொழிலோ, சொத்துக்களிலோ முதலீடுகள் மேற்கொள்ளும்போது வில்லங்க விவகாரங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். புதிய வேலை வாய்ப்புகளுக்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள், முதலில் கிடைக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுதல் புத்திசாலித்தனம். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடுதலாகும். சிற்சில பிரச்னைகள் ஏற்பட்ட போதும் அதைக் கண்டும் காணாதது போல் இருந்து கொள்ளுதல் நல்லது. செய்தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபங்கள் கூடுதலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்றுக் கொள்ள வேண்டிய காலம். அதற்கேற்ற சலுகைகளையும் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமை: திங்கள்
அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 20
அதிர்ஷ்ட மாதங்கள்: நவம்பர், ஜனவரி
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Login form
Login:
Password:

Search

Calendar
«  கார்த்திகை 2019  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2019 Create a free website with uCoz