கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2017-10-21
6:29 PM

Welcome Guest | RSS Main | மீனம்.. | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மீனம்


வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரிந்த மீன ராசி அன்பர்களே!உங்க ராசிக்கு ஆறாம் இடமான சிம்மராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறாரு. தனது 3, 7, 10ங்கிற பார்வையாலே ராசிக்கு 8, 12, 3ங்கிற இடங்களை பார்க்கிறாரு. கடந்த காலங்களிலே மனசிலே பல தயக்க சிந்தனைகள் இருந்திருக்குமே! அந்த தயக்கத்தை உதறிடுவீங்க. சாதிக்கணுங்கிற எண்ணம் வளருமுங்க.


யாரிடம் எப்படி பேசினா காரியம் சாதிக்க முடியுங்கிற யுக்தியை கடைபிடித்து முன்னேறிடுவீங்க. பணவரவு அதிகரிக்க பலவிதமான வாய்ப்பு வருமுங்க. தம்பிகளோட நடவடிக்கைகள் தள்ளாடுற மாதிரி இருக்குமுங்க. நல்லபடியா சொல்லி திருத்தப்பாருங்க. சமூகப்பணிகளாலே நல்லபெயர் வாங்குறதுக்கு பதிலா கெட்ட பெயர் தாங்க வரும். சூழ்நிலை அறிஞ்சு நடந்துக் கிட்டா நல்லதுங்க.


வீடு, மனை, வாகன வகையிலே வளர்ச்சிதாங்க. தாய்வழி உறவுக்காரங்க பாசத்தோட நடந்துக்குவாங்க. பூர்வ சொத்திலே இருக்கிற விவகாரமெல்லாம் நீங்கி அனுகூல பலன் கிடைக்குமுங்க. புத்திரர்களோட ஆரோக்கியம் பாதிச்சு தேறிடுமுங்க. அதே நேரம், படிப்பிலே படுசுட்டியா இருப் பாங்க. குடும்பத் திலே கல்யாணம் காட்சின்னு சந்தோஷமான நிகழ்ச்சிகளெல்லாம் நடக்குமுங்க. எதிரிகள் உங்க வளர்ச்சியைப் பார்த்து ஒதுங்கிப் போயிடுவாங்க. கடன், நோய் தொந் தரவு படிப்படியா குறைஞ்சிடுமுங்க.


கணவன், மனைவி ஒற்றுமையா சந்தோஷமா இருப்பாங்க. நண்பர்களும் உங்க ஆலோசனையைக் கேட்டு முன்னேறுவாங்க. தந்தைவழி உறவுக்காரங்களோட உதவி கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரத்திலே இருந்த குறுக்கீடெல்லாம் மறைஞ்சு நல்ல நிலைக்கு வருவீங்க. ஆதாய பணவரவு சுலபமா கிடைக்கிற வழியிருக்கு. சேமிப்பு, முதலீடுன்னு சந்தோஷமா இருக்கப் போகிற நேரம் வந்தாச்சு.


வெளிநாடு வேலைக்கு போகிறவங்க இருக்கிற சொத்தை வித்துட்டு போகணுங்கிற அவசியம் வந்தா அது நல்லது இல்லீங்க.


தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், சிமென்ட் ஆலை, கண் ஆஸ்பத்திரி, எலக்ட்ரானிக்ஸ், தண்ணீர் சார்ந்தபொருள், எண்ணெய், காகிதம், வாசனைத் திரவியம், மாவு உற்பத்தி செய்றவங்க அதிக வளர்ச்சி, பணவரவுன்னு ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க. மத்தவங்க நஷ்டத்திலே இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியடைவாங்க. புதிய வாகனம் வாங்குவீங்க. அனுசரணையாக பணிபுரியுற வேலைக்காரங்க கிடைப்பாங்க. புதிய கிளை துவங்குற வாய்ப்பு நிறையவே இருக்குதுங்க.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையிலே இருக்கிறவங்க குறுக்கீடு இல்லாம வேலை செஞ்சு பணி இலக்கை எளிதா பூர்த்தி செய்வீங்க. சக பணியாளர் ஒத்துழைப்பு தருவாங்க. பள்ளி, கல்லூரி பணியாளர், ஆஸ்பத்திரி, மார்க்கெட்டிங் பணியிலே இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் முன்னேற்றமான காலம். பொதுவா, எல்லாத்துறையிலே இருக்கிறவங்களும், திருப்தியான பணவரவு, சலுகைன்னு சந்தோஷமா இருப்பாங்க. வருமானம் அதிகரிக்கிற வாய்ப்பு இருக்கிறதாலே, சில பழக்க வழக்கங்கள் தொற்றிக்கிட வாய்ப்பிருக்குங்க. புரிஞ்சு நடந்துகிட்டா நல்லதுங்க.


வியாபாரிகள்: ரெடிமேட், கட்டுமானப் பொருள், விவசாய இடுபொருட்கள், மளிகை, வாகன உதிரிபாகங்கள், அடகுக்கடை, அடுக்குமாடி, வாசனை திரவியம், பெயின்ட் வகை, வீட்டு உபயோக பொருள், பூ வியாபாரம் செய்றவங்களுக்கு ரொம்ப யோகமான நேரம். சரியான லாபம் கிடைக்குமுங்க. மற்ற வியாபாரம் செய்றவங்களுக்கு சுமாரான லாபம் கிடைச்சாலும் கூட மனதிருப்தி ஏற்படுமுங்க. வாகனம் வாங்கும் யோகம் வருது. போட்டி இருக்காது. சேமிக்கும் வாய்ப்பு தெரியுது.


மாணவர்கள்: வங்கியியல், தணிக்கையியல், கல்வித்துறை, அரசு நிர்வாகம், நிதி மேலாண்மை, சட்டம், நீதித்துறை, கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், இசை, ஓவியம், கேட்டரிங், தகவல் தொழில்நுட்பம் தொடர்பா படிக்கிறவங்க மனம் ஒன்றி படிச்சு நிறைய மார்க் வாங்குவாங்க. மற்ற துறையிலே இருக்கிறவங்களும் ஓரளவு நல்லாவே படிப்பாங்க. சக மாணவர்களோட பாசமா இருப்பாங்க. பணவசதி போதும் போதும்கிற அளவுக்கு கிடைக்கப் போகுது.


பெண்கள்: அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்க உற்சாகமா வேலை செஞ்சு நல்லபேரு வாங்குவாங்க. எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் போகுது. சக பணியாளர்கள் ஒத்துழைப்பாங்க. குடும்பத்தை கவனிக்கிறவங்க, கணவரோட ஒற்றுமையா இருந்து மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்துவாங்க. பணப்புழக்கம் நல்லாயிருக்கும். தாய்வீட்டு உதவியும் கிடைக்கும். ஆடை, ஆபரணம், புதுக்கார் வாங்கக் கூட யோகமிருக்கு. கணவரோட உடல்நலத்திலே சிறுபாதிப்பு வந்து சரியாகும். சுய, கூட்டுத்தொழில் செய் றவங்க, கூடுதல் பணவரவாலே சந்தோஷப்படுவாங்க. இடைஞ்ச லெல்லாம் தீர்ந்து போகுமுங்க.


அரசியல்வாதிகள்: அரசியல் எதிரிகளோட தொந்தரவு குறைஞ்சு போயிடுமுங்க. சமூக சேவையிலே ஈடுபடறப்போ, நிஜமாகவே அது மக்களுக்கு பலன் தருமான்னு பார்த்து இறங்குங்க. இல்லாட்டி தேவையில்லாத கெட்ட பெயரை சம்பாதிப்பீங்க. ஆதரவாளர்கள் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டாங்க. புத்திரர்களின் சமயோசித புத்தி, நீங்க அரசியலிலே நிலைச்சு நிற்க உதவுமுங்க. குடும்ப ஒற்றுமை இதனாலே பலமா இருக்கும். தேவையான பணம் எப்படியோ வந்துகிட்டே இருக்கும். அரசியலோட தொழில் நடத்துறவங்களுக்கு நல்ல நேரம் தான். இனிய பேச்சு இருந்தால் தொழில் இன்னும் வளருமுங்க. புதுப்பதவிக்காக பணத்தை வீணடிக்கிறது நல்லது இல்லீங்க. வெளியூர் பயணத்தின் போது, பக்கத்திலே இருக்கிறவங்க கிட்டே பேச்சை குறைக்கிறது நல்லதுங்க.


விவசாயிகள்: ரொம்ப ஆர்வமா வேலை செய்வீங்க! கடன் உதவி, மானியம், நண்பர்களோட பணஉதவி, பழைய பாக்கி வசூல்... இப்படி பல வழிகளிலே பணம் வருமுங்க. மகசூலும் திருப்தியா இருக் கும். கால்நடைகள் காசை அள்ளித்தரும். குடும்பத்திலே சுபமங்கல நிகழ்வு, வயல்காட்டு பிரச்னை தீருறது என நல்லநேரம் வந்திருக்குதுங்க.

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஐப்பசி 2017  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz