கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2018-06-24
6:12 AM

Welcome Guest | RSS Main | மனிதம் கொன்று... மனம் தின்று... ஈழம் இன்று...ஓர்...நடைபிணம் ! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

மனிதம் கொன்று... மனம் தின்று... ஈழம் இன்று...ஓர்...நடைபிணம் !
 
குண்டு வீசப்படும் போது முதலில் பிணம் விழுகிறது !
“கவனமாகக் காலை வையுங்கள் கண்ணி வெடிகள் இருக்கலாம் „ !
“பாதங்களைப் பார்த்து வையுங்கள் பிணங்கள் தட்டுப்படலம் „ !
“சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்து விட்டர்கள்„ !
“அரசியல் தீர்வு என்ன என்று பேசுகிறர்கள்„ ஆதனால் தானோ ?

எல்லா ஊருக்கும் எருமையில் வரும் எமண்
ஈழத்த்திற்க்கு மட்டும் ஏரோப்பிளேன் ஏறி வருகிறான் !
ஈழத்தமிழரிடத்தில் ஓட்டியிருப்பது உயிர் கொஞ்சம் தான்
சொல்லிக் கொள்ள வேறு எதுவுமே இல்லை !

ஐ.நா என்றும் இன்னும் வேறு நிறுவன அதிகரிகள்
என்று எல்லாம் வந்திறங்கிறார்கள்
“எங்களை காப்பாத்த சோறு போடுங்க,
எம் பிள்ளைகளைக் குணப்படுத்த கொஞ்சம் மருந்து கொடுங்க என்று
மொழி தெரியாத மனிதரிடம் பிச்சை கேட்டு
பிஞ்சுகளிலிருந்து முதியோர் (ஆண்-பெண்) என இருபாலரும்
கதறி அழும் கோலம் „ !

சகிக்காது,
பாம்புக்கடி, நாய்க்கடி, மலேரியா காய்ச்சல் என
மறைந்தவர்களும் அதிகம் !
பால் வளம் இழந்ததை அறியுமா குழந்தை ?
நமது சொந்தங்களே ! இனி நம் !

உலகில் வறுமைக்க்கு சோமாலியவை சொல்ல வேண்டியதில்லை ?
குழந்தைகளுக்கு விருப்பமானது விமானம் பார்ப்பாது
ஈழத்துக் குழந்தைகளுக்கும் அதுதான் எமண் !
வன்னி மண்ணில் 14 ஆயிரம் டன் குண்டுகளை வீசியது உண்மை !

சிங்களம் “உளவியல் யுத்தம் „ என
உலகிற்க்குப் பொய்யான பரப்புரை !
இந்த மனித மனங்களை மீண்டும் தட்டியெழுப்ப முடியுமா ?
“நம் வீட்டில் சாவு விழுந்தல் அது
அதிகபட்ச்சம் இரண்டு, மூன்று மாதங்கள் மட்டும்
நம் மனச்சிறையில் உட்கார்ந்து கிடக்கும்„ !

அந்த சோகத்தை மெல்ல, மெல்ல மறைந்து விட்டு
நாம் அடுத்த வேலைக்கு தாவி விடுவோம் ஆனால்
நிமிஷத்துக்கு, நிமிஷம், நாள் கணக்கில், மாதக்கணக்கில்
மரணங்கள் நடந்தல் !
அழுவதற்க்கு நம்மிடத்தில் கண்ணீர் இல்லை !

அழுகை என்பது மனதின் தற்காப்பு !
உலகின் கண்களுக்கு எம் மக்களின் அழுகை தெரியவில்லையா ?
அல்லது தெரிந்தும் தெரியாது போல் நடிப்பா ?

சிறி நவரத்தினம்
சுவிஸ்
Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆணி 2018  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz