மேஷம்:
புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி காணும் நாள். கனிவான பேச்சுக்களால்
சிக்கலான நபர்களிடமும் காரியம் சாதிப்பீர்கள். உங்களின் ரகசியங்களை
மற்றவர்கள் அறிந்து கொள்ளாத வகையில் உஷாராக செயல்படுவீர்கள். பெண்களால்
சந்தோஷமான அனுபவங்களைப் பெறலாம். எதிர்பாராத பணவரவுகளைப் பெறலாம்.
ரிஷபம்:
சக ஊழியர்களை அல்லது நண்பர்களை கேலி, கிண்டல் செய்து பேசி அவர்களின்
கோபத்திற்கு ஆளாகலாம். தாயார் வழியில் அன்புத் தொல்லைகளைச் சந்திக்கலாம்.
சோர்வு, சோம்பல் அதிகரிக்கும். கடன் பாக்கிகளை, கட்டண பாக்கிகளை
செலுத்துவீர்கள். அவசரமாக முடிக்க வேண்டிய வேலை ஒன்றால் அலைச்சல்
ஏற்படலாம்.
மிதுனம்:
நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். பம்பரமாக சுழன்று பணியாற்றுவீர்கள்.
நீங்கள் கேட்காமலேயே சிலர் உதவி செய்ய முன்வரலாம். பழைய பொருட்கள்
சிலவற்றை மாற்றி புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கடந்த கால அனுபவம் ஒன்றை
நினைத்து பார்த்து புதிய விஷயங்களில் இறங்குவீர்கள். எதிர்ப்புகள் விலகி
ஏற்றம் பெறலாம்.
கடகம்:
பணிபுரிவோர் கடும் வேலை நெருக்கடிகளுக்கு ஆட்படலாம். குடும்பச் செலவுகள்
கட்டுக் கடங்காமல் செல்லும். உங்களின் பலவீனத்தை மற்றவர்கள் அறிந்து
கொண்டு விமர்சிக்கலாம். தொழில் ரீதியாக சிலர் கேட்ட உதவிகளைச்
செய்வீர்கள். நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவி செய்ய முன்வந்தும் அதை
நாசுக்காக மறுத்து விடுவீர்கள். பக்தி நாட்டம் கூடும்.
சிம்மம்:
உறவுகளால் சந்தோஷங்களையும், அனுகூலமான உதவிகளையும் பெறும் நாள். வரவாக
வந்த பணம் ஒன்றில் குறிப்பிட்ட அளவை மற்றொருவருக்கு கடனாக கொடுக்கலாம்.
விருப்பமான உணவு வகைகளைச் சாப்பிடுவதில் நாட்டம் செல்லும். பெரிய
பிரச்னையாகி விடுமோ என நினைத்த விஷயம் ஒன்று பிசுபிசுத்துப் போகலாம்.
கற்பனை வளம் அதிகரிக்கும்.
கன்னி:
அடுக்கடுக்காக பல வேலைகள் குவிந்தாலும், அனைத்தையும் அசராமல் செய்து
முடிப்பீர்கள். தம்பதியர் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் விலகி பாசம்
அதிகரிக்கும். பல நாட்களாக செல்ல நினைத்த ஒரு இடத்திற்கு செல்லலாம்.
உறவினர்களுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ சில பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
குதூகலமான நாள்.
துலாம்:
சிறிய செலவு ஒன்றுக்கு யோசித்த நீங்கள், ஒரு விஷயத்திற்காக பெரிய அளவில்
செலவிடலாம். தொழில் ரீதியான பயணங்கள் செல்லலாம். ஆலய வழிபாடுகள் மூலம்
அமைதி பெறுவீர்கள். உங்களின் செயல்பாடுகளை மற்றவர்கள் பாராட்டலாம்.
பெற்றோர்கள் வழியில் உதிரிச் செலவுகள் ஏற்படும். சோர்வு, சோம்பல் கூடும்.
விருச்சிகம்:
அவநம்பிக்கையும், ஆதங்கங்களும் மனதில் குடிகொள்ளும் நாள். நீங்கள் செய்த
சில வேலைகளை சிலர் தாங்கள் செய்ததாக காட்டிக் கொள்ளலாம். உறவினர்கள் சிலர்
உங்களின் மனம் நோகும் வகையில் பேசலாம். திட்டமிட்ட பயணங்களில் திடீர்
மாற்றங்களைச் செய்யலாம். சக ஊழியர்கள் விடுமுறையால் கூடுதல் வேலைப்பளு
ஏற்படும்.
தனுசு:
பெரிய மனிதர்கள் சிலரின் ஆதரவு கிட்டும். மகிழ்ச்சியான, சந்தோஷமான
அனுபவங்களைப் பெறலாம். ஏட்டிக்குப் போட்டியாக செயல்பட்ட நண்பர்கள்
அனுசரணையாக நடந்து கொள்வர். எந்த விஷயத்திலும் திடமான முடிவுகள்
எடுப்பீர்கள். பழகிய சிலர் மூலம் பணவரவுகளைப் பெறலாம். அம்மன் வழிபாட்டின்
மூலம் ஆறுதல் பெறலாம்.
மகரம்:
வியக்க வைக்கும் செய்திகளைக் கேட்கலாம். தொழில் ரீதியாக தந்திரமாக
செயல்பட்டு கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். பெண்கள் வகையில் அனுகூலமான
உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் சிலரின் அன்புக் கட்டளைகளுக்கு ஆட்படலாம்.
நீண்ட நாட்களாக உங்களுடன் பேசாத ஒருவர் திடீரென தொலைபேசியில் பேசலாம்.
கடன்கள் வசூலாகும்.
கும்பம்:
துவங்கிய சில வேலைகளில், ஆரம்பத்தில் சுணக்கம் ஏற்பட்டாலும், பின்னர்
விறுவிறுப்பாக முடிவுக்கு வரும். உறவினர்கள் சிலருக்கு நல்ல யோசனைகள்
சொல்வீர்கள். சந்தோஷம் தரும் அல்லது சங்கடம் தரும் செய்தி ஒன்றை
கேட்கலாம். தர்ம, புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். வயிறு உபாதைகளுக்கு
ஆட்படலாம்.
மீனம்:
வேண்டாத விவகாரங்களில் தலையிட்டு மன உளைச்சல்களுக்கு ஆட்படலாம். சக
ஊழியர்களின் ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடுகளால் எரிச்சல் அடையலாம்.
சிக்கனமாக இருக்க நினைத்தாலும், ஏதாவது ஒரு வழியில் தண்டச் செலவுகளைச்
சந்திக்கலாம். நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன்
வாக்குவாதங்களில் ஈடுபடலாம்.