கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-03-28
8:51 PM

Welcome Guest | RSS Main | கும்பம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழ் மாத ராசி பலன்


ஆனி மாதம்

கும்பம்

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3



சிரமமான சூழ்நிலையிலும் மனதிடத்துடன் செயல்படும் கும்பராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன் உள்ளார். செவ்வாய் ஆட்சி பெற்ற நிலையில் அனுகூல இடத்தில் பிரவேசிக்கிறார். குடும்ப வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.



இடையூறுகள் விலகி நல்ல விஷயங்களாக நடக்கும். மனதில் அமைதி நிலவும். நல்ல எண்ணங்கள் உருவாகும். பணவரவு சுமாராக இருக்கும். சில முக்கிய செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டி வரலாம்.



வீடு, வாகன வகையில் பெரிய அளவுக்கு பராமரிப்பு பணிகளைத் துவங்குவது செலவை அதிகப்படுத்தும். இருப்பதைப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். தாய்வழி உறவினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர்.


புத்திரர்களின் கவனக்குறைவான நடவடிக்கையால் சில சிரமங்களைச் சந்திக்க நேரிடும். உடல்நலம் பாதிக்கப் பட வாய்ப்புண்டு. தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கி நல்அன்பு வளரும். தொழிலதிபர்கள் உற்சாக


செயலால் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிலுவைப் பணியை நிறைவேற்றி மனதில் நிம்மதி பெறுவர். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெற ஆர்வமுடன் செயல்படுவர். வியாபார வளர்ச்சியும் பணவரவும் சீராகும். குடும்பப் பெண்களுக்கு வீட்டு வேலைகள் செய்வதில் உடல் நிலை தொடர் பான இடைஞ்சல் ஏற்படும். வீட்டுச்செலவுக்கு பணம் தேறி விடும்.


சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உழைப்பால் வியாபார இலக்கை அடைவர். அரசியல்வாதிகள் நிதான நடைமுறைகளை பின்பற்றி இருக்கும் நற்பெயரை தற்காத்துக் கொள்வர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூலும் பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர்.

உஷார் நாள்: 28.6.09 இரவு 10.12 முதல் 1.7.09 அதிகாலை 3.46 மணி வரை


வெற்றிநாள்: ஜூன் 22, 23, 24


நிறம்: பச்சை, சிவப்பு


எண்: 5, 9


பரிகாரம்: வெங்கடாசலபதியை வழிபடுவதால் கடன், நோய் தொந்தரவு குறையும்.


Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2024  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz