கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-03-29
5:34 AM

Welcome Guest | RSS Main | தோல் பாதுகாப்பு | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தோல் பாதுகாப்பு
 
 
சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து உடலைப் பாதுகாக்கும் முதல் உறுப்பு தோலாகும். அதிக வெப்பநிலை மற்றும் அதிகப்படியான ஈரப்பதமற்ற தன்மை, தோலை வெகுவாய் பாதிக்கின்றன. அதிக வியர்வையினால் பாக்டீரியா நோய்த் தொற்று ஏற்பட்டு அரிப்பு, சொறி மற்றும் சிறிய கொப்பளங்கள் தோல் பகுதி முழுவதும் உண்டாகின்றன. தீங்கிழைக்கும் புற ஊதாக் கதிர்கள் தோலின் வெளிப்புற உறையைத் தாக்குவதால், தோல் அதிக பாதிப்படைகிறது. கோடையில் வியர்வை அதிகமாக இருப்பதால், அவை தோலின் மேற்பகுதி முழுவதும் எண்ணெய்த் தன்மையைப் பரவச் செய்யும். முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால்தான் அதிக முகப்பருக்கள் ஏற்படுகின்றன.

இத்தொல்லைகளிலிருந்து நம் உடலின் கவசமான தோலைப் பாதுகாப்பது எப்படி? நம் உடலின் தன்மைக்கு ஏற்ப, மூன்று வகைகளில் தோல் பாதுகாப்பு உத்திகளைக் கையாளலாம்.

தோல் பாதுகாப்பு: 1

ரோஜா, யாவின்டர் மலர் ஆகியவற்றில் பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய், சந்தனம், ரோஜா இதழ்கள் ஆகியவைச் சேர்ந்த மூலிகைப் பொருள் சருமத்திற்கு (தோல் நுண்ணூட்டமளிப்பதால், தோல் சுருக்கம் நீக்கப்படுகிறது.

பால், கொள்ளு மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்திற்கு நுண்ணூட்டம் பெறப்படுகிறது. மிதமான சூடும், மிதமான குளிர்ச்சியுமுடைய நீரை செரிமாணத்திற்காக தினமும் அதிகளவு குடிக்க வேண்டும். இனிப்பான பழங்களின் சாறுகளை அதிகமாக குடிப்பதன் மூலம், உடல் உள்ளுறுப்புகள் சுத்தம் அடைவதோடு செரிமாணம் நன்கு நடைபெறும். கோடையில் பித்தம் அதிகரிப்பதை இது தடுக்கும். தோலின் வழவழப்பு தன்மைக்குத் தீங்கிழைக்காத நெய் (பாலாடை நீக்கியது) மற்றும் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சுயமாக, தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது சருமத்திற்கு நன்கு உயவுத்தன்மை அளிக்கும். சருமத்தைக் காற்றோட்டத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். முகத்திற்கு ஈரத்தன்மையை அளிக்கும் இயற்கையான பொருள்களை உபயோகிக்க வேண்டும். அடிக்கடி நீரினால் முகத்தைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

தோல் பாதுகாப்பு : 2

பொதுவாக சருமத்திற்கு குளிர்ச்சி மற்றும் பாதுகாப்பு தருவது அவசியம். குறிப்பாக, கோடையில் சூரிய ஒளி படாதவாறு சருமத்தைப் பாதுகாக்க வேண்டும்.

சூடான, வாசனைப் பொருள்கள் சேர்த்து தயாரித்த உணவைத் தவிர்க்க வேண்டும். தீங்கான, செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட அழகுச் சாதனப் பொருள்களை முகத்திற்குப் பூசுவதைத் தவிர்க்க வேண்டும். இவைகள், சருமத்திற்குப் பாதிப்பேற்படுத்துவதோடு, பல்வேறு கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே நன்கு வறுத்தெடுக்கப்பட்ட உணவு அதிக சூடாக இருப்பதால், அவற்றுடன் வாசனைப் பொருள்கள் சேர்த்து தயாரித்த சூடான உணவைத் தவிர்க்க வேண்டும். தினமும் அதிகப்படியான இனிப்புப் பழச்சாறுகள் மற்றும் குளிர்ந்த பாலில் ரோஜா இதழ்கள் போட்டு சாப்பிடலாம். இனிப்பு நீர் மற்றும் புளிப்புச் சுவை கொண்ட பழங்களுக்குப் பதிலாக உப்பு மற்றும் காரச் சுவைகொண்ட பொருள்களை உட்கொள்ளலாம். இது பித்தம் அதிகரிப்பதைத் தடை செய்கிறது. இதைத்தவிர, கரிலா (Karela) அல்லது வேம்பு கலந்த கசப்புச் சாறுகளைக் குடிக்கலாம். வேம்பு கலந்த நீரை சருமத்தைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். ரோஜா மலரானது மனிதனின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்தி மனதிற்கும், உடலிற்கும் குளிர்ச்சியுடன் இதமளிக்கிறது. கோடையில் சருமம் எண்ணெய்ப் பசையைக் கொண்டிருப்பதால் சருமத்திற்கு எண்ணெய் தடவத் தேவையில்லை. சூரிய வெப்பத்தில் வெளியே செல்லும்போது, சருமத்தைப் பாதுகாக்கக் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும்போது முகத்தை மூடிப் பாதுகாக்க வேண்டும்.

தோல் பாதுகாப்பு : 3

தடிமன் குறைந்து காணப்படும் சருமங்கள் கோடைக்கால பிரச்சினைகளை அவ்வளவாகத் தாங்கக்கூடியது அல்ல. இவ்வகை சருமம், எண்ணெய்த் தன்மை கொண்டிருக்கிறது. துவர்ப்புச் சுவை கொண்ட முல்தானி மித்தி பொருளைக் கொண்டுள்ள பை மூலம் முகத்தை ஒத்தி எடுக்கலாம். இதனால் சருமத்தில் எண்ணெய்த் தன்மை நீக்கப்படுகிறது. இம்மூலிகைப் பொருள் மூலமாக, அதிகப்படியான எண்ணெய் உட்கிரகிக்கப்படுகிறது. மேலும், அதிகப்படியான எண்ணெய்க் கசிவை இது தடுக்கிறது. வேம்பு கலந்த சூடான நீரினால் முகத்தைக் கழுவும்போது, எண்ணெய்க் கசிவை தடுப்பதோடு, வெப்பத்தைத் தணித்து கோடையில் வரும் நோய்த் தொற்றுகளைத் தடுக்கலாம்.

இவ்வகை சருமம் கொண்டவர்கள், குறைந்தளவு எண்ணெயுடன் எளிதில் ஜீரணமாகும், இலகுவான அதிக கசப்பு, துவர்ப்பு மற்றும் கார சுவைகளைக் கொண்ட உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம், செரிமாணத்தைத் தூண்டிவிடலாம். இருப்பினும் கோடையில் காரமான பொருள்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக இனிப்புகள் மற்றும் நன்கு வறுக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இவை முகத்தில் எண்ணெய் பசையை அதிகரிக்கச் செய்யும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். கார்பன் சக்தி நிறைந்த அதிக காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாபபிடுவதன் பயனாக உடல் உள்ளுறுப்புகளைச் சுத்தமாக வைத்திருக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை நீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் வாரத்தில் ஒருமுறையாவது முகத்தில் சேறு பூசி முகத்தைச் சுத்தமாகக் கழுவும் வழிமுறையைப் பின்பற்றலாம்.

தோல் நுண்ணூட்டம்

உங்களுடைய சரும வகைக்கேற்ப கீழ்க்கண்ட உணவுப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை நிற காய்கறிகள், எளிதில் ஜீரணமாகும் புரோட்டீன் நிறைந்த பன்னீர், பால், டோபூ (Tofu), நெல்லிக்காய் மற்றும் அக்ரோட்டு காய் ஆகியவற்றால் புரோட்டீன் மற்றும் எளிதில் செரிமாணமாகும் உயவுத்தன்மை கொண்ட கொழுப்பு ஆகியவை உள்ளடங்கியிருப்பதால் இவைகள் சருமப் பராமரிப்பிற்கு மிகவும் உகந்தது.

நெல்லிக்கனியை பாலுடன் சேர்த்து ரோஜா இதழ்கள், கரும்பு ஆகியவற்றையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

சருமத்தைப் பாதிக்காத சில வாசனைப் பொருள்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவையாவன: மஞ்சள்தூள் தோலுக்கடியில் உள்ள முதல் நான்கு சவ்வுப் படலத்திற்கும் நுண்ணூட்டமளிக்கின்றது. சீரகம், உடலிலிருந்து அமாவை நீக்குகிறது. கறுப்பு மிளகு செரிமாண மண்டலத்தைச் சுத்தம் செய்கிறது. ஃபென்னல் (Fennel) தோலின் வளர்சிதைமாற்றத்தை நடுநிலையில் வைக்கிறது. மாதுளம், ஆப்பிள், பேரிக்காய் மற்றும் கசப்பு, பச்சை நிற காய்கறிகள் சருமப் பராமரிப்பிற்கு மிக உகந்தது. முற்றிலும் கார்பன் சத்துப் பொருள்கள் நிறைந்த தூய்மையான உணவினை மட்டும் உட்கொள்ள வேண்டும். பேக்கிங் மற்றும் டின்களில் அடைக்கப்பட்டு, உறைய வைத்துப் பதப்படுத்தும் வழிமுறைகளில் தயாரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.
Login form
Login:
Password:

Search

Calendar
«  பங்குனி 2024  »
ஞாதிசெபுவிவெ
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz