கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-03-29
6:49 PM

Welcome Guest | RSS Main | கடகம்.. | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

சனிப்பெயர்ச்சி பலன்கள்

கடகம்


எண்ணத்தால் உயர்ந்து நிற்கும் கடக ராசி அன்பர்களே!



உங்கள் ராசிக்கு ஏழரைச்சனியில், ஜென்மச்சனி என்ற நிலை இருந்தது. சிம்மராசிக்கு இடம் பெயர்ந்துள்ள சனிபகவான் தன, குடும்ப, வாக்கு சனி என்ற பெயர் பெறுகிறார். அதாவது ஏழரையின் கடைசி இரண்டரை ஆண்டுகளை கடக்கப் போறீங்க. அஞ்சு வருஷத்தை சமாளிச் சவங்களுக்கு, கடைசி இரண்டரையா ஒரு பொருட்டு... சனிபகவானை தொடர்ந்து வணங்கிகிட்டு உங்க வேலையை அமைதியாப் பாருங்க.


அவர் தனது 3, 7, 10 ஆகிய பார்வையாலே ராசிக்கு 4, 8, 11 ஆகிய இடங்களை பார்க்கிறாருங்க. இதனாலே, கடந்த காலத்தில் செயல்திறனிலே இருந்த சுணக்கநிலை மாறுமுங்க. யாரிடம் வேண்டுமானாலும் பேசுங்க! ஆனா, நிதானமா, நல்லதை பேசிட்டு தப்பி போயிடுங்க. இல்லாட்டி தேவையில்லாத சிரமம் வருமுங்க. நாக்குலே சனின்னு சும்மாவா சொன்னாங்க!


தம்பிகள் உங்க யோகத்துலே வளம் பல பெறுவாங்க. சமூகத்திலே நல்ல பெயர் இருக்கும். வீடு, மனைக்குள் அறிமுகம் இல்லாதவங்களை அனுமதிக்காதீங்க. தேவையில்லாத அவஸ்தை, பொருள் நஷ்டம் வரும். வீடு, மனையிலே அபிவிருத்தி செய்யும் போது, தேவையற்ற பணச்செலவு வரும். தாயின் உடல்நலம் சுமார் தான். மருந்துச் செலவு கூடும். ஆனால், புத்திரர்கள் உங்க மனசு சந்தோஷப்படறது மாதிரி நடந்துக்குவாங்க. பூர்வ சொத்திலே வருமானம் அதிகரிக்கும். குலதெய்வ அருள், புண்ணிய பலன் கெட்ட நேரத்திலேயும் துணை வரும்.


எதிரிகளை பார்த்தா முறைச்சு பார்க்கக்கூடாது. முகத்திலேயே விழிக்காம ஓடிடணும். உடல்நலம் ஆரோக்கியமா இருக்கும். கெட்ட பழக்க வழக்கங்கள் தலைகாட்டும். தேவையா இதெல்லாம்!


கணவன், மனைவி ஒற்றுமை நல்லா இருக்கும். குடும்ப சூழ்நிலை, உறவினர்களின் செயல்பாடு நிம்மதி தரும். நண்பர்களும் நல்லபடியாகவே நடந்துக்குவாங்க. வாழ்க்கை வசதி பெரிய அளவுக்கு இருக்காது. இருப்பதைக் கொண்டு திருப்தியடைஞ்சுக்க வேண்டியது தான். தந்தைவழி உறவினர் அனுகூலமா இருப்பாங்க.


தொழில், உத்தியோகம், வியாபாரம் சார்ந்த வகையிலே இருந்த தடைகள் எல்லாம் விலகி வளர்ச்சி பெறுவீங்க. மூத்த சகோதரரிடம் கருத்துவேறுபாடு ஏற்படும். ஆதாய பணவரவு அவ்வப்போது வரும். ஆனால், தங்காமல் ஓடப்பார்க்கும். எல்லாம், உங்கள் கையில் தான். கஷ்டப்பட்டு சேர்த்து வச்சிடுங்க. பொன், பொருள் பாதுகாப்பும் ரொம்ப ரொம்ப அவசியம். வெளிநாட்டு வேலை விரும்புறவங்களுக்கு அனுகூல பலன் ஏற்படும். திருமணமாகாதவர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் துணையை சனீஸ்வரன் ஏற்படுத்தி தருவாருங்க.


தொழிலதிபர்கள்: ஆஸ்பத்திரி, டெக்ஸ்டைல்ஸ், அரிசி ஆலை, மருத்துவ, விவசாய உபகரணங்கள், பாய்லர், தீப்பெட்டி, பட்டாசு, மின்சாதனம், மசாலா பொடி, பால்பொருட்கள், ரியல் எஸ்டேட், தென்னை பொருட்கள் உற்பத்தி, தோட்டப்பயிர், மருத்துவம் சார்ந்த தொழிலதிபர்களுக்கு கஷ்டமான காலகட்டம் தான். அளவான மூலதனத்துடன் இருக்கிறதை ஓட்டிக்கிட்டு இருங்க இன்னும் இரண்டரை வருஷத்துக்கு. புதிய பொறுப்புகள் வந்தால், அதைத் தாங்கும், நடத்தும் பக்குவம் இருந்தா மட்டும் ஏத்துக்கிடுங்க. பயணத்தில் ரொம்ப கவனம் வேணுமுங்க. இயந்திர பராமரிப்பிலே அதிக கவனம் வேணுமுங்க. பூர்வ சொத்தில் வரும் வருமானம் பலவகையிலும் உதவுமுங்க.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்க ஆர்வமா உழைப்பீங்க. ஆனா வருமானம்.. உஹூம்..."கையிலே வாங்கினேன், பையிலே போடலே, காசு போன இடம் தெரியலே' என பாடும் வகையில் தான் இருக்கும். கொஞ்சம் பொறுத்துதான் ஆகணும். தகுதிக்கு மீறிய பணச்செலவு, கடன் வாங்குறது இதுக்கெல்லாம் இப்ப நேரமில்லீங்க. சக பணியாளர்கள் ஒத்துழைப்பு நல்லாயிருக்கும். பணிச் சுமை அதிகரிக்கும். பர்னிச்சர், உணவுப்பொருட்கள், ஜாம் வகைகள், காளான் வளர்ப்பு, காகிதம், மருத்துவம், கட்டடப்பணி, மூலிகை வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் பணிசெய்றவங்களுக்கு மட்டும் மேற்கண்ட கஷ்டங்களில் இருந்து கொஞ்சம் விதிவிலக்கு. வருமானம் பரவாயில்லை என்ற நிலை இருக்கும். வாகனம், இயந்திரங்களை இயக்கும் போது ரொம்பவும் கவனம் வேணும்.


வியாபாரிகள்: விளைபொருட்கள், கட்டட கட்டுமான பொருட்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், நவீன ஆடை, உணவு பண்டங்கள், மசாலா பொருள், பால், ஐஸ்கிரீம், சாக்லேட், பேக்கரி பொருட்கள், மீன், இறைச்சி, மருந்து, குளிர்பானம், பழம், விவசாய இடுபொருட்கள், கைவினைப் பொருள், வாகன உதிரிபாகம் வியாபாரம் செய்றவங்க, ஓட்டல் நடத்துறவங்க, ஓரளவு லாபமடைவீங்க. மத்தவங்களுக்கு பேச்சிலே இதம் பதம் இருந்தா பிரச்னை இருக்காது. வரவுக்கேற்ப மூலதனம் செய்தால் போதும், கடன் வாங்கி வியாபாரத்தை பெருக்கும் முயற்சி நல்லதா தெரியலே. போட்டியாளர்களிடம் எச்சரிக்கை வேண்டும். கொள்முதல் மற்றும் வினியோகத்தில் அடிக்கடி குளறுபடி ஏற்படும். கவனமா இருங்க.


மாணவர்கள்: மருத்துவம், காவல்துறை, ராணுவம், விவசாயம், கேட்டரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், அரசு நிர்வாகம், ஆடை வடிவமைப்பு, லேப் டெக்னீஷியன், நீர்நிலை பராமரிப்பு, டிரைவிங், அக்னி சார்ந்த தொழில்படிப்பு, சாலை பராமரிப்பு, ஓட்டல் மேனேஜ் மென்ட், இன்டீரியர் டெக்கரேஷன், இன்ஜினியரிங், தொல் பொருள் ஆராய்ச்சி உள்ளிட்ட படிப்பு படிக்கிறவங்க ரொம்ப கவனமா படிக்காட்டி, பெத்தவங் களுக்கும் கெட்ட பேரு, நீங்களும் தலை குனிய வேண்டியிருக்கும். மற்ற துறையிலே இருக்கிறவங்களுக்கு பரவாயில்லை என்ற நிலை. பணம் வேறு பிரச்னை கொடுக்கும். படிப்பு செலவு தவிர, மற்ற செலவுகளை கட்டாயமா தவிர்த்திடுங்க. சக மாணவர்கள் உதவி செய்வாங்க. தாயின் சொல் கேட்டு நடந்துகிடறது உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. விளையாடப் போனா அடிபட சான்ஸ் இருக்கு. பாதுகாப்புடன் விளையாடுங்க.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியுறவங்க, மிகுந்த கவனமாக வேலை செய்து நல்லபேர் எடுப்பாங்க. அதே நேரம், இந்த வாய் இருக்குதே... அது அதிகாரிகளைப் பற்றிப் பேசப்போக, கிடைக்க வேண்டிய சலுகைகள் விண்ணிற்கு பறந்து விடும். கவனம். பயணத்தில் நிதானம் வேணும். பணவரவு அதிகமிருக்காது. குடும்பத்தை கவனிக்கும் பெண்கள், கணவருடன் ஒற்றுமையா இருப்பாங்க. வரவுக்கேற்ற செலவு செய்து நல்லபேர் வாங்குவாங்க. உறவுக்காரங்களோட சுமூகமா நடந்துகிடறது நலம் தருமுங்க. உடல்நலத்தில் கூடுதல் அக்கறை அவசியங்க. கூட்டு தொழில் செய்றவங்க சிறப்பா தொழிலைச் செய்வாங்க என்றாலும் லாபம் அதிகமிராது. அளவான மூலதனம் போதும். தகுதிக்கு மீறி கடன் வாங்கி சிக்கிகிட வாய்ப்பிருக்கு. கவனம்.


அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் செய்த சமூகப்பணிக்கு உரிய பலன் இப்போ தானா தேடி வரப்போகுது. ஆதரவாளர்கள் உதவியும் உண்டு. பணத்தை வீணாக செலவழிக்கிறதை விட்டுடுங்க. போட்ட முதலை எடுக்க சான்ஸ் இல்லே! உங்கள் புத்திரர்களும் அரசியலுக்கு வந்து கணிசமா சம்பாதிப்பாங்க. எதிரிகளிடம் வாக்குவாதம் புரிந்து நேரத்தை வீணடிக்கிறதாலே லாபத் துக்கு பதிலாக, நோய் தான் தலைகாட்டும். காலப்போக்கில் அவங்களாகவே விலகிடுவாங்க. அரசியலோட தொழில் செய்றவங்களுக்கு விசுவாசமான பணியாளர் கிடைக்கிறதாலே கவலை குறையுமுங்க.


விவசாயிகள்: விரலுக்கேத்த வீக்கம் மாதிரி வரவுக்கேற்ப செலவு செய்வீங்க! அதனாலே, மகசூல் குறைபாட்டை தவிர்க்க முடியாதுங்க. கால்நடை பராமரிப்புக்கும் கூடுதல் செலவாகிற அளவுக்கு வருமானம் இருக்காது. வாய்க்கால் பிரச்னை தீராப் பிரச்னையா இருக்கும். பொறுமை வேணும். குடும்பத்தில் சுபமங்கல நிகழ்ச்சி உண்டு.

Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2024  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz