கலைமகள் செட்டிகுளம் வவுனியா திங்கள்
2018-04-23
2:01 PM

Welcome Guest | RSS Main | ரிஷபம்.. | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

சனிப்பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம்


பேச்சிலேயே அனைவரையும் கவர்ந்து விடும் ரிஷப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அனுகூலமாக இருந்த சனிபகவான் இப்போ அர்த்தாஷ்டம (நான்காம்) இடத்திற்கு சிம்மராசியில் பெயர்ச்சியாகிட்டாருங்க. இனிமே உங்க பேச்சு எடுக்கவா போகுது! சரி... பலனைக் கேளுங்க! நான்காம் இடத்தில் அமர்ந்துள்ள சனிபகவான் தனது 3, 7, 10 ஆகிய பார்வையால் ராசிக்கு 6, 10, ராசி ஆகிய இடங்களை பார்க்கிறார். இதனால் எந்த செயலையும் நன்கு பரிசீலித்த பிறகே செய்ய வேண்டும். திட்டமிடாமல் தொடங்கி விட்டு விழிக்கக்கூடாது. வெளியில் யாரிடம் பேசினாலும் சண்டை வரும். பேச்சைக் குறையுங்க. மீறி வந்துட்டா விட்டுக்கொடுத்து போயிடுங்க! பார்வையில் சாந்தமும், தீட்சண்யமும் இருக்கும் என்பதால் கவலைப்படாதீங்க!  இளைய சகோதரர்கள் மனம் விரும்பி உதவிசெய்வாங்க! சமூகத்தில் உங்களுக்கு இருக்கிற நல்லபேரை காப்பாத்திக்கிடறது இனிமே உங்க கையில் தான் இருக்கு. ஏதாவது ஏடாகூடமா நடந்துகிட்டா அபகீர்த்தி வந்து சேரும், கவனங்க! ஏற்கனவே வாங்கிப்போட்ட வீடு, மனையிலே நிறைய பிரச்னை வரும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சு வைச்சிடுங்க! அபிவிருத்தி பணிகளில் அரசின் சட்டதிட்டம் அறிந்து அதன்படி செஞ்சிடுங்க! இல்லாட்டி, வீண்தண்டம், சட்டப்பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தாய்வழி உறவினர்கள் கொஞ்சம் நெருங்கி வந்தாங்க! திரும்பவும் பிச்சுகிட்டு போற வழியைப் பார்ப்பாங்க! போகட்டும், விட்டுடுங்க, காலம் வரும்போது தேடி வருவாங்க! ஆனாலும், புத்திரர்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்றதாலே சந்தோஷமா இருக்கும். அவங்க உங்களுக்கு உறுதுணையா இருந்து பெருமை தேடித்தருவாங்க. பூர்வ சொத்தில் வருமானம் நிறைய கிடைக்குமுங்க! கஷ்டம் வரப்போற வேளையிலே, பூர்வத்தில் செஞ்ச புண்ணிய பலம், இஷ்ட தெய்வ அருளும் துணைநின்று காப்பாற்றும்! கவலை வேண்டாங்க! எதிரிகளால் இருந்த தொந்தரவு குறைஞ்சு போகும். ஆரோக்கியத்துக்கு ஒன்றும் பெரிய பாதிப்பில்லே!கணவன், மனைவி சந்தோஷமா இருப்பீங்க! மனைவி வேலைக்கு போகிறவங்களா இருந்தா அவங்களுக்கு உதவி செஞ்சு நல்லபேர் வாங்குவீங்க. நண்பர்கள் நல்லவிதமா பழகுவாங்க. புது நண்பர்களும் வருவாங்க! தந்தைவழி உறவினர்களோட நீண்டதூர பயணம் போகிற வாய்ப்பு கிடைச்சா அதை தவிர்க்கப் பாருங்க! வசதியை கூட்டணுங்கிற ஆசையிலே கடனை வாங்கி அவஸ்தைப்படாதீங்க. தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் இப்போ இருக்கிற நல்லபேரை காப்பாத்தி கிட்டாலே போதும். பெருசா வருமானமெல்லாம் எதிர்பார்க்காதீங்க! ஆதாய பணவரவு இருக்குங்கிறதுக்காக, அதை தனியார்கிட்டே முதலீடு பண்றது, பைனான்ஸ் பண்றதுன்னு இறங்கினா இருக்கிறதும் பிச்சுகிட்டு போயிடுமுங்க! அதை பாதுகாப்பான இடங்களிலே டெபாசிட் செஞ்சிடுங்க. நண்பர் தானே, உறவுக் காரர் தானேன்னு யாருக்காவது பணவிஷயத்தில் ஜாமீன் போட்டு மாட்டிகிடாதீங்க. மூத்த சகோதரர் கூட குடும்ப விவகாரங்களில் வாக்குவாதம் வரும். எதுக்கு வம்பு, ஒதுங்கிப் போயிடுங்களேன்!வெளியூர், வெளிநாடு வேலைவாய்ப்புக்கு சந்தர்ப்பம் கிடைக்குமுங்க. வெளியூர் பணியிலே உள்ளவங்களுக்கு உள்ளூர் டிரான்ஸ்பர் கிடைக்குமுங்க. தொழிலதிபர்கள்: நீங்க தொழிற் பயிற்சி நிறுவனம், டிராவல் ஏஜன்சி, விவசாய கருவி, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, சூரிய அடுப்பு, வாட்டர் ஹீட்டர், அழகு சாதனப் பொருள், பெயிண்ட், சாயப்பொடி, ஜவுளி, உணவுப் பொருள், இறைச்சி ஏற்றுமதி, நட்சத்திர அந்தஸ்து ஓட்டல், தங்கும் விடுதி நடத்துறவங்களா இருந்தா தொழிலாளர்கள் கிட்ட ரொம்ப சுமூகமாக போணுமுங்க! உங்களுக்கு வாகனம் இயக்குபவர்களை அதிக கவனத்துடன் இருக்கச் சொல்லுங்க! பூர்வ சொத்து வருமானம் அதிகரித்து வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துமுங்க! தொழில் போட்டி குறைந்து வெளியிட ஆர்டர்கள் கூடுதலாக வந்து சேருமுங்க.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையிலே பணிபுரிபவங்களா இருந்தா, ரொம்ப சிரம பட்டா தான் வேலைகளை முடிக்க முடியுமுங்க! என்ன செய்றது. இரண்டரை வருஷத்தையும் சிரமப்பட்டு தள்ளிடுங்க! செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கை நிறைவேற்ற இயலும். அதிகாரிகள் சொல்றதைக் கேட்டு அப்படியே நடந்துகிட்டா பிரச்னை வராதுங்க. சக பணியாளர்கள் நல்ல நட்போட இருப்பாங்க! லேத், வெல்டிங், உணவுப்பொருள் உற்பத்தி, டிரைவர், மின்சாரம் தொடர்புடைய பணியிலே இருக்கிறவங்க ரொம்ப கவனமா இருக்கணுமுங்க! பணவரவு ஏதோ இருக்குமுங்க! கடந்த காலத்திலே வாங்கின நல்லபேரு இப்போ கைகொடுத்து உதவுமுங்க! ஆபீஸ்வேலையா வெளியூர், வெளியே போனா, வாகனங்களில் கவனமா பயணம் செய்யுங்க!வியாபாரிகள்: மின் உபகரண சாதனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருள், குளிர்பானம், உணவுப்பொருள், எண்ணெய், பாத்திரம், மீன், இறைச்சி, குழந்தை விளையாட்டு சாதனங்கள், பொம்மைகள், பீங்கான் பொருள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஹீட்டர், சூரிய அடுப்பு, செல்போன், கேமரா, வீட்டு உபயோக சாதனங்கள் கடை வைச்சிருக்கிறவங்க வாடிக்கையாளர்களை அனுசரிச்சு நடந்துகிட்டா பிரச்னை ஏதும் இல்லீங்க! தொழில் போட்டியால் தொந்தரவு இருக்காதுங்க. குடும்ப உறுப்பினர்கள் உதவியா இருப்பாங்க! அபிவிருத்தி வகைக்காக ரொம்ப கடன் வாங்கி மாட்டிக்கிட வேண்டாங்க.மாணவர்கள்: மின்சாதனம், கேட்டரிங், அழகுக்கலை, ஆடை வடிவமைப்பு, சிவில் இன்ஜினியரிங், கண் மருத்துவம், விவசாயம், தோட்டக்கலை, மின்னணு சாதன வடிவமைப்பு, தகவல் தொழில்நுட்பம், சினிமாத்துறை மற்றும் விளம்பர மாடலிங், அரசு நிர்வாகம், சட்டம், நீதி, தொல் பொருள் ஆராய்ச்சி, ஓவியம் பயிற்சி பெறும் மாணவர்கள் நிறைய மார்க் வாங்கணுங்கிற லட்சியத்தோட படிச்சா தான் தேற முடியுமுங்க! மத்தவங்களுக்கு பிரச்னை ஏதும் இல்லீங்க! படிக்கிற பணவசதிக்கு பஞ்சமிருக்காதுங்க! சக மாணவர்களுடன் நட்புறவு பலமா இருக்குமுங்க. பெற்றோரின் எண்ணங்களை புரிஞ்சு ஒழுங்கா படிச்சா, கருத்துவேறுபாடு வராதுங்க. பெரியவங்க சொல்றதைக் கேட்காட்டி சனீஸ்வரனுக்கு கோபம் நிறைய வருமுங்க! சினிமா, பீச், காதல்னு அலைஞ்சா நஷ்டம் மட்டுமில்லே! தொந்தரவும் வருமுங்க.பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையிலே வேலை பாக்கிறவங்க வேலைப்பளுவால அவஸ்தைப்படுவாங்க. பணிசார்ந்த நுட்பங்களை அறிந்துகொள்ள கூடுதலா பயிற்சி எடுத்துக்கங்க! சக பணியாளர் அன்போட இருப்பாங்க. குடும்பத்தை கவனிக்கிறவங்களுக்கு கணவரோட அன்பை பெறுவீங்க! பணவசதி குறைவாத்தான் இருக்குமுங்க. இருந்தாலும், ரிஷபம்னாலே சிக்கனம்னு பேரு வாங்கினவங்களாச்சே. சமாளிச்சுடுவீங்க! தாய்வீட்டிலே இருந்து ஏதோ சில பொருட்கள் அப்பப்போ கிடைச்சு செலவைக் கட்டுப்படியாக்குமுங்க. சுய, கூட்டுத்தொழில் செய்றவங்க அளவான மூலதனம் போட்டா போதுமுங்க. நகை, பணத்தை வீட்டிலே அதிகமா வைக்காதீங்க. நஷ்டப்பட வாய்ப்பு தெரியுதுங்க!அரசியல்வாதிகள்: நீங்க கடந்தகாலங்களில் நடத்தின சமூகப்பணிகளுக்குரிய பலன் இப்போ கிடைக்குமுங்க. எதிர்ப்பு குறையுமுங்க. புத்திரர்கள் உங்க வளர்ச்சிக்கு துணையா இருப்பாங்க. மாமன், மைத்துனர்களும் உதவி செய்வாங்க! ஆதரவாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பாங்க! கொடுக்காட்டி என்னாகுமுனு உங்களுக்கே தெரியாதா? பிறகென்ன செய்றது. கொடுத்துடுங்க. அரசியலோட தொழில் நடத்துறவங்களுக்கு நஷ்டப்படும் வாய்ப்பு தெரியுதுங்க.விவசாயிகள்: கவலைப்படாதீங்க! நீங்க உழைப்பாளி. உழைப்பாளிகளை சனீஸ்வரருக்கு ரொம்பவே பிடிக்கும். மண்வளம் சிறக்குமுங்க! அபரிமிதமான வளர்ச்சியாலே மகசூல் அதிகரிக்குமுங்க. கால்நடைகள் தான் நஷ்டம் தருமுங்க. பராமரிப்பு செலவு கூடும், போகட்டும். பசுக்களை பாதுகாத்தா அந்த பரமனோட அருள் கிடைக்குமுங்க. வாய்க்கால், வரப்பு பிரச்னை விலகிடுங்க.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2018  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz