கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-19
9:53 PM

Welcome Guest | RSS Main | பனிக்காலம்... உடல் பராமரிப்புக்கு உரிய குறிப்புகள்..! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

பனிக்காலம்... உடல் பராமரிப்புக்கு உரிய குறிப்புகள்..!
 
 
பனிக்காலம்... மனதுக்கும் உடலுக்கும் குளிரூட்டக் கூடிய காலம் தான். ஆனாலும், இந்தக் காலத்தில் பலரது உடலுக்கும் சிறுசிறு இடர்பாடுகள் வரத்தான் செய்கிறது. கொஞ்சம் சிரத்தை மேற்கொண்டால், எவ்வித பிரச்சனையும் இன்றி பனிக்காலத்தை ரசிக்கலாம்!

பனிக்காலம் தொடங்கும் போதே நமது தலை முதல் கால் வரை ஒவ்வொருவிதமான தொல்லைகள் ஏற்படுகின்றது.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிரின் தாக்கத்தால் முடி வறண்டு போவது, பொடுகு தொல்லை, முகத்தில் சருமம் வரண்டுபோவது, கைகால்கள் விரைத்து விடுவது, கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பெடுவது போன்றவை நமக்கு வருகின்ற சாதரணமான தொல்லைகள் தான். இந்த பாதிப்பு வரமால் இருப்பதற்கு சில எளிய வழிகளை பின்பற்றினால் நம் உடலுக்கும், மனதுக்கும் மிகவும் ரிலாக்ஸ் கிடைக்கும். அதற்கான சில யோசனைகள்...

'முடி'யும் பிரச்சனை!

பனிக்காலத்தில் நமது முடியின் நிலையை பார்த்து வருத்தபடுபவர்களுடைய எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கும். ஏனென்றல், இந்த நேரங்களில் முடி வறண்டு போய், அதன் நுனி வெடித்திருக்கும். இதற்காக வருத்தப்படாதீர்கள். டீப் கண்டீஷனிங் செய்தால் போதும். வறண்ட முடிகளுக்கு தேவையான டீப் கண்டீஷனிங் இப்போது கடைகளில் கிடைக்கிறது.

முடிக்கு ஷாம்பு போட்டு கழுவி விட்ட பிறகு, முடியை டவலால் துடைத்து காய வைக்கவும். கண்டீஷனர் சிறிதளவு எடுத்து தலையில் இருந்து மூன்று இன்ச்சுக்கு கிழே முடியில் நன்றாக தேய்த்து கொள்ளவும். பிறகு முடி முழுவதையும் ஒன்றாக கட்டி வைக்கவும். பத்து நிமிடங்களுக்கு பிறகு முடியில் நிறைய தண்ணீரை கொண்டு கழுவிட்டு நன்றாக காயவிடவும் இப்படிச் செய்யவதால் முடி வரண்டுபோவதை தடுக்க முடியும்.

எண்ணெயில் சில சேஞ்ச்!

பனிக்காலங்களில் பொடுகு தொல்லை கூடுதலாக இருக்கும். தலைக்கு ஆயில் மசாஜ் செய்யும்போது தேங்காய் எண்ணெய் தான் உபயோகப்படுத்துவீர்கள் என்றால், அதில் ஒரு மாற்றம் அவசியமே.

தேங்காய் எண்ணெய் பனிக்காலங்களில் சருமத்தை வறண்டு போகச் செய்கிறது. அதனால் ஒரு கரண்டி ஆலிவ் ஆயில், ஒரு கரண்டி ஆல்மண்ட் ஆயில், ஒரு கரண்டி ஆமணக்கு எண்ணெய் ஆகியவற்றை கலந்து முடியில் தேய்த்து மசாஜ் செய்யவும். பிறகு, வெந்நீரில் பிழிந்த துண்டினால் தலையில் ஆவி பிடிக்க வேண்டும். அதன்பின், ஊற வைத்த வெந்தயம், முட்டை ஆகியவற்றை நன்றாக கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடத்துக்குப் பிறகு ஷாம்பு போட்டு கழுவவும். இதனால் நல்ல பலன் கிட்டுவது உறுதி.

ஃபேஷ் வாஷ்..!

பனிக்காலங்களில் ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தி முகத்தைக் கழுவுவதனால் சருமம் மேலும் வறண்டு போகலாம். சாதாரண ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு பதிலாக மாய்ஸ்டரைசர் (Moisturizer) அடங்கிய ஃபேஷ் வாஷ் உபயோகப்படுத்தலாம்.

இல்லையெனில், கிளைன்ஸிங் மில்க் உபயோகப்படுத்துவதால், முகம் கூடுதலாக வறண்டு போகாமல் தடுக்கலாம்.

இல்லை இன்னொரு சுலபமான வழி உள்ளது. ஊறவைத்த பாதாம் பருப்பை நன்றாக அறைத்து முகத்தில் தேய்ப்பது சருமத்துக்கு மிகவும் நல்லதொரு மோய்ஸ்டரைசேஷன்தான்.

தூங்குவதற்கு முன்...

இரவில் தூங்குவதற்கு முன்பு கை, கால்களில் மாய்ஸ்டரைசர் அடங்கிய பாடி லோஷனை தேய்க்கவும். உதடுகளில் வெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

பாதங்களில் வெடிப்பு இருந்தால், அதை போக்கவும் ஒரு வழி உண்டு.

சிறிது நேரம் சுட வைத்த தண்ணீரில் கால்களை 15 நிமிடம் வைக்க வேண்டும். பிறகு, க்யூமிக் ஸ்டோன் (கடைகளில் கிடைக்கக் கூடிய ஒரு வித கல்) கொண்டு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். கால்களில் வெடிப்பு இருக்கின்ற இடங்களில் சிறிது வாசலின் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் வெடிப்பு வருவதைத் தடுத்து விடலாம். தூங்கும் நேரங்களில் கால்களுக்கு மசாஜ் செய்த பிறகு சாக்ஸ் போட்டுக்கொள்ளவும்.

இத்தகைய எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், பனிக்காலத்தை மேலும் உற்சாகமாகவே எப்போதும் வரவேற்கலாம்!
Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz