கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2017-04-28
8:58 AM

Welcome Guest | RSS Main | சிம்மம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ஆண்டுபலன்


சிம்மம்

50/100 (சோர்வு)


மகம், பூரம், உத்திரம் - 1


அடுத்தவர் வாழ்விலும் அக்கறை கொண்ட சிம்மராசி அன்பர்களே!


புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு, ராகுவும், ராசியில் ஜென்மச்சனி, பன்னிரெண்டில் கேது என்கிற வகையில் கிரகநிலை உள்ளது. இவர்களில் ராகு ஒருவரே அதிக நற்பலன் களை உங்களுக்கு தரும் வகையில் உள்ளார். சனி மனதில் சோர்வையும், குரு உடல் பலவீனத்தையும் தருவார். இருப்பினும் ராகுவின் அனுகூல அமர்வு உங்களின் செயல்களை வெற்றி தரும் அற்புத சக்தியாக மாற்றும். உங்களின் பேச்சில் கவர்ச்சி நிறைந்திருக்கும். அதிக துணிச்சலுடன் சில செயல்களில் ஈடுபடுவீர்கள். உழைப்பிற்குரிய புகழ் கிடைப்பதுடன், வருமானமும் வந்து சேரும். சகோதரர்களை முன்னேற்றப் பாதையில் வழி நடத்துவீர்கள்.


வீடு, வாகன வகையிலான பலன்கள் சுமாராகவே இருக்கும். பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புத்திரர்கள் கவனக்குறைவாகச் செயல்படுவர். அவர்களை பாதுகாப்புடன் வழிநடத்துவது நன்மையைத் தரும். இஷ்ட தெய்வ வழிபாடு குடும்ப வளர்ச்சிக்கு தேவைப்படும் நற்காரணிகளை பலப்படுத்தும். உங்களின் எண்ணங்களுக்கு முரண்பட்டவர்களும் தொழில் சார்ந்த வகையில் நட்பு பாராட்ட விரும்புவர். சாதக, பாதகம் உணர்ந்து செயல்படுவதால் தகுந்த நன்மை கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்து முடியும். உடல்நலத்தில் அவ்வப்போது பாதிப்பு இருக்கும். கணவன், மனைவி ஒற்றுமையாக நடந்துகொள்வர். நண்பர்கள் அனுசரணையாக இருப்பர். குடும்பம் மற்றும் பிறவகைகளில் அதிக செலவு ஏற்படும். வருமானத்தைப் பெருக்க மிக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்வரும் துன்பம் விலகும் வகையில் ராகு கிரக நல்லருள் உள்ளது.


தொழில் சார்ந்த வகையில் புதிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். தொழில் சிறந்து திருப்தி தரும் வகையிலான வெற்றியைத்தரும். சகோதரர்களின் கருத்தை மதித்து நடப்பதால் நன்மைகள் ஏற்படும். வெளியூர் பயணம் அதிகரிக்கும். இந்த வருட ராகு-கேது, சனி பெயர்ச்சி அனுகூலம் தரும் நிலையில் இல்லை.


தொழிலதிபர்கள்: கம்ப்யூட்டர், செல்போன், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், இசைக் கருவிகள், நவீன பர்னிச்சர், அழகு சாதனப்பொருள், கண்ணாடி, பீங்கான் பொருட்கள், சிமென்ட் மற்றும் இதர கட்டுமானப் பொருட்கள், பால் பொருட்கள், காகிதம், டெக்ஸ்டைல்ஸ், விளையாட்டு சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் உற்பத்தி பெருக்கமும் தாராள பணவரவும் பெறுவர். சந்தைப் போட்டி பெருமளவு குறையும். கல்வி நிறுவனம், நட்சத்திர ஓட்டல், திருமண மண்டபம், திரையரங்கம் நடத்தும் தொழிலதிபர்கள் தொழில் சிறந்து தாராள பணவரவு பெறுவர்.


பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உத்வேகத்துடன் செயல்புரிந்து பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். சக பணியாளர்கள் நல்மனதுடன் உதவுவர். சிலருக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்ற நற்பலன்கள் கிடைக்கும். தொழில்நுட்ப துறை சார்ந்த பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பும் அதிகபட்ச வருமானமும் கிடைக்கப்பெறுவர்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, அலங்கார பொருட்கள், பாத்திரம், வாசனை திரவியங்கள், பர்னிச்சர், பால் பொருட்கள், உணவு பண்டங்கள், மளிகை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், இறைச்சி, அடுப்பு, ஜெனரேட்டர் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் சந்தை வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தி தொழில் வளர்ச்சி பெறுவர். மற்றவர்களுக்கு இவர்களை விட சுமாரான வருவாயே கிடைக்கும். சந்தையில் போட்டி அதிகரிக்காதவாறு புதிய யுக்தியுடன் செயல்படுவீர்கள்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். கடந்த காலத்தில் பெற்ற நற்பெயர் தற்போது பணிசிறக்க உறுதுணையாக இருக்கும். தாமதமான சலுகைகளை பெறுவதற்கு அனுகூல சூழ்நிலை உருவாகும். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பை பெறும் வகையில் ஒற்றுமை மனதுடன் செயல்படுவர். உறவினர்களிடம் இருந்த பகைமை எண்ணம் மாறி நற்பெயர் கிடைக்கும். புத்திரர்களை நல்வழி நடத்துவதில் கவனம் கொள்வீர்கள். சுயதொழில் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணியை மேற்கொள்வர். புதிய சந்தைவாய்ப்பு கிடைத்து தொழில்வளம் சீராகி அதிகபணவரவைப் பெற்றுத்தரும்.


மாணவர்கள்: தகவல் தொழில்நுட்பம், ஏரோநாட்டிக்கல், கம்ப்யூட்டர், சினிமா தொழில்நுட்பம், அழகுக்கலை, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், ஓவியம், மருத்துவம், விவசாயம், பவுதிகம், ரசாயனம் ஆகிய துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் படிப்பில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். மற்ற துறை மாணவர்கள் சுமாராக படிப்பர். படிப்புக்கான பணவசதியில் நிறைவான தன்மை நீடிக்கும். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணையாக நடந்துகொள்வர். பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு கிடைக்கும்.


அரசியல்வாதிகள்: நியாய தர்மங்களை அதிகம் பின்பற்றும் மனப்பாங்கு ஏற்படும். நற்செயல்களால் அதிக புகழும் கூடுதல் ஆதரவாளர்களையும் பெறுவீர்கள். எதிரிகளை தகுந்த தருணத்தில் எதிர்த்து வெற்றி கொள்வீர்கள். புத்திரர்களை அரசியல் பணிக்கு அளவுடன் பயன்படுத்துவது நல்லது. அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் திறமையும் நேர்மையும் நிறைந்த பணியாளர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் காண்பர். ஆதாய பணவரவு கிடைக்கும்.


விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். தேவையான பணவசதி நிறைவாக கிடைக்கும். மகசூல் சிறந்து அதிக லாபம் பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் அனுகூல பலன் உண்டு. நிலம் தொடர்பான விவகாரம் சாதக நிலையை உருவாக்கும்.


கலைஞர்கள்: எதிர்வரும் போட்டியை சமாளித்து தொழிலில் புதிய சகாப்தம் படைப்பீர்கள். பணவரவு திருப்திகரமாகும். பாராட்டும் விருதும் கிடைத்து மனதில் உற்சாகம் பெறுவீர்கள்.


வணங்க வேண்டிய தெய்வம்: நாகராஜா


பரிகாரப் பாடல்:


வாழ்க அந்தணர், வானவர் ஆன்இனம்;

வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;


ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே


சூழ்க; வையகமும் துயர் தீர்கவே.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2017  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz