கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2018-04-25
10:56 PM

Welcome Guest | RSS Main | கன்னி........ | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

கன்னி ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)

உத்திரம் - 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2திருப்தி (45/100)
உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் குருவும், கேதுவும் மட்டும் அளப்பரிய நற்பலன்களை வழங்கும் இடத்தில் உள்ளனர். வருட மத்தியில் பெயர்ச்சியாகும் ராகு, சனி பெரிய அளவில் மாற்றம் எதையும் தராது. உங்களின் தற்போதைய செயல்கள் உத்வேகத்துடன் இருந்து கூடுதல் வெற்றியை பெற்றுத்தரும். பேச்சில் இனிமையும், நிதானமும் அவசியம் பின்பற்ற வேண்டும். சகோதரர்களிடம் அன்பு, பாசம் வளரும். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. புத்திரர் பிடிவாத குணங்களுடன் செயல்படும் தன்மை உள்ளது. உடல்நலம் வருட முற்பகுதியில் சீராக இருக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமர்வு பெறுகிறார். இந்த சமயங்களில் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. குடும்பத்தின் முக்கிய தேவைகளுக்காக சொத்து மற்றும் பொருள்களின் பேரில் கடன் வாங்கும் நிலை ஏற்படும். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுத்தால் கடும் சிரமங்களுக்கு ஆளாக நேரும். தம்பதியர் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பு திருப்திகரமாக அமைய சனிப்பெயர்ச்சி உறுதுணையாக இருக்கும்.தொழிலதிபர்கள்: கல்வி, நிதிநிறுவனம் நடத்துவோர், எண்ணெய் மின்சாதனங்கள், பர்னிச்சர், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், எழுது பொருட்கள், இரும்பு தொழிற்சாலை அதிபர்கள் புதிய யுக்திகளை புகுத்தி முன்னேற்றம் பெறுவர். கட்டுமானப் பொருட்கள், உணவுப் பண்டங்கள் தயாரிப்பு தொழிலில் இருப்பவர்கள் மே, ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் ஆர்டர் கிடைத்து ஆதாய பணவரவு பெறுவர். மற்ற்வர்களுக்கு ஓரளவு லாபமிருந்தாலும், உற்பத்தி,  நிர்வாகச்செலவு அதிகரிக்கும்.வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், விளையாட்டு பொருட்கள், பர்னிச்சர், அலங்காரப் பொருட்கள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், விவசாய இடுபொருட்கள், வாசனை திரவியம், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் வியாபாரம் சிறக்க கடும் பாடுபட வேண்டியிருக்கும். மூலதனத்துக்கேற்ற லாபம் இருக்காது. ஜாதக பலம் சரியில்லாதவர்கள் கடன் பெற்று வியாபாரத்தை தக்க வைக்க வேண்டி வரும். சரக்கு வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், முழுகவனத்துடன் செயல்பட்டு பணிஇலக்கை செவ்வனே நிறைவேற்றுவர். சக பணியாளர்களுடன் கருத்து மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. கண்காணிப்பு, மேற்பார்வை, காவல் போன்ற உள்ளவர்களுக்கு சோதனையான காலகட்டம். இவர்கள் பொறுப்புடன் செயல்படாவிட்டால் பிரச்னைகள் அதிகமாகும். சிலர் கவனக்குறைவால் அலுவலகப் பொருட்களை தவறவிட்டு பொருள் இழப்பு, நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றை சந்திக்கும் தன்மை ஏற்படும். கேஷியர் பொறுப்பில் உள்ளவர்கள் அன்றாடம் வரவு செலவை சரிபார்த்து கொள்வது நல்லது. பணம் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.
மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், வானியல், மருத்துவம், கேட்டரிங், தகவல் தொழில் நுட்பம், ஜர்னலிசம், அழகுக்கலை, விளம்பர மாடலிங், சிவில் இன்ஜினியரிங், சட்டம், வியாபார மேலாண்மை உள்ளிட்ட துறை மாணவர்கள், சுயதிறமையைப் பயன்படுத்தி நல்ல தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் சுமாராகப் படிப்பர். படிப்புக்கான செலவு அதிகரிக்கும்.பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள், சோம்பல் தலைதூக்குவதன் காரணமாக பணிகளில் கவனம் செலுத்தாமல் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாவர். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு, வீட்டுச் செலவுக்கு திண்டாடுதல் ஆகிய பலன்களை எதிர்கொள்ள நேரிடும். அதே நேரம், சுபநிகழ்ச்சிகள் குறித்த முயற்சி நிறைவேறும். சுயதொழில்புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளைச் செய்யும் போது அதிக செலவை சந்திக்க வேண்டியிருக்கும். வியாபாரம் நன்றாக இருக்கும்.அரசியல்வாதிகள்: அறிமுகம் இல்லாதவர்களுடன் கொண்ட தொடர்பால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆனாலும், அவற்றைத் தகர்த்து பணிகள் சிறந்து புகழையும், பொருளையும் பெற்றுத்தரும். ஆதரவாளர்கள் அதிக நம்பிக்கை வைப்பர். எதிரிகள் இடம்மாறிப் போகிற நன்னிலை உண்டு. வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். புத்திரரை அரசியல் பணிக்கு பயன்படுத்தி சிக்கலில் மாட்டுவீர்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் கவுரவம் தரும் பதவி பொறுப்பு கிடைக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள், பணியாளர்களின் உதவியால் வளர்ச்சியும், வருமானமும் பெறுவர்.
விவசாயிகள்: மகசூல் செலவு அதிகரிக்கும். புதிய உழவுக்கருவிகளை வாங்கி பயிரிட்டாலும் செலவுக்கேற்ற வருமானம் இராது. விவசாய வளர்ச்சிக்கடன் பெறுவதில் தாமதம் ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் கால்நடை வளர்ப்பிலும், விவசாயத்திலும் லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரங்கள் உள்ளவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு குறைவே.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும், பணவரவும் கூடும்.
செல்ல வேண்டிய தலம்: நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்
பரிகாரப் பாடல்:

மாருதி உண்டேல் சோருதல் இல்லை
ஆறுதல் அவனே அவனே இறைவன்
காரியம் காரணம் ஆனவன் அவனே
கருதிய நிகழ்த்தும் கண்ணனும் அவனே

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2018  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz