எடை கூடிய வயோதிபர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகக் காணப்படுவதாக அவுஸ்திரேலிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சாதாரண எடையை விடவும் சற்று எடை கூடியவர்கள் சிறந்த உடலாரோக்கியத்துடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் அதிக எடையுடையவர்கள் அல்லது மிகவும் குறைந்த எடையுடையவர்களது ஆயுள் குறுகியதாக காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
வயோதிபர்களைக் பொருத்தவரையில் கடுமையான உணவுக் கட்டுப்பாடு நன்மை அளிக்காதென மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
70 முதல் 75 வயது வரையிலான வயதுப் பிரிவை உடையவர்கள் தொடர்பில் கடந்த
பத்து வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள்
வெளியிடப்பட்டுள்ளன.
எடை கூடியவர்களுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வயோதிப காலத்தில் உடற் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த பலன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர். |