கலைமகள் செட்டிகுளம் வவுனியா சனி
2017-12-16
0:09 AM

Welcome Guest | RSS Main | மிதுனம்.. | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

சனிப்பெயர்ச்சி பலன்கள்

மிதுனம்


நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே!உங்க ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்த சனிபகவான், ஏழரைச்சனி என்ற நிலையில் இருந்து முழுவதுமாக விலகிப் போயிட்டாருங்க. இப்போது, சிம்ம ராசியில் அமர்ந்து அவர், தனது 3, 7, 10 ஆகிய பார்வையாலே ராசிக்கு 5, 9, 12 ஆகிய இடங்களைப் பாக்கிறாரு! ஏழரையா இருந்து என்ன பாடு படுத்தினாரு மனுஷன்!


சரி... அவர் தந்த கஷ்டங்களோட அனுபவங்களைப் பயன்படுத்தி, உங்க மனசிலே இருக்கிற திட்டங்களை செயல்படுத்த நல்ல நேரம் பொறந்திருச்சு. எல்லாரிடமும் இதம் பதமாக பேசி நல்லபேரும், நட்பு வட்டாரமும் அதிகம் பெறுவீங்க! வீடு, மனையில் மனம் விரும்பிய மாற்றம், மங்கல நிகழ்ச்சிகள் என எல்லாமே நல்லது தான். கார், பஸ், அட... அட்லீஸ்ட் ஒரு மொபெட் வாங்குமளவுக்கு நல்ல யோகம் வந்தாச்சு. தாய்வழி உறவுக்கா ரங்க அன்பு, பாசத்துடன் நடந்துக்குவாங்க. புத்திரர்கள் விஷயத்தில் தான் கொஞ்சம் கவனம் வேணும்! அவங்க நல்ல பிள்ளைங்க தான். ஆனா, சேர்க்கை கெடுத்திடுமே! அவர்களை உங்க பார்வையில் வச்சுகிடுறது நல்லதுங்க! ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கடன், வழக்கு விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமா தீர்ந்து போகும்.


கணவன், மனைவி ஒற்றுமை ரொம்ப நல்லாயிருக்கும். ஒருவருக்கு ஒருவர் அனுசரணையுடன் நடந்து உறவுக்காரங்க, பிரண்ட்ஸ் எல்லாரும் பார்த்து பாராட்டும் படியா இருக்குமுங்க! நண்பர்கள் திடீர்னு தேவை வரும் சமயத்துலே கொடுத்து உதவுவாங்க. வாழ்க்கை வசதி திருப்திகரமாக இருக்குமுங்க.


ஏழரை தான் போயிட்டுதே! இனிமே என்ன வேணாலும் செய்யலாமுனு நினைச்சு தேவையில்லாம கடன் வாங்காதீங்க. இதுமாதிரி விஷ யங்களில், முந்தைய அனுபவத்தை பயன்படுத்தி முடிவெடுங்க. தொழில், உத்தியோகம், வியாபாரம் சார்ந்த வகையில் இனிமேல் வளர்ச்சி தான்! ஆதாய பணவரவுக்கு எக்கச்சக்கமாக வழி இருக்குங்க. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி பண்றவங்க பணத்தை இழக்க வாய்ப்பிருக்கு.


தொழிலதிபர்கள்: கல்வி, நிதி நிறுவனம், பங்கு சந்தை வர்த்தகம், காப்பி, ஏலக்காய், தோட்டப் பயிர்கள் உற்பத்தி, தங்கம், நவரத்தின கற்கள், நகை உற்பத்தியாளர்கள், விளையாட்டு கருவி, அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், காகிதப் பொருள் உற்பத்தி, கண் ஆஸ்பத்திரி நடத்துறவங்க, மலர்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பலவகை தொழில் செய்றவங்களுக்கு ஏகப்பட்ட திருப்திகரமா லாபம் இருக்கும். மற்றவங்களுக்கு இவர்களை விட லாபம் கூடும். சந்தையில் உங்கள் பொருள் பற்றி தான் பேச்சாக இருக்கும். அதிக ஆர்டர் கிடைக்கும். புதிய கிளை துவங்கும் எண்ணம் நிறைவேறும். சமூகத்தில் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்களுக்கு இருந்த வேலைப்பளு குறையுமுங்க. உங்க வேலையை பகிர்ந்துக்க கூடுதலா ஆட்கள் வருவாங்க. பணியில் இருந்த குறுக்கீடுஎல்லாம் காணாமல் போகும். சக பணியாளர்களும் ஒத்துழைப்பாங்க. கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர், மலர் அலங்காரம், தங்க நகை உற்பத்தி சார்ந்த வேலையிலே இருக்கிறவங்க பணி இலக்கை பூர்த்தி செய்து நிர்வாகத்திடம் சலுகையும், திருப்திகரமான பணவரவும் பெறுவாங்க. கடன் எல்லாம் விரைவில் அடைந்து விடும். உடல்நலம் ஆரோக்கியமா இருக்கும். செலவைக் குறைத்து சேமிப்பை அதிகமாக்குவீங்க. வாகனம் வாங்க வாய்ப்பு வரும்.


வியாபாரிகள்: அழகு சாதனப் பொருள், ஸ்டேஷனரி, அலங்கார பொருள், ஓட்டல், தங்க நகை, பித்தளை பாத்திரம், குழந்தை விளையாட்டு பொருட்கள், அடகுக்கடை நடத்துபவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்பவர்கள், விவசாய இடுபொருள், பூச்சிக் கொல்லி மருந்து, வாசனை திரவியம், பெயின்ட் வகை விற்பனை செய்றவங்களுக்கு விற்பனை ஜோரா இருக்கும். பணவரவு திருப்திகரமாகும். சேமிப்பு உயர்வுபெறும்.


மாணவர்கள்: எம்.சி.ஏ., கல்லூரி விரிவுரையாளர், பேராசிரியர், கேட்டரிங், தங்க நகை வடிவமைப்பு, அரசு நிர்வாகம், சட்டம், நீதித்துறை, வேத சாஸ்திரம், யோகக்கலை, தொல் பொருள் ஆராய்ச்சி, வங்கியியல், தணிக்கையியல், தகவல் தொழில்நுட்பம், தோட்டக்கலை நிர்வாகம், பயிர் வளர்ப்பு, நீர்நிலை பராமரிப்பு, ஆராய்ச்சி படிப்பு உட்பட பல்வேறு வகை சார்ந்த படிப்பு படிக்கிறவங்க தரதேர்ச்சி பெறுவாங்க. மற்றவர்கள் தங்கள் துறையில் செலுத்தும் கூடுதல் கவனத்தைப் பொறுத்து மார்க் கிடைக்கும். படிப்புக்கான பணவசதியும் திருப்தியா கிடைக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு தருவாங்க. தந்தையுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்பிருக்கு. அவர்கிட்டே மோதினா உங்களுக்கு தானே நஷ்டம், விட்டுக்கொடுத்து போயிடுங்க. சமூகத்திலும் உறவுக்காரங்ககிட்டேயும் நல்ல மரியாதை இருக்கும்.


பெண்கள்: அரசு, தனியார் துறையிலே வேலை செய்றவங்களுக்கு ஆச்சரியமா இருக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்படுமுங்க. ஊக்கத்தொகை, குடும்ப வளர்ச்சி, பணக்கடன், பணி உயர்வை எளிதாக பெறுவீங்க. உடன் வேலை பார்க்கிறவங்களும் ஒத்துழைப்பை நல்லமுறையில் தருவாங்க. குடும்பத்தை கவனிக்கிறவங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள் போனா தான் நல்ல நேரம் பிறக்கும். உங்க புத்திர, புத்திரிகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்க. குடும்பத்துக்கு வரப்போகிற கெட்ட பெயரை தடுத்தாகணுமே! தாய்வீட்டாரிடம் பொருள் வாங்குறதிலே கொஞ்சம் மனக்கசப்பு வந்து நீங்கிடும். சுய, கூட்டுத்தொழில் செய்றவங்க வளம் பெறுவாங்க. பணவசதி திருப்தியா இருக்கும். சமூகப்பணியில் ஆர்வமும், அதனால் புதிய பொறுப்புகளும் பெறுவீர்கள்.


அரசியல்வாதிகள்: ஏழரை வந் தாலும் வந்துச்சு. போகிறவன் வர்றவனெல்லாம் எதிர்த்தானே என்று புலம்பித் தீர்த்தீர்கள். இனி, உங்களை புறக்கணித்தவர்கள் எல்லாம் ஆதரிக்கும் நல்ல வேளை வந்துட்டுது. மேலிடத்தில், உங்க சொல்லுக்கு மரியாதை இருக்கும். ஆதரவாளர்களை கணிசமாக பெறுவீங்க. அரசு அதிகாரிகளிடம் உங்க கோரிக்கை இனிதே நிறைவேறும். புதிய வீடு, வாகனம் போன்ற செல்வங்கள் சேரப்போகுது. புத்திரர்களை மட்டும் உங்கள் விஷயத்தில் இருந்து ஒதுக்கி வையுங்க. எதிரிகளும் உங்களிடம் மறைமுகமான வகையில் பலன்பெற விரும்புவர். அரசியலோட தொழில் நடத்துறவங்க வளர்ச்சியும், வாகன அபிவிருத்தியும் கிடைக்கப் பெறுவீங்க.


விவசாயிகள்: நல்ல நேரம் வந் தாச்சு! தேவையான பணவசதி திருப் திகரமாக கிடைக்குமுங்க. பசுக்கள் பாலைக் கொட்டும். பயிர் பாதுகாப்பு விஷயத்துக்கு எக்குத்தப்பா செலவாகத்தான் செய்யும். இருந்தாலும் செலவுக்கு தக்க வருமானம் இருக்குமுங்க. வாய்க்கால், வரப்பு பிரச்னைகள் விலகிப் போயிடுங்க.

Login form
Login:
Password:

Search

Calendar
«  மார்கழி 2017  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz