கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்
2018-06-18
8:05 PM

Welcome Guest | RSS Main | ஈழம் மலரும்...! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஈழம் மலரும்...!
ஈழம் மலரும் - அங்கே
தமிழீழம் மலரும்

காலம் சொல்லும் - அதைக்
காலம் சொல்லும்

கனவு மலரும் - அங்கே
தமிழன் கனவு மலரும்

அழுகுரல் ஓயும் - அங்கே
அன்னையின் அழுகுரல் ஓயும்

சிரிப்பொலி கேட்கும் - அங்கே
சிறார்கள் சிரிப்பொலி கேட்கும்

தாகம் தணியும் - தமிழர்
தாயகத்தாகம் தணியும்

தமிழன் வெல்வான் - அதனால்
தமிழீழம் வெல்லும்

தமிழீழம் வெல்லும் - அதனால்
தமிழ் வெல்லும்

உலகம் வியக்கும் - அந்த
உன்னத வெற்றியை வியக்கும்

கொடிகள் பறக்கும் - அங்கே
சுதந்திரக்கொடிகள் பறக்கும்

மண்ணும் விடியும் - அங்கே
போர் மண்ணெல்லாம் விடியும்

மலர்கள் மலரும் - அது
மண்ணின் மணத்தைச் சொல்லும்

புள்ளினம் சிறகடிக்கும் - அவை
சுதந்திர வெற்றியைக் கூச்சலிடும்

கண்கள் மின்னிடும் - எம்மக்களின்
கன்னக்குழியின் சிரிப்பில்

ஈழம் மலரட்டும் - அங்கே
தமிழீழம் மலரட்டும்..!
- இர.கவியழகன்
Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆணி 2018  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz