கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2017-08-23
2:42 PM

Welcome Guest | RSS Main | வெப்சைட்டுகள் அப்டேட் ஆனவையா என அறிவது எப்படி??? | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

வெப்சைட்டுகள் அப்டேட் ஆனவையா என அறிவது எப்படி??? 
எழுதியவர் : கார்த்திக் 16 May2009
அடிக்கடி சில வெப்சைட்டுகளுக்குச் சென்று நாம் தகவல்களைப் பெறுவோம். சில வேளைகளில் நமக்குக் காட்டப்படும் இந்த

இந்த
நிலையில் உங்களுக்கு உதவுவதற்காகவே அப்டேட் செய்யப்பட்டதனை ஸ்கேன் செய்து அறியும் ஆட் ஆன் தொகுப்பு ஒன்று உள்ளது. இந்த ஆட் ஆன் தொகுப்பு பயர்பாக்ஸ் பிரவுசரில் மட்டுமே பயன்படும். இது குறித்து இங்கு காணலாம்.

1. முதலில் இந்த அப்டேட் ஸ்கேனர் என்னும் புரோகிராமினை இந்த முகவரியில் இருந்து டவுண்லோட் செய்திடவும். பின் இந்த ஆட் ஆன் தொகுப்பை இன்ஸ்டால் செய்து பயர்பாக்ஸ் தொகுப்பினை ரீஸ்டார்ட் செய்திடவும்.

2. இந்த அப்டேட் ஸ்கேனர் சில வெப்சைட்களில் மட்டும் அவை அப்டேட் செய்யப்பட்டனவா? என்று ஸ்கேன் செய்திடும்.

3. ஆர்.எஸ்.எஸ். பீட் வசதியினைத் தராத வெப்சைட்களுக்கு இந்த ஸ்கேனர் வசதி மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் அனைத்து வெப்சைட்களுக்கும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் வெப்சைட்கள் அனைத்தையும் இது ஸ்கேன் செய்து சொல்ல வேண்டும் எனத்தானே நாம் விரும்புவோம். அவ்வகையில் அவை எப்படி செயல்படுகின்றன என்று பார்ப்போம்.

4. அப்டேட் ஸ்கேனரை நீங்கள் விரும்பும் வெப்சைட்டில் பயன்படுத்த முதலில் அந்த வெப்சைட்டைத் திறக்கவும். அந்த தளத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Scan page for updates என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. கீழ்க்காணும் பாக்ஸ் உங்களுக்குக் கிடைக்கும்.

தளங்கள் அப்டேட் செய்யப்பட்டவையா? அல்லது ஏற்கனவே பார்த்தவையா? என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாத வகையில் இருக்கும். ஏதோ ஒன்றை நீங்கள் மிஸ் பண்ணியது போன்ற நிலையில் நீங்கள் இருக்கலாம்.
6.இனி வெப் சைட் எத்தனை கால அவகாசத்தில் ஸ்கேன் செய்யப் பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்ற ஸ்லைடிங் பாரில் இதனை செட் செய்திடலாம்.

7. இதனை 5 நிமிட கால அவகாசத்திலிருந்து நாளொன்றுக்கு ஒரு முறை என்பது வரை செட் செய்திடலாம்.

8. அடுத்து எந்த மாதிரி மாற்றங்கள் இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். "All Web Page Changes Cause a Notification" என்பதிலிருந்து "Major Changes are Ignored (less than 1000 characters)." என்பது வரை இதனை செட் செய்திடலாம்.

9. எண்களில் மாற்றம் இருந்தால் அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கும்படியும் செட் செய்யலாம். இதில் இரண்டு நிலைகள் உள்ளன. "Medium Changes are Ignored" என்பதுவும் "Ignore Changes to Numbers" என்பதுவுமாக இரண்டு நிலைகள் தரப்பட்டுள்ளன.

10. இவ்வளவும் செட் செய்து முடித்தவுடன் ஓகே கிளிக் செய்திடவும்.

11. இனி உங்கள் திரையின் இடது ஓரத்தில் ஒரு சிறிய பேனல் ஒன்று இருக்கும். இதில் நீங்கள் எந்த எந்த வெப்சைட்டுகளை ஸ்கேன் செய்து அறிவிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் இதில் இணைக்கலாம்.

12. அடுத்து வெப்சைட்டுகளில் அப்டேட் மாற்றங்கள் உள்ளதா எனத் தெரிந்து கொள்ள பட்டனில் கிளிக் செய்தால் போதும்.

13. இடது பக்கத்தில் உள்ள பட்டனில் ஒரு புராக்ரஸ் பார் தோன்றும். மாற்றங்கள் இருப்பின் அது போல்ட் எழுத்துக்களில் காட்டப்படும். கடைசியாக மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் செயல்பாட்டிற்குப் பின்னர் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று காட்டப்படும்.
Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2017  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2017 Create a free website with uCoz