கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-19
10:25 PM

Welcome Guest | RSS Main | மிதுனம்2 | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

மிதுனம் ( சித்திரை டூ பங்குனி-விரோதி ஆண்டு)

மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3



செலவு (50/100)




உங்கள் ராசிக்கு இந்த வருடம் பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றில் சனி பகவான் மட்டுமே நற்பலன் தரும் வகையில் உள்ளார். பணவரவு ஓரளவுக்கு இருக்கும் என்றாலும் செலவுகளின் தாக்கம் கிறங்கடிக்கும். பணம், பொருள் திருட்டுப் போகவும், பணம் பெற்றவர்கள் திருப்பிக் கொடுக்காமல் வஞ்சிக்கவும் இடமிருக்கிறது. கவனம். வீடு, வாகன வகையில் வருடத்தின் முற்பகுதியில் திருப்திகரமான தன்மை இருக்கும். செப்டம்பரில் சனிப்பெயர்ச்சியின் காரணமாக தொந்தரவு ஏற்படும். புத்திரர்கள் தகுதி திறமையை வளர்த்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.



மே, ஜூன், ஜூலை மாதங்களில் குருபகவான் அதிகார வக்ரகதியாக கும்பராசியில் அமருகிறார். இது சமயம் புத்திரர்களுக்கு வேலைவாய்ப்பு, சுபகாரிய நிகழ்வு எளிதாக நிறைவேறும். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி உண்டு. குடும்பத்தில் கணவன், மனைவி ஒற்றுமையில் அவ்வப்போது பிரச்னை இருந்தாலும், பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு நம்பகமானவர்களின் உதவி கிடைக்கும்.




தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, கட்டுமானப்பொருள் உற்பத்தி செய்பவர்களும், கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி நிறுவனம், அச்சகம், ரியல்எஸ்டேட், ஆஸ்பத்திரி, டிராவல்ஸ் நடத்துபவர்கள் குறைபாடுகள் காரணமாக மனச்சோர்வு அடைவர். ஓரளவுக்கு லாபம் இருக்கும். பணியாளர்களின் உறுதுணை சிறப்பாக கிடைக்கும். புதிய கிளை துவங்கும் வாய்ப்புகள் மே, ஜூன், ஜூலை மாதங்களில் நிறைவேறும்.அழகுசாதனம் மற்றும் கலைப்பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் அதிக லாபம் காண்பர். புதிய வீடு, வாகனம் வாங்கவும் அனுகூலம் உள்ளது. மற்றவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் இருக்கும்.




பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனக்குறைவாகப் பணியாற்ற வாய்ப்பிருக்கிறது. இதனால் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக கல்வித்துறை, இயந்திரப் பணியாளர்களக்கு இந்த சோதனை அதிகமாக இருக்கும். கவனம். சலுகைகள் அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் உற்பத்தி பொருளின் தரக்குறைவு காரணமாக அபராதம், சஸ்பெண்ட் போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரலாம்.




வியாபாரிகள்: ஸ்டேஷனரி, மளிகைப் பொருட்கள், எண்ணெய், ஜவுளி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அலங்காரப் பொருட்கள், வாசனை திரவியங்கள், பர்னீச்சர், விளையாட்டு சாமான், மருத்துவ உபகரணம், மருந்து விற்பனை செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவினால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு யோகம் உண்டு.



மாணவர்கள்: இசை, நடனம், ஓவியம், மாடலிங், அழகுக்கலை, ஆடை வடிவமைப்பு, பழ வகைகளை பதப்படுத்துதல், விவசாயம், மருத்துவம், மூலிகை வளர்ப்பு, தோட்டக்கலை, இலக்கியம், வானியல், மரைன், ஏரோநாட்டிக்கல் துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள், முழு கவனத்துடன் சுயதிறமையையும் பயன்படுத்தி தரத் தேர்ச்சி பெறுவர். மற்ற துறையினர் இவர்களை விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவும், குடும்பத்தில் சந்தோஷம் தழைக்கவும் உதவுவீர்கள்.




பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆர்வம் குறையும். பணிகளை முடிக்க முடியாமல் ஏதோ ஒரு மந்தநிலை ஏற்படும். பதவி உயர்வு, விரும்பிய பணியிட மாற்றம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் நல்அன்பும், சீரான பணவசதியும் பெற்று சந்தோஷ வாழ்வு நடத்துவர். ஆபரண சேர்க்கை மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்தடன் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். தொழில் சிறந்து ஆதாய பணவரவு கிடைக்கும்.



அரசியல்வாதிகள்: உங்களுக்கு உரிய கவுரவமும், மதிப்புமிக்க பதவியும் கிடைக்கும். எதிரிடையாக செயல்பட்டவர்கள் வியப்படையும் நிலை உருவாகும். ஆதரவாளர்கள் உங்கள் மீது கூடுதல் நம்பிக்கை கொள்வர். யாராக இருந்தாலும் நியாயமாக நடந்து பிரச்னைகளை பைசல் செய்வீர்கள். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். புத்திரர்களுக்கு அரசியலில் வாய்ப்புகளைப் பெற மே, ஜூன், ஜூலை மாதங்கள் உதவிகரமாக இருக்கும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்களுக்கு திறமைமிக்க பணியாளர் கிடைப்பர். ஆனால், விற்பனை சரிவால் பெரிய லாபத்தை எதிர்பார்க்க இயலாது.




விவசாயிகள்: மகசூல் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதை ஈடுகட்டும் வகையில் கால்நடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் அமையும். நிலம் தொடர்பான விவகாரங்களில் பிடிவாத குணத்துடன் செயல்படுவதால் பிரச்னை கூடுதலாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி மே, ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பாக நிறைவேறும்.




பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் சிரமம் விலகி நன்மை வளரும்.



செல்ல வேண்டிய தலம்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்


பரிகாரப் பாடல்:

கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச்சங்க மேல்திசையுள்
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெண்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது எங்கென்று கொலோ!

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz