கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2018-05-27
4:01 AM

Welcome Guest | RSS Main | கன்னி.. | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கன்னி


திருமகளின் அருளைப் பெற்ற திடமனம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!வரக்கூடாத விருந்தாளி தான்! ஆனா வந்திருக்கிறவரு தெய்வாம்சம் பொருந்தியவராச்சே. அவர் அவ்வளவு சீக்கிரமா கிளம்பிடக்கூடியவரா? ஏழரை வருஷம் படுத்திருவாரே! நளமகராசா படாதபாட்டையா நமக்கு கொடுத்திடப் போறாரு! சரி... என்ன செய்யப்போறாருன்னு கேளுங்க!


உங்க ராசிக்கு ஏழரைச் சனி துவங்கியாச்சு. ராசிக்கு 12ம் இடத்தில் அமர்கின்ற சனி தன்னோட 3, 7, 10ங்கிற பார்வையாலே ராசிக்கு 2, 6, 9ங்கிற இடங்களை பார்க்கிறாரு. இதனாலே முதலில் உங்க பழக்க வழக்கங்களை மாத்திப்புடுவாரு. கெட்ட பழக்கவழக்கம் போகமா இருக்கிறது உங்க கையிலே தான் இருக்கு. ஒன்றைப் பேசினால், அதனால் பயன் இருந்தால் மட்டும் பேசுங்க! இல்லாட்டி "மவுனம் சம்மதம்னு' மூச்சே விடாம போயிகிட்டு இருங்க. யாராவது நாலுபேர் "டீக்கடை பெஞ்சு' நடத்திகிட்டு இருந்தா, நீங்க போயி மூக்கை நுழைக்கக்கூடாது. நுழைஞ்சா அடிதடி, சண்டை, கேசு...இதெல்லாம் தேவையா நமக்கு! பணவரவு... உஹூம்.. ரொம்ப கஷ்டப்பட்டா கொஞ்சம் கிடைக்கும். ஆனால், உங்க தம்பிகளுக்கு ஆடம்பர செலவு செய்ற அளவுக்கு பணம் கொட்டும். உங்களுக்கு தான் அவர்கள் தந்து உதவமாட்டார்கள். ஊருக்குள்ளே சில முக்கியப்பதவிகள் கிடைக்கும்.


வீடு, மனை, வாகன வகையிலே அபிவிருத்தி பணிகளுக்கு கடன் கிடைக்கிறதுக்கு வாய்ப்பிருக்கிறதாலே, தடை ஏதும் ஏற்படாது. தாயின் அன்பு, பாசம் கூடுதலா கிடைக்கும். குழந்தைகளாலே நிம்மதிக்குறைவு தான். எப்போ பார்த்தாலும் விளையாட்டு, கூத்து, சினிமான்னு பணத்தை கரைய விடுவாங்க. அவங்களுக்கு கோப்படாம புத்தி சொல்லுங்க மத்தவங்க மூலமா! பூர்வ சொத்து பாதுகாப்பு, பராமரிப்பு செலவு கூடும். எதிரிகள் பக்கத்தில் வந்தாத பகைக்காதீங்க. அவங்களோட வீக்னஸை பயன்படுத்தி, உங்க காரியங்களை சத்தமில்லாம சாதிச்சுகிடுங்க. ஆரோக்கியம் பெரிசா பாதிக்காது. கடன், வழக்கு தொந்தரவெல்லாம் குறையும்.


கணவன், மனைவி ஒற்றுமை நல்லாயிருக்கும். உறவினர், நண்பர்கள் கிட்டேயும் சுமூகமா இருப்பீங்க. மூத்த சகோதரர்களுக்கு பணபாதிப்பு, உடல்பாதிப்பு ஏற்படுற வாய்ப்பிருக்கு. இருக்கும் வசதியை பாதுகாத்துக் கொள்ள கடுமையா போராட வேண்டியிருக்கும்.


தொழில், உத்தியோகம், வியாபாரம் சார்ந்த வகையில் வளர்ச்சி ஓரளவு இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். வெளிநாடு வேலைவாய்ப்பை விரும்புறவங்க ரொம்ப கவனமா இருக்கணும். மிகுந்த ஆலோசனைக்கு பிறகு கிளம்புற வழியைப் பாருங்க. இந்த விஷயத்தில் லாபம் கிடைக்குமான்னு கணக்கு பார்த்துட்டு கவனமா கிளம்புங்க.


தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், நிதி நிறுவனம், காகிதம், மின்சாதனம், பர்னிச்சர், பிளாஸ்டிக் பொருள், அச்சகம், நகை உற்பத்தியாளர், கல்வி நிறுவனம் நடத்துவோர், எண்ணெய் ஆலை நடத்துபவர் உள்ளிட்ட தொழிலதிபர்கள் ஆர்டர்களைப் பெற மிகக்கனிவா பேசணும். பேச்சில் சூடு ஏற்பட்டால் நல்லதல்ல. சமூகப்பணியில் ஆர்வம் வளரும். வாகனம் வாங்குவீங்க. குடும்ப ஒற்றுமை நல்லாயிருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியுறவங்க திறமையா செயல்பட்டா தான் இலக்கை எட்ட முடியும். சக பணியாளர்கிட்டே மோதல் வரும். வரவு வழக்கத்தை விட கூடாதுங்கிறதாலே செலவை ஒழுங்குசெய்றது நல்லதுங்க. கல்வித்துறை, அச்சபணி, ஆடிட்டிங், கைவினைப் பொருள் தயாரிப்பு, சினிமாத்துறையிலே இருக்கிறவங்களுக்கு அதிக பிரச்னையில்லே. இவங்க தங்களோட


திறமையை வெளிப்படுத்தி புகழும், பொருளும் பெறுவாங்க. வாழ்க்கை வசதி திருப்திகரமா இருக்கும். சேமிப்பதில் ஆர்வம் வளரும்.


வியாபாரிகள்: நோட்டு புத்தகம், எழுதுபொருள், பெயின்ட் வகை, மருந்துப் பொருள், மருத்துவ உபகரணங்கள், வீட்டு அலங்கார பொருள், குழந்தை விளையாட்டு சாதனம், பொம்மை, ரெடிமேட், மளிகை, புத்தகம், இசைக்கருவிகள், தென்னை சார்ந்த பொருள் உட்பட பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் வியாபாரம் செய்றவங்களுக்கு விற்பனை நல்லாயிருக்கும். மத்தவங்களுக்கு வியாபாரம் சுமாரா போகும். பணியாளர்கள் ஒத்துழைப்பாங்க. புதிய கிளை துவங்குவீங்க. போட்டி ஓரளவுக்கு தான் குறையும்.


மாணவர்கள்: வணிகவியல், தணிக்கையியல், வங்கியியல், ஜோதிட சாஸ்திரம், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், நரம்பியல் மருத்துவம், சட்டப்படிப்பு, சிவில், கம்ப்யூட்டர், சினிமா, இலக்கிய ஆராய்ச்சி, ஓவியம் வரைதல், இசை, நடனம், விவசாயம், தொழில்நுட்பம் தொடர்பாக படிப்பவங்க, சிரமப் பட்டு படிச்சு நல்லபேரு வாங்குவாங்க. சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். படிப்புக்குரிய பணத்தை ஆடம்பரமா செலவழிக்கிற மனநிலையை சனீஸ்வரன் கொடுத்துகிட்டே இருப்பாரு. அதிலே ஜெயிக்கிறது உங்க கையிலே தான் இருக்கு. சக மாணவர்கள், பெத்தவங்க உங்க தேவைகளை நிறைவேத்தி வைப்பாங்க. சுற்றுலா போகிற இடத்திலே தண்ணியிலே இறங்கிறது, பாதாளத்தை எட்டி பார்க்கிறது, போதை பக்கம் போகிறது இதெல்லாம் செய்யக்கூடாது.


பெண்கள்: அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்களுக்கு வேலை ஓடாது. இருந்தாலும், குடும்பத் தேவைகள் பயமுறுத்துறதாலே, கஷ்டப்பட்டு வேலை செய்வாங்க. சக பணியாளர்கள் நட்புறவோட இருப்பாங்க. கொடுக்கல், வாங்கலாலே சண்டை வரும். நீங்க யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். குடும்பத்தை கவனிக்கிறவங்க கணவரோட அன்பைப் பெறுவாங்க. இதனாலே பணம் ஓரளவு கையிலே இருக்கும். தேவையானதுக்கு செலவழிக்கிறதுக்கு போதுமானதா இருக்கும். தாய்வழி உதவி கிடைக்காது. இதனாலே அவங்களோட கருத்து வேறுபாடு வரும். உறவினர் சுமூகமாக இருப்பாங்க. சுய, கூட்டுத்தொழில் செய்றவங்க சீரான தொழில்வளம் பெறுவீங்க. வியாபாரத்திற்கு அளவான மூலதனம் போதுமுங்க. திருமண முயற்சி செய்றவங்களுக்கு அனுகூல பலன் ஏற்படுமுங்க.


அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் ஆர்வமா இருப்பீங்க. போகிற இடமெல்லாம் வரவேற்பு இனிதாக கிடைக்கும். ஆதரவாளர்களை அனுசரிச்சு போங்க. புத்திரர்களை நுழையவிட்டு, பேரை கெடுத்துக்கிடாதீங்க. அதிகாரிகள் கிட்டே மக்கள் கோரிக்கைக்காக பேசினா நிறைவேறிடும். சொந்த வேலைகளை சாதிக்கப் போனா "சாரி'ன்னு சொல்லிடுவாங்க. எதிரிகளோட தொந்தரவு குறையும். அரசியலோட தொழில் செய்றவங் களுக்கு நல்ல பணியாளர்கள் இருந்தா லாபம் ஓரளவுக்கு இருக்கும்.


விவசாயிகள்: பணம் குறைச்சலா இருக்கிறதாலே, அதற்கு தகுந்த பயிர்களை மகசூல் பண்ண வேண்டியிருக்கும். கால்நடைகளாலே பலன் நல்லாவே இருக்கும். அதே நேரம், கால்நடை, பயிர் வளர்ப்புலே ரொம்ப கவனம் செலுத்த வேண்டியிருக்கும். பணச்செலவு கூடும். குடும்பம் ஒற்றுமையா இருக்கும்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  வைகாசி 2018  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz