கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2017-12-16
0:21 AM

Welcome Guest | RSS Main | கன்னி | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கன்னி 65/100


2008 ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரைபிறரை தன்வசம் ஈர்க்கும் பேச்சுத்திறனுள்ள கன்னிராசி அன்பர்களே!உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகுவும், பதினொன்றாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 3, 7ம் இடத்திலும், கேதுவின் பார்வை ராசி மற்றும் ராசிக்கு 9ம் இடத்திலும் பதிகிறது. ராகு மத்திம பலனையும், கேது அதிக வளம் தரும் பலனையும் தர உள்ளனர். அதே நேரம், ஏழரைச்சனியின் துவக்க காலத்தை அனுபவித்து வருவதால் பலன்களின் அளவு அவரவர் புண்ணிய பலன்களை பொறுத்தே அமையும். ஓரிடத்தில் சண்டை நடக்கும் போதோ அல்லது உங்கள் பணி, குடும்பம் சார்ந்த விஷயத்திலோ நியாயத்தையே பேசினாலும் கூட உங்கள் பக்கமே தவறு இருப்பதாக தீர்ப்பு சொல்லப்படும். எனவே, பிறர் விஷயத்தில் தலையிடுவதையோ, உங்கள் பக்கம் நியாயமே இருந்தாலும், கடவுளிடம் பொறுப்பை விட்டுவிடுவதும் பலனளிக்கும். மனதில் நல்ல எண்ணங்கள் வளரும். அறிஞர்களை சந்திக்கும் வாய்ப்பு மிக அதிகமாக உண்டு.

சகோதர்களுடன் கருத்து வேறுபாடு வளராத அளவிற்கு நடந்துகொள்வது நலம். வீடு, வாகன வகையில் இருக்கும் நல்ல சூழ்நிலையை நயமுடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவினர் நல் அன்பு பாராட்டுவர். புத்திரவகையில் அனுகூல பலன் பெற தாமதநிலை இருக்கும். புத்திரரின் செயல்களை அறிந்து நல்வழி நடத்துவதால் நலம் பல பெறுவீர்கள். எதிரிகளால் இருந்த தொந்தரவு குறையும். உணவு பழக்கத்தை சீராக அமைத்துக் கொள்வதால் உடல் நலம் ஆரோக்கியமாகும். கணவன், மனைவி ஒற்றுமை பலம் பெற விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்படுவது நல்லது. புதியவர்களை நண்பராக தேர்வு செய்வதில் தகுந்த கவனம் வேண்டும். வாகன போக்குவரத்தில் மிதவேகத் தன்மை கடைபிடிப்பது அவசியம். இருக்கிற வசதி பெருகாது. எனவே சுகமான வாழ்க்கை கிடைக்கவில்லையே என வருந்த வேண்டாம். நேரம் அப்படி இருக்கிறது. மற்றபடி, தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சியும் பணவரவும் ஓரளவு அதிகரிக்கும். தெய்வீக பிரார்த்தனையை இனிய சூழ்நிலையில் நிறைவேற்றுவீர்கள். எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற இயன்ற அளவு சேமிப்பீர்கள். வெளியூர் தொடர்பு தாமத பலனை தரும்.

தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், பர்னிச்சர், காகிதம், இரும்பு சார்ந்த தொழில் நடத்துவோர் தங்களின் நீண்டகால கனவு திட்டத்தை செயல்படுத்தி தொழில் வளர்ச்சி பெறுவர். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஓரளவே தொழில் வளர்ச்சி இருக்கும். புதிய கிளைகள் துவங்கும் வாய்ப்பு பல முட்டுக்கட்டைகளின் பேரில் நிறைவேறும். சற்று விரயமும் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்கு பெண்களின் உதவியும், பெண் தெய்வ அருளும் துணை நிற்கும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். புதிய பொறுப்பும், குடும்ப வளர்ச்சிக்கான கடனும் எளிதாக கிடைக்கும். அலுவலக பொருட்களை உரிய அனுமதியின்றி சுய தேவைக்கு பயன்படுத்துவதன் மூலம் பிரச்னைகளை சந்திக்க நேரிடும், கவனம். அறிமுகம் இல்லாத எவரிடமும் அதிக நட்பு பாராட்டக்கூடாது. குடும்ப உறவினர்கள் சில பொறுப்புகளை தருவர்.

வியாபாரிகள்: ஸ்டேஷனரி, மருந்து, ரசாயன பொருட்கள், சாயப்பொடிகள், காகித அலங்கார பொருட்கள், பொம்மை, சுதை சிற்பங்கள், ரத்தின கல் பதித்த நகை, தானியம், பலசரக்கு, பர்னிச்சர் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து தொழில் வளமும் அதிக பணவரவும் பெறுவர். புதிய கிளைகளையும் திட்டமிட்ட வகையில் துவங்கலாம். மற்ற வியாபாரிகளுக்கு நிலைமை சுமாராகவே உள்ளது. உறவினர்கள் சிலர் இக்கட்டான சமயங்களில் பணம் கொடுத்து உதவுவர். தவறான பழக்கம் உள்ள நபர்களிடம் நட்பு பாராட்டும் நிலையை கேது உருவாக்குவார். இதனால், வியாபாரத்தில் நாட்டம் குறையும். மிக கவனமாக நடந்து கொள்ளுங்கள். கடன்கள்
வசூலாகும் என்றாலும் அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும்.

பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் உற்சாகமாக செயல்பட்டு பணியில் சிறப்பான நிலை பெறுவர். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நற்பலன் ஏற்படும். குடும்ப பெண்கள் உறவினர்களிடம் கூடுதல் மரியாதை பெறுவர். பணவசதி அதிகரிப்பதால் வீடு, வாகனம் வாங்கும் திட்டம் நிறைவேறும். உடல்நலம் நன்றாக இருக்கும். கர்ப்பிணி பெண்கள், தங்கள் செயல்களில் நிதானமான நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். சுயதொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் தொழில் சிறக்க பாடுபடுவர். வருமானம் அதிகரிக்கும். தொழில் போட்டி பொறாமை குறையும். ஆபரண சேர்க்கை உண்டு. கன்னிராசி பெண்களை ராகு-கேது அதிகம் படுத்தமாட்டார்கள்.

மாணவர்கள்: வணிகவியல், தணிக்கையியல், ஜோதிடம், சாஸ்திரம், இலக்கியம், சட்டம், நரம்பியல் மருத்துவம், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர், இதழியல், ஆசிரியர் பயிற்சி, தொல் பொருள், வான்வெளி, கடல்சார் பயிற்சி மாணவர்கள் உற்சாகமாக படித்து கூடுதல் தரதேர்ச்சி பெறுவர். மற்ற துறையில் உள்ளவர்கள் ஓரளவே தேர்ச்சியைப் பெற முடியும். கிரகங்களுக்கெல்லாம் கடும் உழைப்பு பிடிக்கும் என்பதால், இக்காலத்தை அனுபவ காலமாக எடுத்து கடுமையாக உழைப்பவர்கள் நல்ல மார்க் பெறுவர். படிப்புக்குரிய பணத்தட்டுப்பாட்டால் சிரமங்கள் வரும். சக மாணவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பெற்றோரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வி சுற்றுலா பயணம் இனிய அனுபவம் தரும்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் பெற்ற நற்பெயரைக் கொண்டு புதிய செயல்களில் வெற்றி பெறுவீர்கள். ஆதரவாளர்கள் கூடுதல் நம்பிக்கை கொள்வர். புதியபதவிப்பொறுப்பு விரும்பிய வகையில் கிடைக்கும். உங்கள் சமூக அந்தஸ்தை கண்டு எதிரிகள் வியப்படைவர். புத்திரர்களை அரசியலில் ஈடுபட அனுமதித்தால், உங்கள் பெயரைக் கெடுத்து விடுவார்கள். கவனம். அரசியலுடன் தொழில், வியாபாரம் நடத்துபவர்கள் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைத்து தொழில் வளர்ச்சியும் கூடுதல் பணவரவும் பெறுவர்.

விவசாயிகள்: விவசாயத்திற்கு தேவையான வசதி சீராக கிடைக்கும். பயிர் விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை அபிவிருத்தியால் கூடுதல் பணவரவு கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்களில் இதம்பதமாக செயல்படுவது நல்லது.

பரிகாரம்: தன்வந்திரி பகவானை வழிபடுவதால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  மார்கழி 2017  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz