கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-03-28
3:22 PM

Welcome Guest | RSS Main | கும்பம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஆண்டுபலன்

கும்பம்

50/100 (பிரச்னை)


அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3


நியாயமான செயல்களுக்கு மதிப்பளிக்கும் கும்பராசி அன்பர்களே!


புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் குரு, ராகுவும், ஆறில் கேது, ஏழில் சனி என்ற வகையில் கிரகநிலை உள்ளது. கேது ஒருவரே அதிக நற்பலன்களை வழங்கும் நிலையில் உள்ளார். வாழ்க்கையை சரிவர நடத்த என்ன செய்யலாம் என்று அலைபாய்ந்த மனதுடன் செயல்படுவீர்கள். இடம், பொருள் அறிந்து பேசுவதால் மட்டுமே நற்பெயரை தக்கவைக்கலாம். சிலரது கவர்ச்சிகரமான பேச்சில் மயங்கி பயன்பாடு அதிகம் தராத பொருட்களை வாங்கும் நிலை ஏற்படும். எதிர்கால பலன்தரும் என்ற நம்பிக்கையில் தகுதியற்ற நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பணத்தை டெபாசிட் செய்துவிடாதீர்கள். இதனால் மன உளைச்சலும் பணவிரயமும்தான் ஏற்படும். இளைய சகோதரர்கள் நண்பருக்கு இணையாகப் பழகுவர். வீடு, வாகனம் சார்ந்த வகையில் அதிகபட்ச மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம். புத்திரர்கள் நல்லவிதமாக நடந்துகொள்வர். பூர்வசொத்தில் வருமானம் சீராகும். எதிரிகளால் தொல்லை வருமோ என்கிற அச்சம் தேவையில்லை. உங்களின் செயல்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வதே உங்கள் வாழ்வுக்கு உரிய பாதுகாப்பை தரும்.


தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்படுவதால் மட்டுமே குடும்ப மகிழ்ச்சியை பாதுகாக்க இயலும். நண்பர்களில் சிலர் நிம்மதி தரும் வழி என்ற தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் கிரகநிலை உள்ளது. சுய கவுரவம் எண்ணி செயல்படுவதால் நிலைமை சீராகும். பணவரவைவிட செலவு அதிகரிக்கும். அதே சமயம் ஜாதகத்தில் சுப பலத்தில் சுக்கிரன் உள்ளவர்களுக்கு கூடுதல் பணவரவும் சொத்து, ஆபரண சேர்க்கையும் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் உங்களின் செயலை கவனித்து வாழ்வில் முன்னேற்றம் பெற தகுந்த ஆலோசனை சொல்வர். தொழில் சார்ந்த வகையில் செயல்பாடு சீராக இருக்கும். தொழிலில் இடையூறாக செயல்பட்டவர்களே உதவி செய்து உங்கள் தொழிலை வளப்படுத்தும் மாறுபட்ட அனுகூல சூழ்நிலையைப் பெறுவீர்கள். கொடுத்த கடன், அரியர்ஸ் போன்றவற்றைப் பெறுவதற்கான சூழ்நிலை மிதமான அளவில்தான் உள்ளது. செப்டம்பருக்கு பிறகு நடக்கும் சனி, ராகு-கேது, குரு பெயர்ச்சிகளில் உங்கள் ராசிக்கு ராகு மட்டுமே அனுகூல பலன்களை தருவார். நவம்பர், டிசம்பர் மாதங்களில் பணவரவு அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள்.


தொழிலதிபர்கள்: டெக்ஸ்டைல்ஸ், சிமென்ட், தோல், இரும்பு, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்து, உணவு பண்டங்கள், பர்னிச்சர், இயந்திர உதிரிபாகங்கள், விவசாய கருவிகள், உரம், பூச்சிகொல்லி மருந்து உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் ஆர்டருக்கு ஏற்ப பொருள் உற்பத்தி செய்வதால் நிர்வாக பணச்செலவை குறைக்கலாம். மற்றவர்களுக்கும் கூடுதல் முயற்சியினால் மட்டுமே தொழில்வளம் சீராகும். மிகப்பெரிய லாபம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், கடந்த காலங்களில் உங்களிடம் இருந்து விலகிச் சென்றவர்களே ஆர்டர் தருவர். இதனால் வரவும் செலவும் சரியாகும். மருத்துவமனை, ரியல் எஸ்டேட், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல் நடத்துவோருக்கு ஓரளவு லாபம் கிடைக்கும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, அரிசி, இரும்பு, கட்டுமானப்பொருட்கள், சணல், வாகன உதிரிபாகங்கள், உணவு பண்டங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மீன், இறைச்சி வகைகள், பழம், காய்கறி, மலர், விளையாட்டு சாதனங்கள், மருந்து, விவசாய இடுபொருட்கள், குளிர்பானம், தென்னை, பனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்பவர்கள் வாடிக்கையாளர் சேவை, பொருட்களின் தரத்தை பாதுகாத்தல் ஆகிய செயல்களால் மட்டுமே லாபம் பெற இயலும். மற்றவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். சரக்கு வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். புதிய கிளை துவங்குவதில் கவனம் செலுத்துவதை காட்டிலும் இருக்கும் வியாபாரத்தை உயர்த்த பாடுபடுவது உத்தமம்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியிடங்களில் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் தொழிலில் இலக்குகளை சரியாக நிறைவேற்றலாம். சக பணியாளர்கள் தாம் நற்பெயர் பெறும் நோக்கில் உங்களுக்கு இடைஞ்சல் தரலாம். சலுகைகள் சுமாரான அளவிலேயே கிடைக்கும். உணவு பண்டங்கள் தயாரிப்பு, மருத்துவ சேவை, கலைப்பொருட்கள் வடிவமைப்பு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டிரைவிங், இயந்திரப் பணியில் உள்ளவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே பொருள் நஷ்டம் மற்றும் பிற வகை இழப்புகள் எதுவும் வராமல் தவிர்க்க இயலும். செலவு அதிகரிக்கும்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியில் குறை எதுவும் வராத அளவிற்கு முன்யோசனையுடன் செயல்பட வேண்டும். பணி இலக்கை தாமதமாகவேனும் நிறைவேற்றிவிடுவீர்கள். நிர்வாகத்திடம் சலுகை பெற நிர்பந்தம் வேண்டாம். குடும்ப பெண்கள் செலவுக்கு திண்டாடுவர். சிக்கன பணச்செலவை மேற்கொள்வர். தாய்வீட்டு சீர் வரிசை பெறுகிற வகையில் கிரக அனுகூலம் உள்ளது. சிலருக்கு அதிர்ஷ்டவசமாக ஆபரண சேர்க்கை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பால் தொழிலில் வளர்ச்சி பெறுவர்.


மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், கேட்டரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மரைன், சட்டம் ஆகிய துறைகளில் பயிற்சிபெறும் மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவர். தரத்தேர்ச்சி அதிகரிக்கும். மற்றவர்கள் நிலையும் பரவாயில்லை. படிப்பிற்கான பணம் கிடைக்க தாமதம் ஏற்படும்.


அரசியல்வாதிகள்: கடந்த நாட்களில் பெற்ற நற்பெயரை மூலதனமாக கொண்டு அரசியல் பணியில் ஈடுபடுவீர்கள். ஆதரவாளர்கள் அதிக எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வர். மக்கள் நல கோரிக்கை நிறைவேற்றி தர அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவர். உங்களின் தளராத முயற்சி மட்டுமே உரிய பலனை பெற்றுத்தரும். எதிரிகளை சமாளிக்கும் வல்லமை பெறுவீர்கள். அரசியல் பணிக்கு புத்திரரின் உதவியை அதிகம் பயன்படுத்த வேண்டாம். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் விற்பனையிலும் பணவரவிலும் தேக்க நிலையை காண்பர்.


விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான பணவசதி குறைந்த அளவில் இருக்கும். கடன் பெற்று விவசாய பணிகளில் ஈடுபடுவீர்கள். மகசூல் சீரான அளவில் இருக்கும். கால்நடை அபிவிருத்தியும் அதனால் கூடுதல் பணவரவும் கிடைக்கும். நில விவகாரங்களில் அனுகூல தீர்வு உண்டு.


கலைஞர்கள்: பணி வாய்ப்பு பெற அதிக முயற்சியுடன் செயல்பட வேண்டும். சிலருக்கு கடந்த காலங்களில் புறக்கணித்த நபர்களாலேயே புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம்: ராமன்.


பரிகாரப் பாடல்:


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே


தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே


சென்மமும் மரணமும் இன்றித் தீருமே


இம்மையே ராமவென்ற இரண்டெழுத்தினால்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2024  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz