கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2018-05-23
1:38 AM

Welcome Guest | RSS Main | கன்னி | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழ் மாத ராசி பலன்

ஆனி மாதம்

கன்னி


உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2


சிறந்த செயல்பாட்டால் பிறரை ஈர்க்கும் கன்னிராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன் புதனுடன் உள்ளார். இந்த மாதம் புத ஆதித்ய யோகம், தீபஸ்தம்ப யோகம் ஆகிய நற்பலன் களை பெற இருக்கிறீர்கள். உங்களின் செயல் சிறிதாக இருப்பினும் பெரும் லாபத்தை அடைவீர்கள். நடைமுறை வாழ்வுக்கு தேவையான பணவசதி தடங்கல் இன்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர். சமூகப் பணியிலும் ஈடுபாடு வளரும்.


வீடு, வாகனத் தில் நம்பகத் தன்மை உள்ளவர்களுக்கு மட்டுமே இடம் தருவது நல்லது. புத்திரர்களின் படிப்பு சிறப்பாக இருக்கும். அவர்களது தேவைகளை முழுமனதுடன் நிறைவேற்றுமளவு பணவசதி கிடைக்கும். சம்பாதிப்பதில் கவனம் அதிகமாகும். கடன்களை ஓரளவு சரிசெய்வீர்கள். உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். நண்பர்களின் கருத்துக்குரிய மதிப்பு கொடுப்பதால் மட்டுமே நட்புக்கு குறை வராத நன்னிலை திகழும். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப வளர்ச்சித் திட்டங்களை இணைந்து நிறைவேற்றுவீர்கள்.

தொழிலதிபர்கள் உற்பத்தி பெருக்கமும் ஆதாய பணவரவும் கிடைக்கப்பெறுவர். பணியாளர்கள் ஆர்வமுடன் செயல்புரிந்து பணி இலக்கை பூர்த்திசெய்வர். எதிர்பார்த்த சலுகை எளிதாக கிடைக்கும்.


வியாபாரிகள் சந்தையில் கூடுதல் வரவேற்பும் ஆதாய பணவரவும் பெறுவர். குடும்பப்பெண்கள் கணவரின் அன்பும் வளமான பணவசதியும் கிடைத்து மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் சுமூக சூழ்நிலை அமையப் பெற்று இலக்குகளை சிறப்புற நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் தொழிலில் அபிவிருத்தி பெறுவர்.


அரசியல்வாதிகள் பதவி, பொறுப்புகளை பெறுகிற முயற்சியில் வெற்றி காண்பர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டு.


உஷார்நாள்: 18.6.09 காலை 5.44 முதல் 20.6.09 பகல் 10.30 மணி வரை மற்றும் 15.7.09 மதியம் 1.32 முதல் 16.7.09 இரவு 11.30 மணி வரை.


வெற்றி நாள்: ஜூலை 8, 9, 10


நிறம்: நீலம், சிவப்பு


எண்: 1, 3


பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும்.


Login form
Login:
Password:

Search

Calendar
«  வைகாசி 2018  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz