கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2018-01-20
5:43 PM

Welcome Guest | RSS Main | தனுசு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

தனுசு 45/100


2008, ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை
கொள்கையில் உறுதிப்பாடு கொண்ட தனுசுராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராகுவும், எட்டாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 4, 12ம் இடத்திலும், கேதுவின் பார்வை ராசிக்கு 6 மற்றும் 10ம் இடத்திலும் பதிகிறது. எனவே, உங்கள் மனஉறுதியை சோதிக்கும் வகையிலான சந்தர்ப்பங்கள் அதிகம் உருவாகும். தவறான வழியில் பணம் சம்பாதிக்க மனதில் எண்ணம் எழும். இப்படி செய்து சட்ட சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாதீர்கள். கவனம். அடுத்தவர்களின் சிரமத்தை சரிசெய்வதில் இருக்கும் ஆர்வம், தன்னை சரி செய்து கொள்வதிலும் இருக்க வேண்டும். சமூகத்தில் ஏற்கனவே பெற்ற நற்பெயர் புதிய முயற்சிகளுக்கு துணைநின்று உதவும். வீடு, வாகன வகையில் புதிய மாற்றங்களை செய்ய இயலாது. இருக்கும் நிலையை தற்காத்துக்கொண்டாலே பெரிய விஷயம் தான். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திரர்கள் உங்களது வருமானம் அறிந்து உதவிகரமாக நடந்து கொள்வர். பூர்வசொத்தில் வருமானம் பெறுபவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. விஷப்பிராணிகளால் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. அவற்றைக் கண்டால் விலகிச் செல்லவும். அதுபோல், ஆபத்தான செயல்களிலும் ஈடுபடக்கூடாது. கடன்பற்றிய சிந்தனை வருத்தம் தரலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், விட்டுக்கொடுக்கும் மனதுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு செய்வதால், குடும்ப நிலைமை சீராக இருக்கும். மாமனார் வழியிலும் நல்ல பெயர் வாங்க இயலாது. உங்கள் நடவடிக்கைகளில் பொறுமை காத்தால் மட்டுமே இருக்கிற நிலையையாவது தக்க வைக்கலாம். உடல்நலத்திலும் பிரச்னைகள் ஏற்படும். மருத்துவச்செலவு கூடும். நண்பர்களிடமும் கருத்து வேறுபாடு உண்டாகும் சூழ்நிலைகள் அதிகரிக்கும். உங்களிடம் பணம் பிடுங்கும் பணியை கருத்துடன் செய்ய அவர்கள் முன்வருவர். எச்சரிக்கை தேவை. தந்தைவழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகி நல்அன்பு வளரும். தொழில்சார்ந்த வகையில் நம்பிக்கை நிறைந்த மனதும் கூடுதல் உழைப்பும் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும். கடன்களை வசூலிப்பதில் இதம்பதமாக செயல்பட வேண்டும். வெளியூர் பயணம் மேற்கொள்வதால் நஷ்டமே ஏற்படும். பயன் கிடைக்கும் என்றால் மட்டும் சென்று வரலாம். கண்கள் தொடர்பான பிரச்னை ஏற்படலாம். தகுந்த முறையில் பாதுகாப்பது அவசியம். நன்னடத்தை இல்லாதவர்கள், உறவினராயினும் அவர்களுக்கு அடைக்கலம் தந்தால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். தொழிலதிபர்கள்: டெக்ஸ் டைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், நட்சத்திர ஓட்டல், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், இன்ஜினியரிங் கல்லூரி நடத்துபவர்கள், நிதி நிறுவனம், காகிதம், பெயிண்ட், இசைக்கருவிகள், கம்ப்யூட்டர், மொபைல், பொம்மை தயாரிப்பாளர்கள் பொருட்களை சந்தைப்படுத்த மிகவும் சிரமப்படுவர். கடன் பெறும் நிலைமை ஏற்படும். மற்ற தொழில் செய்வோர் ஓரளவு பரவாயில்லை என்ற நிலையில் இருப்பர். புத்திரர்களின் உதவியால் தொழிலைத் தக்க வைக்கும் நடவடிக்கையில் ஓரளவு வெற்றி பெறலாம். நம்பகத்தன்மை இல்லாதவர்களுக்கு கடனுக்கு பொருட்களைக் கொடுத்து நஷ்டப்பட நேரிடும். கவனம். பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் முழு கவனத்துடன் செயல்படுவதால் மட்டுமே நற்பெயர் பெற இயலும். சக பணியாளர்களின் விவகாரங்களில் ஆலோசனை சொல்வதை தவிர்க்க வேண்டும். அலுவலகப்பணியில் அளவுக்கு அதிகமான பணத்தை வைத்துக் கொள்வதும், பிறர் பணத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பதும் புகார் மற்றும் சட்டசிக்கலில் மாட்டும் நிலையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக கேஷியர் பணியில் உள்ளவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். சம்பள உயர்வுக்கு வழி மிகவும் குறைவே. மேலும் பணிமாற்றம், இடமாற்றம் போன்ற சிரமங்களும் மனதைக் கஷ்டப்படுத்தும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, கட்டுமானப் பொருட்கள், காகிதம், ஸ்டேஷனரி, அளவிடும் கருவிகள், பலசரக்கு, தானியம், பர்னிச்சர், தலையணை, மெத்தை, எண்ணெய், பழ வியாபாரம் செய்பவர்கள் பெரிய லாபம் எதிர்பார்க்க முடியாது. மற்றவர்கள் இனிய பேச்சும், யுக்திகளை சூழ்நிலைக்கேற்ப மாற்றுவதன் மூலமுமே லாபத்தை பெற முடியும். வணிக சட்டங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். வேலையாட்களிடம் இதம்பதமாக நடந்து கொள்ளவும். சரக்குவாகன பராமரிப்பு, பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம். இவை தொடர்பான செலவும் கூடும்.


பெண்கள்: பணிபுரியும் பெண்கள் பணியின் பொறுப்பு உணர்ந்து கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலைப்பளு கடுமையாக அழுத்தும். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால், சுமூக நட்புறவு பேணி நன்மை அடையலாம். குடும்ப பெண்கள் கணவரின் வருமானம் மற்றும் மனநிலைக்கேற்ப நடந்து கொண்டு கருத்து வேறுபாட்டை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். உறவினர்களிடம் தேவையற்ற விஷயங்களை பேசக்கூடாது. சுயதொழில், வியாபாரம் செய்யும் பெண்கள் மிக கடுமையாகப் பாடுபட்டாலும் ஓரளவு லாபமே பெற முடியும். பிறருக்காக பண விஷயத்தில் பொறுப்பேற்கக்கூடாது.


மாணவர்கள்: சட்டம், இதழியல், ஜோதிடம், இலக்கியம், பவுதிகம், ரசாயனம், கம்ப்யூட்டர், ஆடிட்டிங், சிற்பக்கலை, தொல்பொருள் ஆராய்ச்சி, ஏரோநாட்டிக்கல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் படிப்பில் பின்தங்க நேரிடும் என்பதால், கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதால் மட்டுமே குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும். புதிய நண்பர்களை தேர்வு செய்வதில் கவனம் வேண்டும்.


அரசியல்வாதிகள்: சமூகத்தில் இருக்கும் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் செயல்படுவதால் வளர்ச்சி ஏற்படும். கேது உங்கள் ஆசையை தூண்டிவிட்டு, புதிய பதவியை தருவதற்காக பெரும் பணத்தை இழக்க வைப்பார். ஆதரவாளர்களின் பலம் எப்போதும் போல் இருக்கும். எதிரிகளிடம் வாக்குவாதம் வராத அளவிற்கு செயல்பட வேண்டும். கெட்ட வழக்கங்களுக்கு ஆளாக நேரிட்டு, குடும்பத்தில் பிரச்னைகள் கூடுதலாகும். அரசு அதிகாரிகளின் மனமறிந்து செயல்பட்டு காரியம் சாதிப்பீர்கள். அரசியலுடன் தொழில், வியாபாரம் நடத்துபவர்களுக்கு இப்போது இருக்கும் நிலையை தக்க வைக்கவே பெரும்பாடாக இருக்கும்.


விவசாயிகள்: பயிர் வளர்ப்பிலும், பாதுகாப்பிலும் முக்கிய கவனம் வேண்டும். விளைச்சல் வழக்கம் போல கிடைக்கும். கால்நடை அபிவிருத்திக்காக அதிக பணம் செலவிட வேண்டி வரும்.


பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  தை 2018  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz