1, 10, 19, 28
அவசரம்,
அடிக்கடி உணர்ச்சிவசப்படுதல், நிர்ப்பந்தங்கள் காரணமாக சில முடிவுகள்
என்று இந்த வாரம் இருக்கும். ஆத்திரப்படுவதை தவிர்த்துக் கொண்டு ஆராய்ந்து
செயல்பட்டீர்களேயானால் நல்ல தீர்வுக்கு வழிவகுக்கும். முக்கியஸ்தர்களின்
சந்திப்புக்கள் சற்று தாமதமாகும். வெளிவட்டார பழக்க வழக்கங்களால் சில
காரியங்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். தொழில் வகையில் புதிய
திட்டங்கள், ஒப்பந்தங்கள் என விறுவிறுப்பான செயல்பாடுகளை கொண்ட வாரமாக இது
இருக்கும். வியாபாரிகளுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலும் வியாபாரம்
விரிவடையும் புதிய முதலீடுகளையும் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு,
பணிகளில் தாங்கள் மேற்கொள்ளும் தீவிரம் மேலதிகாரிகளால்
பாராட்டப்படும்.தொழிலாளர்களுக்கு, நண்பர்களின் உதவியுடன் சில
கான்ட்ராக்ட்கள் எடுத்து அதன் மூலம் வருமானம் கூடுதலாகும். பெண்களுக்கு,
தகுந்த நேரத்தில் தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குடும்பத்தில்
மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
பணம் வரும் தேதிகள்: 20, 22
பயன் உள்ள எண்கள்: 6, 8
2, 11, 20, 29
தேவையற்ற
தயக்கங்கள் மற்றும் தாமதங்கள் சற்று அதிகமாகவே இந்த வாரம் தங்களை
அலைக்கழித்த போதும் பாதிப்பு அதிகமில்லாமல் கொண்டு செல்வீர்கள். சில
விஷயங்களில் அதிகப்படியான சந்தேகங்களை ஏற்படுத்திக்கொள்வீர்கள்.
முடிந்தளவுக்கு தவிர்த்துக் கொள்ளுங்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களில்
எதையும் கவனமாகவே கொண்டு செல்லுதல் நல்லது. தொழில்துறையில் இழுபறியாக
இருந்த பிரச்னைகளை நல்லதொரு தீர்வுக்கு கொண்டு செல்வீர்கள். சந்தை
நிலவரங்களில் கவனம் இருக்கட்டும். வியாபார விரிவாக்கங்களில் கவனம்
செலுத்துவீர்கள். முதலீடுகளை கூட்டவும் சில முயற்சிகள் தேவையானதாக
இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, அன்றாட அலுவல்களை உற்சாகத்துடனும்
சுறுசுறுப்பாகவும் செய்து முடிப்பீர்கள். தொழிலாளர்களுக்கு, உழைப்புக்கு
ஏற்ற ஊதியம் கிட்டும். பெண்களுக்கு, பொன் ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.
கணவன்-மனைவி உறவில் சிறப்புகள் கூடும்.
பணம் வரும் தேதிகள்: 24, 25
பயன் உள்ள எண்கள்: 4, 9
3, 12, 21, 30
ஒவ்வொரு
விஷயங்களிலும் மிகத் தெளிவாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த வாரம்
செயல்படுவீர்கள். அதே நேரத்தில் தங்களின் வார்த்தைகளில் கவனம்
இருக்கட்டும். புதிய முயற்சிகளில் தகுந்த வெற்றியை எதிர்பார்க்கலாம்.
வெளிவட்டார பழக்க வழக்கங்கள் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தொழில்
துறையில் நல்லதொரு மாற்றங்கள் ஏற்படும். வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் பயன்
தரும். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை என்ற போதும் பாதிப்பு இல்லாத
சூழ்நிலையே. உத்தியோகஸ்தர்களுக்கு, நார்மலான பணிகள் தான் என்ற போதும்
மனச்சோர்வு அதிகமாக காணப்படும். தொழிலாளர்களுக்கு வருமானங்கள் கூடும்;
வசதிகளும் கூடும். கலைத் தொடர்புள்ள தொழில் புரிவோர்களுக்கு, எதையும்
கொஞ்சம் போராடியே முடிக்க வேண்டி இருக்கலாம். பெண்களுக்கு, எடுத்துக்
கொண்ட பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
பணம் வரும் தேதிகள்: 20, 24
பயன் உள்ள எண்கள்: 1, 3
4, 13, 22, 31
இந்த
வாரம் பல பணிகளையும் விரைந்து முடிக்க ஆவல் கொண்ட போதும் ஒவ்வொன்றாக
நிறைவேறக்கூடிய சூழ்நிலையே. முக்கியஸ்தர்களுக்கு தொடர்புகள் தகுந்த
நேரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். அரசியல்வாதிகளின் தொடர்புகளை பக்குவமான
முறையில் கொண்டு செல்லுதல் வீண் செலவுகளை தவிர்க்க உதவும். நண்பர்களின்
ஆலோசனைகளும் அறிவுரைகளும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நிதிநிலையில்
வரவுக்கு மீறிய செலவுகள் தான். கொடுக்கல் வாங்கல் வகையில் விழிப்புடன்
செயல்படுங்கள். வெளிவட்டார பழக்க, வழக்கங்களால் வீண் அலைச்சலும்
செலவுகளும் தான். தொழில் வகையில் புதிய முயற்சி, விரிவாக்கம் என
இருக்கும். வியாபாரிகளுக்கு, புதிய முதலீடுகளை செய்யக்கூடிய கால கட்டமே.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். தொழிலாளர்களுக்கு
வருமானம் கூடுதலாகும். பெண்களுக்கு, தங்களின் பேச்சுக்கள் பெருமை
சேர்க்கும்.
பணம் வரும் தேதிகள்: 19, 20
பயன் உள்ள எண்கள்: 2, 6
5,14,23
இந்த
வாரத்தில் ஏற்படும் சில நிகழ்ச்சிகள் தங்களை அதிகமான மன வருத்தத்தை
கொள்ளச் செய்யும். எந்தவொரு நிகழ்ச்சியும் ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்டவொன்று தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெளிவட்டார
பழக்க, வழக்கங்களில் கவனம் இருக்கட்டும். தொழில் துறையில்
விரிவாக்கத்துக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். பணியாளர்களை
தேர்ந்தெடுப்பதில் கவனம் இருக்கட்டும். வியாபாரிகளுக்கு பொருள் தேக்கம்,
கடன்களின் நிலை கவலை தரும். யோசித்து செயல்படுங்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு, பணிபுரியும் இடத்தில் முடிந்தளவுக்கு அமைதியாக
செல்ல முயற்சியுங்கள். தொழிலாளர்களுக்கு, சில புதிய முயற்சிகளில் இறங்க
சிந்தனை மேற்கொள்வீர்கள். சற்று தாமதப்படுத்துதல் நல்லது. பெண்களுக்கு,
சில செயல்பாடுகளால் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். பெற்றோர்களுக்காக சில
பணிகளை மேற்கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் டென்ஷன் கூடுதலாக
இருக்கும்.
பணம் வரும் தேதிகள்: 20, 22
பயன் உள்ள எண்கள்: 7, 9
6, 15, 24
இந்த
வாரத்தில் தாங்கள் எதிர்நோக்கியிருக்கும் விவகாரங்கள் அதிக கவலையை
ஏற்படுத்தியபோதும், தங்களின் தீவிர சிந்தனையால் நல்லதொரு தீர்வு
காண்பீர்கள். எதிர்பார்த்த வரவுகள் வரும். சில செலவுகளுக்காக கடன்களை
எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலையே.தொழிலிலோ சொத்துக்களிலோ முதலீடுகள்
மேற்கொள்ளும் போது தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
வெளிவட்டார பழக்கவழக்கங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில்
வகையில் திருப்தியற்ற நிலை என்றபோதும் பாதிப்பு என்று எதுவும் இருக்காது.
சரக்கு இருப்பு வைத்துக்கொள்வதில் கவனம் இருக்கட்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு, தேவையற்ற பேச்சுக்கள், மற்றும் விவகாரங்களை
தவிர்த்துக் கொள்ளுங்கள்.தொழிலாளர்களுக்கு, புதிய தொழில்களுக்காக கூட்டு
முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு, செயல்களால் சிறப்பு
பெறுவீர்கள். இல்லறத் துணையின் கருத்துகளுக்கும் தகுந்த மதிப்பு கொடுத்தல்
நல்லது.
பணம் வரும் தேதிகள்: 23, 25
பயன் உள்ள எண்கள்: 6, 9
7, 16, 25
இந்த
வாரம் சம்பந்தமில்லாமல் சில பணிகளுக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
சற்று யோசித்து செயல்படவும். முக்கியஸ்தர்களிடம் எதிர்பார்த்த உதவிகள்
சற்று தாமதப்படும். நிதிநிலையில் போதுமான வரவுகள் இருக்கும். வெளிவட்டார
பழக்க வழக்கங்களால் செலவுகளே. புதிய தொழில் முயற்சிகளுக்கு அவசரப்பட
வேண்டாம். நிதி தேவைகளை பூர்த்தி செய்ய தாங்கள் மேற்கொள்ளும்
நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் இருக்கட்டும். தொழில் துறையில் அடுத்தடுத்து
சில நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். சந்தை நிலவரங்கள் திருப்தி அளிக்கும்.
வியாபாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் இருந்த போதும் லாபம் பாதிக்காது.
உத்தியோகஸ்தர்களுக்கு, பணியில் உற்சாகம் அற்று செயல்படுவர். மனநிலையை
கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். தொழிலாளர்களுக்கு, முதலாளிகளின்
எண்ணத்துக்கு ஏற்ப தாங்களும் செயல்பட முயற்சியுங்கள். பெண்களுக்கு,
உடல்நிலையில் சில தொந்தரவுகள் ஏற்பட்டு விலகும். வீட்டிலும் பணிபுரியும்
இடத்திலும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பணம் வரும் தேதிகள்: 21, 23
பயன் உள்ள எண்கள்: 2, 7
8, 17, 26
முக்கிய
நிகழ்ச்சிகள், சந்திப்புக்கள் என பரபரப்போடு காணப்படுவீர்கள். வெளிவட்டார
பழக்க,வழக்கங்களிலும் தங்களின் புகழ் செல்வாக்கு கூடுதலாகும்.
நிதிநிலையில் பற்றாக்குறையான சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்பட்ட போதும்
சமாளிக்கக்கூடிய தன்மையும் கூடும். தொழில் துறையில் திடீர் நடவடிக்கைகளை
மேற்கொள்வீர்கள். சந்தை நிலவரங்களில் சற்று விழிப்புடன் செயல்பட
முயற்சியுங்கள். வியாபாரத்தில், பொருளின் தரத்தில் கூடுதல் கவனம்
இருக்கட்டும். வாடிக்கையாளர்களின் அணுகுமுறையில் கவனம் இருக்கட்டும்.
உத்தியோகஸ்தர்களுக்கு, அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள், சங்கடங்கள்
குறையும். சில சலுகைகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கு,
கூட்டு முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு இல்வாழ்வில் ஏற்றமுண்டாகும். குழந்தைகளால் சந்தோஷம் கூடும்.
பணிபுரியும் இடத்தில் குடும்ப விவகாரங்களை பேசுவதை தவிர்த்துக்
கொள்ளுங்கள்.
பணம் வரும் தேதிகள்: 20, 24
பயன் உள்ள எண்கள்: 1, 4
9, 18, 27
சில
காரணங்களால் அவசரமான செயல்பாடுகள், பொறுமையற்ற பேச்சுக்கள் என இந்த வாரம்
தங்களை அதிகமான டென்ஷனுக்கு ஆளாக்கலாம், இருப்பினும் அது கூட சில நன்மைகளை
ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையே. வெளிவட்டார பழக்க வழக்கங்கள் பயன் தரும்.
தொழில் வகையில் திருப்தியான சூழ்நிலை என்றபோதும் சந்தை நிலவரங்களில்
மிகுந்த கவனம் இருக்கட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம்
கிடைக்காது. கூட்டுகளில் கூட சில தொந்தரவுகளை சந்திக்க நேரலாம். புதிய
ஒப்பந்தங்களை கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, சில
சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். மேலதிகாரிகளின் கருணைப்
பார்வை தங்கள் மேல் ஏற்படும். தொழிலாளர்களுக்கு, நவீன தொழில்நுட்பங்களை
கொண்டு சில சாதனைகளை செய்வீர்கள். பெண்களுக்கு, சுப நிகழ்ச்சிக்கான
பேச்சுவார்த்தைகள் தீவிரமாகும். பெற்றோர்கள் மீது பாசம் கூடும்.
பணம் வரும் தேதிகள்: 23, 25
பயன் உள்ள எண்கள்: 2, 6