கலைமகள் செட்டிகுளம் வவுனியா - சிம்மம்..
கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2017-03-23
10:54 PM

Welcome Guest | RSS Main | சிம்மம்.. | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

சனிப்பெயர்ச்சி பலன்கள்

சிம்மம்


சோதனைகளை சாதனையாக மாற்றிக் காட்டும் சிம்ம ராசி அன்பர்களே!உங்க ராசிக்கு தாங்க சனிபகவான் பெயர்ச்சியாகி வந்திருக்காரு. வரக்கூடாத விருந்தாளி வந்துவிட்டாரே என வருத்தப்பட முடியுமா? தெய்வாம்சம் பொருந்திய விருந்தாளியாச்சே! அவரை வரவேற்று தான் ஆகணும்! அவர் தரப்போகும் படிப்பினையையும் கற்றுத்தான் ஆகணும்!


உங்களுக்கு ஏழரைச்சனியோட இரண்டாம் கட்டமான ஜென்மச்சனிங்கிற நிலை உருவாகியிருக்கு. தனது 3, 7, 10ங்கிற பார்வையாலே ராசிக்கு 3, 7, 10ங்கிற இடங்களை பார்க்கிறாருங்க. கடந்த இரண்டரை வருஷத்திலே பணவிரயம், அலைச்சல், பயணம் போன்ற பலன்களை தந்தாருங்க. இந்த ஜென்மச்சனியிலேயும் உங்களை சிரமப்படுத்தத்தான் செய்வாரு! பேசும் வார்த்தையில் இனிமையும் சாந்தமும் கூடும். உறவினர்கள் அனுகூலமாக நடந்துக்குவாங்க. தம்பிகள் வாழ்க்கை சிறப்பா இருக்கும். தைரியமா செயல்படுவீங்க. சமூக அந்தஸ்து சிறப்பாக இருக்குமுங்க. வீடு, மனையிலே நெனச்சபடி மாற்றம் செஞ்சுக்க வாய்ப்பு கிடைக்கலாமுங்க. தாயின் அன்பான ஆசி கிடைப்பதோட, அவர் வழி சொத்து, வருமானம் என சந்தோஷ சூழ்நிலை உண்டாகுமுங்க. பிள்ளைங்க பொது விஷயங்களை தெரிஞ்சுகிடறதிலே ஆர்வம் காட்டுவாங்க. இதனாலே, உங்களுக்கு பேரும் புகழும் கிடைக்கக்கூட வாய்ப்பிருக்கு. பூர்வ சொத்து இருக்கிறவங்களுக்கு அதிலிருந்து கிடைக்கிற வருமானம் கூடும். கடன் கொடுத்த பணம் வரும். ஆதாயமாக சில பணவரவும் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சியை நல்லவிதமா நடத்துவீங்க. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு நல்ல சான்சைத் தருவார். வெளியூர் பயணங்கள் மூலம் அனுபவம், ஆதாயமெல்லாம் தருவாருங்க.


இவ்வளவு நல்ல பலன்கள் கிடைக்கிற அதே வேளையிலே, உங்க ராசியிலே இருக்கிற சனீஸ்வரனார், உங்களுக்கு பல சோதனைகளையும் தரப்போறாரு. என்னென்ன விதத்திலேன்னு பார்க்கலாமா?


எதிரிகள் உங்கள் கவனத்தை திசைதிருப்பி கெடுதல் செய்வாங்க. உடல்நலத்திலே பாதிப்பை உண்டாக்கி ஆஸ்பத்திரிக்கு அலைய வைப்பார். மேலே சொன்ன வருமானத்திலே ஒரு பகுதி மருத்துவத்துக்கு போயிடும். பணம், கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுதிக்கு மீறி செயல்பட வைத்து அல்லல்படுத்துவார்.


கணவன், மனைவி இடையே பிரச்னையை உண்டாக்கி, வீட்டுக்குள்ளே உம்முன்னு இருக்கிற நிலையை உண்டாக்கிடுவார். நீங்க அனுசரிச்சு நடந்துகிட்டா, அவரும் ஒதுங்கி நின்னுக்குவார். நண்பர்களோட கருத்துவேறுபாட்டை உண்டாக்கி பிரிய வைப்பார். வாழ்க்கை வசதி திருப்திகரமாக இருந்தாலும், பற்றாக்குறையை உண்டாக்கிகிட்டே இருப்பார்.


தொழிலோ, வியாபாரமோ, உத்தியோகமோ...ஏதாயிருந்தாலும் சிரமமாத்தான் நடக்கும். இந்த சமயத்தில், மூத்த சகோதரர்களோட நல்ல் ஆலோசனைகளை உங்களுக்கு வழங்குவார். அதை ஏற்று நடந்துகிட்டா, உங்களுக்கு நல்லது.


தொழிலதிபர்கள்: கம்ப்யூட்டர், இசைக்கருவி, மீன்பிடி சாதனம், மின்சாதனம், நகை, கேமரா, வீடியோ, சுற்றுலா நிறுவனம், திரையரங்கம் நடத்துபவர்கள், பர்னிச்சர் உற்பத்தி, பைப், தொட்டி, அழகு சாதன பொருள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டல், கல்யாண மண்டபம், பிளாஸ்டிக் பொருள் தயாரிகும் தொழிலிலே இருக்கிறவங்களுக்கு பிசினஸ் அவ்வளவு சரியா இருக்காதுங்க. மத்தவங்களுக்கு இப்ப இருக்கிற கண்டிஷனிலே ஏதோ ஓடுமுங்க. முக்கிய தேவைக்கு பணம் கிடைக்கும்.


பயணங்களில் தொந்தரவிருக்காது. போட்டி கடுமையாத்தான் இருக்கும்.தந்தை வழி உறவுக்காரர் ஒருவராலே நிலைமையை சமாளிக்க வாய்ப்பு கிடைக்குமுங்க.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையிலே இருக்கிறவங்களுக்கு வேலையில் கவனம் சிதறும். பக்கத்து சீட்டை வேடிக்கை பார்த்துகிட்டே, உங்க வேலையிலே கோட்டை விட்டுடுற சான்ஸ் அதிகமுங்க. சம்பளம், சலுகை அதிகமாக கிடைக்காது. சேமிச்சு வச்சிருக்கிற பணத்திலே கையை வைக்க வேண்டி வரும். பர்னிச்சர், காலணி, மார்பிள், நவீன ஆடை, கலை அலங்கார பொருள், மின்னணு சாதனம், கம்ப்யூட்டர் சார்ந்த துறையிலே வேலை செய்றவங்களுக்கு சோதனை அதிகமா இருக்கும். இவங்களுக்கு சம்பளப்பிடித்தம் மாதிரி இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும். உடல்நலம் வேற பாதிக்கும். ஆபத்தான இடம், சட்டவிரோதமான இடம், தேவையற்ற சுற்றுலா இங்கெல்லாம் போக மனம் துடிக்கும். கட்டுப்படுத்திகிட்டா சிரமம் இல்லாமே தப்பிக்கலாம். இருக்கிற வேலையை காப்பாத்திகிடறது நல்லது.


வியாபாரிகள்: செல்போன், கம்ப்யூட்டர், கேமரா, டி.வி.டி., அழகு சாதனப்பொருள், வீட்டு அலங்கார பொருட்கள், வெள்ளி பாத்திரங்கள், அணிகலன்கள், வாசனை திரவியங்கள், ஷாம்பு, ஹேர்டை, சோப்பு வகைகள், நவீன பர்னிச்சர் வகைகள், பால் பொருள், பருத்தி ஆடை, ரப்பர் பொருள், மாவு பண்டம், காலணி, பேக், பின்னலாடை, திரைச்சீலை வகை பொருட்களை விற்பவர்களுக்கு வியாபாரம் குறையும். மற்றவர்கள் வாடிக்கையாளர்கள் கிட்டே பேசுறதை வச்சு, ஓரளவுக்கு கட்டுப்படியாகும் நிலைக்கு விற்றுத்தள்ளலாம். வாகனம் வாங்குற வகையிலே கணிசமான பணம் வரும். வியாபார வளர்ச்சிக்காக வாகனம் வாங்குவீங்க. போட்டி கடுமையா இருக்கும். இதை சமாளிக்க தகுதியான பணியாளர்களை நியமிக்கிறது நல்லதுங்க.


மாணவர்கள்: இசை, நடனம், ஓவியம், சிற்பம், போட்டோகிராபி, வீடியோகிராபி, ஆராய்ச்சி படிப்பு, நீர்நிலை பராமரிப்பு, கடல்வளம், கனிமவளம், வாகனம், ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, எலக்ட்ரானிக்ஸ், ஓட்டல் மேனேஜ்மென்ட், நகை வடிவமைப்பு சம்பந்தமா படிக்கிறவங்களுக்கு படிப்பு பின்தங்கும். மனதில் லட்சிய மனப்பான்மையை வளர்த்துகிட்டு பாஸாகிற வழியைப் பாருங்க. படிப்புக்குரிய பணத்தைப் பற்றி கவலையில்லே! தேவையான அளவுக்கு கிடைக்கும். நண்பர்கள் கூட கருத்து வேறுபாடு வரும். கவனமா இருங்க! பெற்றோர்கிட்டே பாசமா இருப்பீங்க! விளையாடப்போனா உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோட போங்க. காயம்பட வாய்ப்பிருக்கு. சுற்றுலா போக சான்ஸ் கிடைக்கும்.


பெண்கள்: அரசு, தனியார் துறையிலே இருக்கிறவங்களுக்கு வேலையில் கவனம் குறையும். தேவையற்ற டிரான்ஸ்பர் வந்து தலையை உருட்டும். சலுகைகளும் அதிகமாக கிடைக்கிறதுக்கு வாய்ப்பில்லே! குடும்பத்தை கவனிக்கிறவங்களுக்கு பணவரவு கணிசமா இருக்கும். ஆனால், கணவரோட உடல்நலம் பாதிப்பதாலே, மருத்துவச்செலவுக்கு கணிசமா போயிடும். மனசுக்கும் கஷ்டமா இருக்கும். தாய்வழியிலே உதவி கிடைக்கும். நகை. பணத்தை கவனமா லாக்கரிலே வச்சிடுங்க! திருட்டு போக வாய்ப்பிருக்கு. சுய, கூட்டுத்தொழில் செய்றவங்க வரவு, செலவை கவனமா பாத்துகிடுங்க. இல்லாட்டி, தேவையற்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.


அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களையும், புகழையும் தக்க வைக்க ரொம்பவே பணத்தை காலி பண்ணியிருப்பீங்க கடந்த இரண்டரை வருஷத்திலே. அதற்கு அப்போ பலன் கிடைக்காட்டியும், இப்போ பலனை அனுபவிப்பீங்க. கட்சியிலோ, உள்ளூரிலோ புதிய பொறுப்பு கிடைக்கும். அதிகாரிகளிடம் கடுமையா வாதாடி தான் காரியம் சாதிக்க வேண்டியிருக்கும். புத்திரர்கள் பக்க துணையாக இருப்பாங்க. அரசியலுடன் தொழில் நடத்துறவங்களுக்கு திறமைக்குறைவான பணியாளர்களாலே நஷ்டம் வர வாய்ப்பிருக்கு. வெளியூர் பயணம், சுபச்செலவு, அரசியல் ரீதியாக இன்னும் பணச்செலவு என பணம் பறக்கும்.


விவசாயிகள்: பணவசதி, நவீன கருவிகள் என விவசாயப்பணிகளுக் குரிய மூலப்பொருட்களுக்கு பஞ்சமிருக்காது. விளைச்சல் அதிகரிக்கும். கால்நடை அபிவிருத்தியும் பண வரவும் கூடும். வாய்க்கால் வரப்பு பிரச்னை தான் தீராமல் இழுத்தடித்து, மகசூல் பணத்தை வக்கீலுக்கும், சம் பந்தப்பட்டவங்களுக்கும் கொடுக்க வேண்டியிருக்கும்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2017  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz