கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2018-05-27
4:03 AM

Welcome Guest | RSS Main | மீனம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஆண்டுபலன்

மீனம்

80/100 (நல்லாயிருக்கு)


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி


சுய திறமையை வளர்ப்பதில் ஆர்வமுள்ள மீனராசி அன்பர்களே!


புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் குரு, ராகுவும், ஐந்தில் கேது, ஆறில் சனி என்கிற வகையில் கிரநிலை உள்ளது. உங்கள் ராசிக்கு குரு, சனி, ராகு ஆகிய கிரகங்கள் மிகுந்த அனுகூல பலன்களை தர உள்ளனர். வேறு எந்த ராசியினருக்கும் கிடைக்காத அனுகூலத்தை உங்களுக்கு இந்த மூன்று கிரகங்களும் வழங்குகின்றனர். மனதில் நினைத்த திட்டங்கள் நிறைவேறும். உங்களை சார்ந்தவர்கள் கூடுதல் மதிப்பும் மரியாதையும் தருவர். பணவரவு அதிகம் பெற புதிய வாய்ப்பு பலவிதத்திலும் உருவாகும். உற்சாக மனதுடன் சமூகப்பணியிலும் ஈடுபடுவீர்கள்.


வீடு, வாகன வகையில் வளர்ச்சி தரும் மாற்றங்களைச் செய்ய உகந்த நேரம். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தாயின் தேவையை பூர்த்திசெய்து அன்பையும் ஆசியையும் பலமாக பெறுவீர்கள். புத்திரர்களை வாழ்வில் உயர்த்த பாடுபடுகிறோம் என்கின்ற எண்ணத்தில் அவர்களிடம் அதிக கண்டிப்புடன் செயல்படக்கூடாது. இதனால் எதிர்மறை பலன் ஏற்படலாம். தேவை. கடன் பாக்கிகளை பெருமளவு அடைப்பீர்கள். எதிரிகளின் செயல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றலும் தைரியமும் பெறுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். தாமதமான விவகாரங்களில் வெற்றி செய்தி தேடிவரும்.


தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்புரிந்து குடும்பத்தின் நற்பெயரை உயர்த்துவர். நண்பர்கள் உதவுவர். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த நன்மைகளும் வந்து சேரும். தொழில் சார்ந்த வகையில் வியக்கும் அளவிற்கு வளர்ச்சியும் கூடுதல் பணவரவும் கிடைக்கும். ஆதாய பணவரவை சேமிப்பாகவும், முதலீடாகவும் மாற்றுவீர்கள். வெளியூர் பயணம் சிறப்புற அமைந்து இனிய அனுபவங்களை பெற்றுத்தரும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு சுபமங்கல நிகழ்வு உண்டு. ஆண்டின் முற்பகுதி நன்றாக இருந்தாலும் செப்டம்பருக்கு பிறகு நடக்கும் சனி, ராகு-கேது, குரு பெயர்ச்சிகளில் எந்த கிரகமும் அனுகூல பலன் தரும் இடங்களில் அமர்வு பெறவில்லை. இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் உங்கள் செயல்களில் நிதானம் பின்பற்றுவது நல்லது. சில எதிர்மறை பலன்கள் ஏற்படலாம்.


தொழிலதிபர்கள்: கல்வி நிறுவனம், பங்குச்சந்தை வர்த்தகம், கண் மருத்துவமனை, ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம், நிதிநிறுவனம், நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், இரும்பு, சணல், காகிதம், வாகனங்கள், குளிர்பானம் உற்பத்தி செய்வோர் தொழில்வளர்ச்சி பெற்று ஆதாய பணவரவு பெறுவர். தொழிலில் இருந்த இடர் விலகும். மற்றவர்களுக்கும் அபிவிருத்தி பணியைச் செய்யவும், புதிய கிளை துவங்குவதுமான நற்பலன் பெறுவர். சமூக அந்தஸ்துள்ள பதவிப்பொறுப்பு கிடைக்கும். பணியாளர்கள் இணக்கமுடன் பணிபுரிந்து தரம் மற்றும் உற்பத்தியை பெருக்குவர்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, கட்டுமானப்பொருட்கள், வாகனம், ஸ்டேஷனரி, காகிதப் பொருட்கள், புத்தகம், கேசட், பிளாஸ்டிக், பாத்திரம், உடற்பயிற்சி கருவிகள், இசைக்கருவி, பர்னிச்சர், வீட்டு உபயோக சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வாடிக்கையாளர் கிடைத்து வியாபார வளர்ச்சியும் தாராள பணவரவும் பெறுவர். மற்றவர்கள் இவர்களை விட அதிக லாபமடைந்து அபிவிருத்தி பணியையும் புதிய கிளை துவங்கும் முயற்சியையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவர். போட்டி பெருமளவு குறையும். அரசு வகை உதவி பெறலாம்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சுய தகுதி, திறமையை பயன்படுத்தி பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். நிர்வாகத்தின் பாராட்டும் சலுகையும் திருப்திகரமாக கிடைக்கும். மார்க்கெட்டிங், ஏற்றுமதி இறக்குமதி, டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தனியார் நிறுவன பணியாளர்கள் ஊக்கத்தொகை பெறும் வாய்ப்பு ஏற்படும்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் பணியிடங்களில் அனுகூல சூழ்நிலை அமைந்து பணி இலக்கை செவ்வனே நிறைவேற்றுவர். எதிர்பார்த்த பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக நடந்து எதிர்கால வளர்ச்சிக்குரிய பணத்தையும் சேமிப்பர். புத்திரர்களால் சிறு தொல்லை இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் வளர்ச்சி பணியை செவ்வனே நிறைவேற்றுவர். சந்தை வாய்ப்பில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். தொழில் சிறந்து அதிக லாபம் பெறுவீர்கள்.


மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, ஆடிட்டிங், பிசினஸ் மேஜேன்மென்ட், சிவில் இன்ஜினியரிங், இலக்கியம், ஜர்னலிசம், அரசு நிர்வாகப்பயிற்சி, வணிகவியல், மருத்துவம், ஓட்டல் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பயிற்சிபெறும் மாணவர்கள் லட்சிய மனப்பான்மையுடன் படித்து படிப்பில் நல்ல தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் இவர்களையும் விட சிறப்பாகப் படிப்பர். படிப்புக்கான பணவசதி தாராளமாக கிடைக்கும். பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு கவுரவம் தருகின்ற வகையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். சக மாணவர்கள் நல்லன்பு பாராட்டுவர்.


அரசியல்வாதிகள்: சமூகப்பணியில் சாதனை நிகழ்த்தும் வகையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். முயற்சிகள் பெருமளவிலான வெற்றியைத்தரும். சமூக அந்தஸ்துள்ள பதவி பொறுப்பு கிடைக்கும். உங்களின் ஆதரவாளர்களை தம் வசம் ஈர்க்கும் மாற்றாரின் முயற்சி பயனற்று போகும். வழக்கு விவகாரங்களில் புத்தி சாதுர்யத்துடன் சமரச தீர்வை உருவாக்குவீர்கள். புத்திரர்கள் எதிர்மறையாக நடக்க நேரிடும். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் திறமைமிகு பணியாளர்களின் உதவியால் தொழில் வளர்ச்சியும் ஆதாய பணவரவும் பெறுவர்.


விவசாயிகள்: விவசாயப்பணிகள் சிறந்து அதிக மகசூலை பெற்றுத்தரும். பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். கால்நடைகளால் மிதமான அளவில் ஆதாயம் பெறுவீர்கள். நிலம் தொடர்பான விவகாரம் அனுகூல தீர்வு தரும்.


கலைஞர்கள்: உற்சாகமாக செயல்புரிந்து கலைத்திறமையை வெளிப்படுத்துவீர்கள். பாராட்டும் பரிசும் பணவரவும் தாராளமாக கிடைக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம்: அபிராமி அம்மன்


பரிகாரப் பாடல்:


உதிக்கின்ற செங்கதிர்! உச்சித்திலகம்! உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம்; மாதுளம் போது! மலர்க்கமலை!


துதிக்கின்ற மின்கொடி! மென்கடிக் குங்குமதோயம் என்ன


விதிக்கின்ற மேனி! அபிராமி எந்தன் விழுத்துணையே.

Login form
Login:
Password:

Search

Calendar
«  வைகாசி 2018  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz