கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2018-01-18
8:30 PM

Welcome Guest | RSS Main | விருச்சிகம் ......... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0


தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்


விருச்சிகம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)

விசாகம் 4, அனுஷம், கேட்டைசுமார் (50/100)

உங்கள் ராசிக்கு, பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் ராகு வருடத்தின் முற்பகுதியிலும், சனிபகவான் வருடத்தின் பிற்பகுதியிலும் நற்பலன்களை வழங்கும் வகையில் உள்ளனர். பிற கிரகங்களின் தாக்கத்தால் இன்பமும் சிரமமும் கலந்திருக்கும். வாழ்வில் முன்னேற்றம் பெற வாய்ப்புக்கள் தேடி வரும். நீங்கள் உள்ளதையே பேசினாலும் பொல்லாப்பைத் தேடிக் கொள்ளும் நிலை ஏற்படும். உங்களுக்கு நம்பிக்கையானவர்களும் கூட துரோக குணத்துடன் நடந்து கொள்வர். தம்பதியர் ஒற்றுமை நன்றாக இருக்கும். மங்கல நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்காது. பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புக்கு முயற்சிப்போருக்கு கிடைப்பதற்கு வழியுண்டு.

தொழிலதிபர்கள்: கிரானைட் கற்கள், பட்டாசு, தீப்பெட்டி, அடுப்பு, ஜெனரேட்டர் மெழுகுவர்த்தி, காகிதம், மரஅறுவைமில், இரும்பு, டெக்ஸ்டைல்ஸ், வாகனம் சார்ந்த தொழில் செய்வோர் கூடுதல் நிர்வாக செலவுகளுக்கு உட்படுவர். ஓரளவுக்கு லாபம் இருக்கும். மற்றவர்களுக்கு இவர்களை விட அதிகமான லாபம் கிடைக்கும். ஆஸ்பத்திரி நடத்துவோர், சாலை, பாலம் கட்டுமான பணி ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் தொழிலில் கூடுதல் வரவேற்பு பெறுவர். தாராள பணவரவு கிடைக்கும். மே, ஜூன், ஜூலையில் உங்களுடன் கூட்டுசேர சிலர் முயற்சிப்பர். அவர்களைச் சேர்ப்பதில் சிரமம் ஏற்படும்.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தேயிலை, காபி, மருந்து, விவசாய இடுபொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மின்சார உபகரணங்கள், மெழுகுவர்த்தி, பூ, கட்டுமானப் பொருட்கள், உடற்பயிற்சி கருவிகள் வியாபாரத்தில் உள்ளவர்கள் சுமாரான லாபமே பெறுவர். மற்ற பொருட்களை விற்பவர்களுக்கு இவர்களை விட அதிகமான லாபம் இருக்கும். மே, ஜூன், ஜூலையில் விற்பனை நார்மலாக இருக்கும். சரக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அதிகமாக கொள்முதல் செய்தால் நஷ்டப்படும் நிலை உருவாகும்.

பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணியில் குறைபாடு ஏற்பட்டு அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு பிரச்னைகள் வரும். இயந்திரம், நெருப்பு, மின்சாரம் உட்பட நுட்பமான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கவனமுடன் பின்பற்ற வேண்டும். சலுகைகள் குறைந்து கடன் வாங்கும் நிலை உண்டாகும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் உழைப்புக்கேற்ற பணவரவு திருப்திகரமாக கிடைக்கும்.


மாணவர்கள்: மருத்துவம், சிவில் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சினிமா தொழில்நுட்பம், ஜர்னலிசம், விவசாயம், கேட்டரிங், ஓட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படித்து, ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பான தேர்ச்சியடைவர். மற்ற துறை மாணவர்கள் சுமாராகப் படிப்பர். படிப்புக்குரிய செலவுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், மந்தநிலை காரணமாக பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். சலுகைகள் குறைந்த அளவே கிடைக்கும். பிறருக்காக ஜாமீன் கையெழுத்து போடுபவர்கள் பணவிஷயத்தில் சிக்கலை சந்திக்கும் நேரமாக இருக்கிறது. குடும்பப்பெண்கள் கணவருடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு குடும்பத்தின் சந்தோஷத்தை வளரச்செய்வர். ஆபரணங்கள் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. குடும்பச் செலவுக்கு திண்டாட்டமாகவே இருக்கும். சுயதொழில்புரியும் பெண்கள் கடும் வேலைப்பளுவைச் சந்திப்பர். ஆனால், அதற்கேற்ற வருமானத்தை எதிர்பார்க்க இயலாது.

அரசியல்வாதிகள்: வெளிப்படையாகப் பேசி நல்லதையே செய்ய விரும்பினாலும் கூட கெட்ட பெயரே வந்து சேரும். அரசியல் வளர்ச்சியில் தேக்கநிலை ஏற்படும். ஆதரவாளர்கள் நம்பிக்கை குறைவுடன் நடந்து கொள்வர். சம்பாதித்ததை பிடுங்கும் வகையிலோ, அந்த பணத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலோ சிலர் நடந்து கொள்வர். இதனால் அவர்களுடன் பேரம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். வழக்கு விவகாரங்களில் அனுகூலத்தீர்வு பெறுவீர்கள். புத்திரர்களை அரசியல் பணிக்கு பயன்படுத்திக் கொள்வது சிறப்பான பலனைத்தரும்.தொழில் நடத்துபவர்கள், லாபநோக்கத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் தொழில்வாய்ப்பும் உதவும் ஒன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தில் நடந்து கொள்ளவேண்டும்.

விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான பணவசதியைப் பெற கடும் முயற்சிக்கு உட்படும் சூழ்நிலை உள்ளது. மகசூல் அதிகம் கிடைப்பதற்கு இல்லை. கால்நடை வளர்ப்பில் குறைந்த அளவில்தான் பண வருமானம் கிடைக்கும். நில விவகாரங்கள் உள்ளவர்களுக்கு சட்டசிக்கல் காரணமாக சாதகமற்ற நிலையே நிலவி வரும்.


பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் வாழ்க்கை மகிழ்ச்சி தருவதாக மாறும்.

செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

பரிகாரப் பாடல்:

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே!

Login form
Login:
Password:

Search

Calendar
«  தை 2018  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz