கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2017-12-17
4:56 AM

Welcome Guest | RSS Main | உங்கள் சருமத்தை அறிந்து கொள்ளுங்கள் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

உங்கள் சருமத்தை அறிந்து கொள்ளுங்கள்
 
 
உங்களின் உடலழகிற்கு முக்கிய காரணமாயிருப்பது உங்களது சருமந்தான். பிறந்தது முதல் ஒருவர் தோலின் வளர்ச்சியைக் கவனித்து வந்தால், வயது ஆக ஆக, அவரது சருமத்தில் மாறுதல்கள் காணலாம். எவராலும் முதுமையைத் தவிர்த்துவிட முடியாது. ஆனால் தள்ளிப்போடலாம். அதற்கு நாம், சருமத்தை இள வயதிலிருந்தே நல்ல முறையில் பாதுகாத்து வருவது அவசியம்.

சருமம் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியாக இராது. காற்று, வெளிச்சம், குளிர், வெயில் ஆகியவற்றிற்கு ஏற்ப சருமத்தின் நிறமும், தன்மையும் மாறும். ஒருவரின் சருமம் வெண்மையாய் இருந்தால் அதை அழகு என்று கூறமாட்டார்கள். குறையாய் இருந்தாலும் மாசுமறுவற்ற சருமம் அமைவதே அழகாகும்.

சரும அழகைப் பாதுகாக்கத் தேவைப்படுவன ஆரோக்கியம், சுத்தம், சத்துள்ள உணவு, போதிய உடற்பயிற்சி ஆகியவையே ஆகும்.

போதிய உடற்பயிற்சி செய்தல், சத்துள்ள உணவுகளை உண்ணுதல், சுத்தமான பழக்கவழக்கங்கள், உடலுறுப்புகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற நல்ல பழக்கங்களை எப்போதும் கடைப்பிடிப்போரின் சருமம் அழகாகவும் தோற்றமளிக்கும்; ஆரோக்கியமாகவும் காணப்படும்.

இறைவன் இயற்கையில் நமக்கு அளித்திருக்கும் அழகை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக நாம் அலங்காரப் பொருள்களை உபயோகப்படுத்துகிறோம். ஆனால் நாம் உபயோகப்படுத்தும் அலங்காரச் சாதனங்கள் தரம் வாய்ந்தவையா அவை சருமத்துக்கு ஏற்றவையா என்பதைத் தெரிந்துகொண்ட பின்பு அவற்றை உபயோகிப்பது நல்லது.

முதலில் நம் சருமம் எந்த வகைப்பட்டது என்பதை அறிந்து கொள்வோம்.

உலர்ந்த சருமம் (Dry Skin)
இந்த வகைச் சருமம் எப்போதும் உலர்ந்து காணப்படும். இந்த வகைச் சருமம் கொண்டோரின் கை, கால்கள் சொர சொரப்பாகவும், பாதங்கள், உதடுகள் ஆகியன வெடிப்புடனும் காணப்படும். குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும், குளிர் காலங்களில் இவ்வகைச் சருமம் இருக்கும். தோல் அடிக்கடி உரிந்துவிடும். இவ்வகைச் சருமம் கொண்டவர்கள் ‘மாய்ஸ்ச்ரைசர்’ என்னும் திரவத்தைத் தினசரி உபயோகித்து வரவேண்டும்.

எண்ணெய்ப் பசையுள்ள சருமம் (Oil Skin)
இந்த வகைச் சருமம் கொண்டவரின் மேல்வாய், நெற்றி ஆகிய பகுதிகள் எண்ணெய் வழிவது போன்று தோற்றம் தரும். இவர்கள் பவுடர் மேக்கப் செய்தால் திட்டுத் திட்டாகத் தெரியும். சருமத் துவாரங்கள் திறந்திருப்பதால் எளிதில் முகத்தில் வெண் கருப்புப் புள்ளிகள் தோன்றக்கூடும்.

இவ்வகைச் சருமம் கொண்டவர்கள் முகத்திற்கு எவ்வித கிரீமும் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. முகத்தை சுத்தம் செய்ய “ஆஸ்ட்ரிஜென்ட்’ என்னும் திரவத்தை உபயோகிக்க வேண்டும். இவர்கள் கொழுப்புப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது; இரவு படுக்கைக்குப் போகுமுன் ‘ஹமாம்’ சோப்பை உபயோகித்து, முகத்தைக் கழுவுவது நல்லது.

நடுத்தரப்பட்ட சருமம் (Combinations skin)
இந்த வகை சருமம் கொண்டோரின் இருபுறமும் எண்ணெய் வழிவது போலவும், கன்னப் பகுதிகளின் சருமம் உலர்ந்தது போலவும் காட்சி அளிக்கும். இம்மாதிரி சருமம் கொண்டோர் கவனமாக மேக்கப் செய்ய வேண்டும்.

சிலருக்குச் ‘சென்ஸிடிவ் ஸ்கின்’ எனப்படும் அலர்ஜி ஏற்படுத்தக் கூடிய சருமம் இருக்கும். இவர்களுக்கு க்ரீம், பவுடர், சோப் போன்ற பொருள்கள் அலர்ஜியாக இருக்கலாம். இவர்கள் புதிதாக எந்தப் பொருளை உபயோகித்தாலும் ‘அலர்ஜி டெஸ்ட்’ எடுத்துவிட்டுத்தான் உபயோகிக்க வேண்டும்.

மேக்கப் பொருள்களை முகத்திற்கு உபயோகிக்குமுன் அவை தரமானவையா என்று கவனித்து வாங்க வேண்டும். வாங்கிய பொருளை ஆறு மாதத்திற்குள் உபயோகித்துவிடுவது நல்லது. புதிதாக வெளிவருகிற எல்லாவித அழகு சாதனங்களையும் முகத்திற்குப் பயன்படுத்திப் பரிசோதனை செய்வது நல்லதல்ல.

நம் சருமம் சாதாரணமாக, முப்பது வயதுவரை இறுக்கமாகவும், ஈரத்தன்மையோடும் இருக்கும். 30 வயதிற்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக உயிரணுக்களை இழந்துவிடும். இம்மாதிரிச் சமயத்தில்தான் நமது சருமத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சியும், உடல், முகம் இவற்றிற்கு ‘மசாஜ்’ செய்யவும் வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் இளமையாகத் தோற்றமளிக்கும்.

நம் சருமத்திற்கு ஏற்ற சோப், பவுடர் முதலியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடலைமாவும், பாசிப்பயறு மாவும் சருமத்திற்கு மிகவும் ஏற்றவை. சருமத்திற்குத் தேவையான அழகுக் குறிப்புகளை நீங்கள் இனிக் காணலாம்.

கீரை வகைகளுள் ஒன்றைத் தினசரி சாப்பிடுவது சாலச் சிறந்தது. காரட், கோஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி இவற்றின் சாலட் மற்றும் பழங்கள் இவற்றுடன் ஒரு நாளைக்கு கொதித்து ஆறவைத்த நீர் எட்டு டம்ளர் முதல் பத்து டம்ளர் வரை குடிப்பதை வழக்கமாகச் கொள்ள வேண்டும். இத்துடன் இரவில் நிம்மதியான தூக்கமும் ஒருவருக்கு அமைந்துவிட்டால் அவரது சருமமும் ஆரோக்கியமாக அமைவதுடன் அழகுக்கு அழகூட்டும்!

இனி சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தக்கூடிய சில அழகுச் சாதனப் பொருள்களையும் அவற்றை உபயோகிக்கும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்வோம்.

அழகுக் கூடும்….
Login form
Login:
Password:

Search

Calendar
«  மார்கழி 2017  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz