கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2018-01-20
5:29 AM

Welcome Guest | RSS Main | கடகம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

குருபெயர்ச்சி பலன்கள்

கடகம்

(90/100) + வசதியான வாழ்க்கை, - வீண்பழிக்கு ஆளாகுதல்


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்


கருணை நிறைந்த மனதுடன் பிறருக்கு உதவும் கடகராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். இது மிகவும் அனுகூலம் நிறைந்த பலன்களை தரும். கடந்த காலங்களில் இருந்த பல்வேறு சிரமங்கள் விலகிப்போகும். மகரத்தில் உள்ள குரு தனது 5, 7, 9ம் பார்வையால் ராசிக்கு 11, ராசி, ராசிக்கு 3 ஆகிய இடங்களை பார்க்கிறார். மனதில் உற்சாகம் பிறக்கும். புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். நடைமுறைப்படுத்தும் செயல்கள் அனைத்தும் பூரண வெற்றிபெறும். எல்லாமே சாதகமான போக்காக இருக்கும். பணவரவில் இருந்த தாமத நிலை மாறி தாராள பணவரவை பெறுவீர்கள். பிறருக்கு மனமுவந்து உதவும் மனப்பாங்கு பெறுவீர்கள். சமூகத்தில் உயரிய அந்தஸ்தும் பதவி பொறுப்பும் கிடைக்கும். இதற்கு குருவின் பார்வை உற்ற துணையாக உள்ளது. இளைய சகோதரர்கள் தமது தகுதி, திறமையை வளர்த்து வாழ்வில் முன்னேறி உங்களுக்கு பெருமை தேடித்தருவர். வீடு, வாகனம் சார்ந்த வகையில் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் பெறுகிற அனுகூலத்தன்மை பலமாக உள்ளது.


தாயின் அன்பும் ஆசியும் நிறைவாக கிடைக்கும். தாயின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வீர்கள். புத்திரர்கள் ஊக்கத்துடன் செயல்புரிந்து தங்களின் கல்வித்திறமையை வெளிப்படுத்துவர். குலதெய்வ அருள் பரிபூரணமாக துணை நிற்கும். பூர்வ சொத்தில் கூடுதல் வருமானமும், புதிய சொத்து வாங்குவதுமான சுபபலன் நடக்கும். உடல்நிலையில் மே, ஜூன், ஜூலையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு மருத்துவச் செலவு வரும். உங்களது எதிரிகள் கூட மறைமுகமாக உங்களது உதவியைக் கேட்கின்ற நிலை உருவாகும். தொல்லை தந்த கடன்களை அடைத்து விடுவீர்கள்.


கணவன், மனைவி ஒற்றுமை சிறந்து உறவினர், நண்பர்களின் பாராட்டைப் பெறும். தகுதி, திறமை நிறைந்த புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு சுபமங்கல நிகழ்வு கைகூடும். ஆபத்து எதுவும் அணுகாது. சுக சவுகர்ய வாழ்க்கை அமைந்து கூடுதல் மகிழ்ச்சி பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு மகிழ்வதும், உதவி புரிவதுமான நன்னிலை ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் அபரிமிதமான வளர்ச்சியும் லாபமும் உண்டாகும். எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற உரிய சேமிப்பையும் உருவாக்குவீர்கள். இந்த குருபெயர்ச்சி சகல வளங்களையும் உங்களுக்கு தரும். இருப்பினும், சில வீண்பழிகளை சந்திக்க வேண்டி வரும்.


தொழிலதிபர்கள்: மீன், இறைச்சி ஏற்றுமதியாளர்கள், லாட்ஜ் நடத்துவோர், மீன்பிடி படகு, வலைகள் தயாரிப்பு, ரியல் எஸ்டேட் தொழில், மலைத்தோட்ட பயிர்கள், உணவுப்பொருட்கள், மருத்துவ உபகரணம், மருந்துப்பொருட்கள், இரும்பு, பர்னிச்சர், கம்ப்யூட்டர், செல்போன், விவசாய இடுபொருட்கள், டெக்ஸ்டைல்ஸ் அதிபர்கள், தொழில்வளம் சிறந்து ஆதாய பணவரவை நிறைவாகப் பெறுவர். புதிய கிளை துவங்கும் முயற்சி இனிதாக நிறைவேறும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகும். வாகனம் வாங்குவீர்கள். சேமிப்பும் கூடும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மினரல் வாட்டர், குளிர்பானம், ஜெனரேட்டர், சமையல் எண்ணெய், உணவு தானியங்கள், மூலிகை மருந்து, பெயின்ட், தோல், ரப்பர் பொருட்கள், பாத்திரம், நறுமணப் பொருட்கள், பட்டாசு, மீன், பர்னிச்சர், பால்பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக விற்பனையும் அபரிமிதமான பணவரவும் பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களையும் விட லாபம் கூடுதலாகும். சரக்கு கொள்முதல் அதிகரிப்பும், புதிய வாடிக்கையாளர்கள் விரும்பி வந்து பொருள் வாங்குவதுமான அனுகூலத்தன்மை பெறுவீர்கள். திட்டமிட்ட வகையில் சரக்கு வாகனம் வாங்குவீர்கள்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உத்வேகத்துடன் செயல்புரிந்து பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். உயர் அதிகாரிகளிடம் நற்பெயரும், வெகுநாள் எதிர்பார்த்த பணி உயர்வு, சலுகை போன்றவற்றையும் பெறுவர். குறிப்பாக உணவுப்பொருள் தயாரிப்பு, ஆஸ்பத்திரி, விவசாயம், இயந்திரங்களை இயக்குதல், மின்சாரம் சார்ந்த பணியாளர்கள் மிக அதிக சலுகைகளைப் பெற வாய்ப்புண்டு. சிலருக்கு விருது, பரிசுகள் கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். சிலர் கூடுதல் பயிற்சி பெற வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். முக்கிய பணி பொறுப்புகளை ஏற்பர்.


பெண்கள்: அரசு, மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். விரும்பிய பணியிட மாற்றம், பதவி உயர்வு பெறுவீர்கள். குடும்ப பெண்கள் கணவரின் எண்ணங்களுக் கேற்ப நடந்து குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிவர். தாராள பணவரவு இருக்கும் என்பதால், மகன், மகள், சகோதரிகளின் மங்கல நிகழ்ச்சிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். ஆபரண சேர்க்கை திருப்திகரமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணியை சிறப்பாக நிறைவேற்றுவர். தொழில் வளம் சிறந்து லாபவிகிதம் அதிகரிக்கும்.


மாணவர்கள்: கம்ப்யூட்டர், மருத்துவம், கேட்டரிங், ஏரோநாட்டிக்கல், சிவில் இன்ஜினியரிங், மருத்துவம், லேப் டெக்னீஷியன், மரைன் டெக்னாலஜி, ஜோதிடம், வானவியல், வெல்டிங், டர்னர், ஓவியம், பியூட்டீஷியன், ஏர்கண்டிஷன் மெக்கானிசம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் நன்கு படித்து தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களையும் விட சிறப்பாகப் படித்து மாநில, பல்கலை., ராங்க் பெறும் வாய்ப்புண்டு. பயிற்சியை நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்களுக்கு கவுரவமான வகையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


அரசியல்வாதிகள்: ஆதரவாளர்கள் விசுவாசத்துடன் நடந்துகொள்வர். புதிய பதவி பொறுப்பு கிடைக்கும். எதிரிகள் உங்கள் வளர்ச்சியை அறிந்து விலகிச் சென்று விடுவார்கள். புத்திரர்கள் உங்கள் அரசியல் பலத்தை தக்கவைக்க உறுதுணையாக செயல்படுவர்.


விவசாயிகள்: அதிக மகசூல் கிடைக்கும். சந்தையில் கட்டுப்படியான விலை கிடைத்து ஆதாய பணவரவு பெறுவீர்கள். கால்நடை அபிவிருத்தியும் அதனால் திருப்திகரமான பணவரவும் கிடைக்கும். புதிய நிலம் வாங்கலாம்.


நீங்கள் செய்ய வேண்டியது: திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை வணங்கி கிடைக்கும் பலனின் அளவை மலை போல் உயர்த்திக் கொள்ளுங்கள். கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யுங்கள்.


காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி


ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது


வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது


நாதன் நாமம் நமச்சிவாயவே.

Login form
Login:
Password:

Search

Calendar
«  தை 2018  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz