கலைமகள் செட்டிகுளம் வவுனியா செவ்வாய்
2017-07-25
5:08 AM

Welcome Guest | RSS Main | அளவுக்கு மீறினால்.... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
அளவுக்கு மீறினால்....

எத்தனையோ வாசகர்கள் இன்டர்நெட் முலம் அனுப்பியிருந்த கடிதங்களைப் படித்தேன். மனரீதியான பிரச்னைகளை தீர்ப்பது நமது கையில், அதாவது சுயகட்டுப்பாடு முலம் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், உடல் ரீதியான பிரச்னைகளை டாக்டர்களிடம் சென்று தான் காண்பிக்க முடியும்.

பொதுவாக இளைஞர்கள் மாஸ்டர் பேஷன் பிரச்னைகளை பற்றி அதிகமாக கேட்டிருந்தார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவோடு இருந்தாலே உடலில் எந்தவித பிரச்னையும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

அதற்காக மாஸ்டர் பேஷனே கூடாது என்பதல்ல. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு அது ஒரு வடிகால் அவ்வளவு தான். அதற்காக எந்நேரமும் அதையே நினைத்து கொண்டிருந்தால், உடலில் பிரச்னைகள் வரத்தான் செய்யும்.

செக்ஸ் வாழ்க்கையில் ஒரு பகுதி. அவ்வளவு தான். அதற்காக செக்ஸே வாழ்க்கையின் முழுமையான பகுதி என்று எண்ணிவிடக் கூடாது. ஒவ்வொருவருக்கென்று ஒரு லட்சியம் உண்டு. படிப்பில் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் என்று பல்வேறு காரணிகள் உண்டு.

எனவே, அதில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் தான் மனதில் எழ வேண்டும். செக்ஸ் உணர்வுகளுக்கு மாணவர்கள், இளைஞர்களைப் பொறுத்தவரையில் குறைந்த பட்சம் தான் மதிப்பளிக்க வேண்டுமே தவிர, இளமையில் உடல்ரீதியாக பண்ணும் தவறுகள், திருமண வாழ்க்கையில் தாம்பத்ய சுகத்தில் பிரதிபலிக்கும்.

எனது வயதுக்கு அதிக வயதுடைய பெண்ணை திருமணம் செய்தால் பிரச்னை வருமா? என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். வயது வித்தியாசம் ஒரு பிரச்னை இல்லை. ஆனால், அதுவே உங்களது மனதில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி, ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்திவிட்டது. மனத்தடுமாற்றம், சஞ்சலத்துடன் நீங்கள் தாம்பத்ய சுகத்தை நாடும் போது எரெக்ஷன் பிரச்னை, திருப்தியில்லையென்றால், வயது வித்தியாசம் தான் காரணம் என்று உங்களது மனம் தீர்மானித்து உங்கள் நிம்மதியை தொலைத்துவிடும்.

நம் வயதை ஒட்டிய பெண்ணை திருமணம் செய்திருந்தால், திருப்தி ஏற்பட்டு இருக்குமே என்று மனம் இல்லாத ஒன்றை கற்பனை செய்து அலைபாய்ந்து கொண்டிருக்கும். ஆனால், செக்ஸ் உறவில் மனைவியின் உடல் அமைப்பு, ஒத்துழைக்கும் பாங்கு, உங்களது செயல்பாடு ஆகியவை தான் திருப்தியை தீர்மானிக்கும். இதில் ஏதாவது ஒன்றில் பிரச்னை இருந்தாலே, நீங்கள் சோர்ந்து போய் தவறான முடிவுக்கு வந்துவிடுவீர்கள்.

 

எனவே, வயது வித்தியாசம் ஒரு காரணம் அல்ல. உங்கள் மனது குரங்கு போல் அங்குமிங்கும் தாவாமல் இருந்தாலே போதுமானது.

பொதுவாகவே, இளமை காலத்தில் ஆணும், பெண்ணும் பண்ணும் செக்ஸ் தவறுகள் நிறையவே உண்டு. திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு, சந்தர்ப்பத்தில் கிடைக்கும் உறவு, காதல், முறை தவறிய உறவு ஆகியவை தற்காலிகமான சந்தோஷங்களாகவும், வேதனை சம்பவங்களாகவும் இருக்கலாம்.

ஆனால், அதையே மனதில் போட்டுக் கொண்டு இருந்தால், தாம்பத்ய வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியாது. நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றி மறந்துவிட வேண்டும். அவற்றை ஒரு விபத்தாக நினைத்து மனநிலையை மாற்ற வேண்டும்.

திருமண வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதற்காக நமது உடல், மனநிலையை ஒருங்கிணைத்து லைப் பார்ட்னரை சந்தோஷபடுத்த முயல வேண்டும். அது தான் வாழ்க்கை.

திருமணம் ஆனவர்கள் கூட தனது மனைவியுடன் தாம்பத்ய சுகம் வைக்க முடியாத நாட்களில் மாஸ்டர் பேஷன் பண்ணுவது தவறு இல்லை. அதற்காக, விலைமாதர்களிம் செல்வது தான் தவறு.

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆடி 2017  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz