கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2018-04-19
2:21 PM

Welcome Guest | RSS Main | சிம்மம்......... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

சிம்மம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)

மகம், பூரம், உத்திரம் - 1சுமார் (55/100)

உங்கள் ராசிக்கு பிரதான கிரகங்களில், ராகு வருட முற்பகுதியில் துவங்கும் செயல்களில் முழுமையான வெற்றியைத் தருவார். கேது பகவான் அக்டோபரில் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் போது வளம் நிறைந்த வாழ்வை தருவார். தற்போதைய ஜென்மச்சனியும், உங்கள் மனதில் குழப்பமான சிந்தனைகளை உருவாக்கும் நிலையில் உள்ளது. இதனால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வ புண்ணிய பலன்கள் கிடைப்பதில் தடை ஏற்படும். தானதர்மம் செய்தால் இது சரியாகி விடும். குடும்பத்தின் தேவைக்காக கடன் வாங்க வேண்டியிருக்கும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான கும்பராசியில் அதிகார வக்ர கதியாக அமர்வு பெறுகிறார். அப்போது, அதிர்ஷ்டக்காற்று பலமாக வீசும். இந்த சமயங்களில் உங்களது செயல்களில் முழு வெற்றி கிடைக்கும். திருமண முயற்சி இனிதாக நிறைவேறும். கடன்களை அடைப்பீர்கள். தம்பதியர் ஒற்றுமை சிறப்பாக அமையும். நண்பர்கள் ஒரு உதவியைச் செய்துவிட்டு, பல உதவிகளை எதிர்பார்த்து இம்சைப்படுத்துவர். வெளிநாடு வேலை வாய்ப்பில் கேது பெயர்ச்சிக்கு பின் அனுகூலம் உண்டு.

தொழிலதிபர்கள்: இரும்பு, காகிதம், மின்பொருட்கள், அடுப்பு, பால் பொருட்கள், உணவுப்பொருட்கள், டெக்ஸ்டைல்ஸ், அலங்காரப் பொருட்கள், பாத்திரம் உற்பத்தி செய்பவர்கள் கூடுதல் தொழில்வாய்ப்பு பெற்று அதிக உற்பத்தியும் சேமிக்கும் வகையில் பணவரவும் பெறுவர். மார்பிள், சோப்பு, அழகுசாதனப் பொருட்கள், பிளாஸ்டிக், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்பவர்களுக்கு சுமாரான வருமானமே இருக்கும். மற்ற தொழிலதிபர்களுக்கு அவ்வளவு விசேஷமான வருமானம் இருக்காது.

வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, ரப்பர், தோல், அலங்கார பொருட்கள், பாத்திரங்கள், பெயின்ட், வாசனை திரவியங்கள், பீங்கான் பொருள் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான லாபமே இருக்கும். ஏழரைச்சனியின் தாக்கத்தால் மற்றவர்களுக்கு இவர்களை விட குறைந்த லாபமே எதிர்பார்க்கலாம். சரக்கு வாகனம் வாங்குவீர்கள். மே, ஜூன், ஜூலை மாதங்களில் வியாபார வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை நிறைவேற்றி ஆதாய பலன் பெறுவீர்கள்.

பணியாளர்கள்: அரசு, தனியார்துறையில் பணிபுரிபவர்களுக்கு கவனச்சிதறல் காரணமாக அதிகாரிகளின் கண்டிப்புக்கு அடிக்கடி ஆளாக நேரிடும். சலுகைகள் சுமாராக கிடைக்கும். தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கும் இதே நிலையே. குறிப்பாக, எலக்ட்ரிக்கல், கொதிகலன் இயக்குதல், வாகனம் இயக்குதல் ஆகிய தொழில் செய்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே விபத்து அணுகாத நன்னிலை ஏற்படும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் பணிஉயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.


மாணவர்கள்: விவசாயம், இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், சட்டம், நிர்வாகப்பணி சார்ந்த படிப்புகள், சினிமா தொழில்நுட்பம், கேட்டரிங், ஓவியப்பயிற்சி பெறும் மாணவர்களின் படிப்பு சொல்லிக் கொள்ளும்படி இராது. அனுபவசாலிகளின் உதவி, ஆலோசனையுடன் செயல்படுவதால் தேர்ச்சி பெறலாம். படிப்புக்கான பணவசதி, திருப்திகரமாக இருக்கும்.


பெண்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அவ்வளவு உயர்வான ஆண்டல்ல. கடந்தகால அனுபவங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் அதிகாரிகளின் கண்டனத்துக்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். சலுகைகளுக்கும் அவ்வளவாக இடமில்லை. குடும்பப் பெண்கள், கணவரின் நல்அன்பும், நிறைவான பொருளாதார வசதியும் பெற்று குடும்பத்தை சிறப்புற நடத்துவர். சுயதொழில் புரியும் பெண்கள் அபிவிருத்தி பணிகளை செவ்வனே நிறைவேற்றுவர். வியாபாரம் சுமாராக இருக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்த கால செயல்களுக்கான முழுபலனையும் பெறுகின்ற முயற்சியில் கவனமுடன் ஈடுபடுவீர்கள். எதிரிகள் பலமிழந்து சீரான நற்பலனை கொண்டு வரும். ஆதரவாளர்கள் உங்கள் மீது அதிக நம்பிக்கை கொள்வர். மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருவின் அனுகூலப் பார்வையால் மனதில் சந்தோஷமும், செயல்களில் அபரிமிதமான வெற்றியும் ஏற்படும். பதவிப்பொறுப்பு வந்து சேரும். அரசியலில் நம்பகமானவர் மற்றும் திறமைசாலிகளைப் புறக்கணிக்க வேண்டிய சூழல் வரும். இதைச் செய்தால் சிக்கல் ஏற்படக்கூடும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள், சீரான வளர்ச்சியும், சுமாரான லாபமும் பெறுவர்.


விவசாயிகள்: விவசாயத்தை நடத்துவதற்கு தேவையான கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். கிடைத்த மகசூலை பிறர் எடுத்துச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மே, ஜூன், ஜூலை மாதங்களில் கால்நடை வளர்ப்பிலும், பிறவகைகளிலும் கூடுதல் பணவரவு கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்னை இருந்தால் சுமுக தீர்வுக்கு வரும்.

பரிகாரம்: தெட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வாழ்க்கையில் அதிக நற்பலன் கிடைக்கும்.

செல்ல வேண்டிய கோயில்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்.

பரிகாரப் பாடல்:

ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கருளிச் செய்து
நூலின்கீழ் அவர்கட்கெல்லா நுண்பொருளாகி நின்று
காலின்கீழ் காலன்தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யுமானார் பழனத்தெம் பரமனாரே.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2018  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz