கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2018-04-19
2:30 PM

Welcome Guest | RSS Main | தொழிலாளர் தினம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தொழிலாளர் தினம்

பாரிலுள்ள தொழிலாளர் பர்ர்த்திருந்த மே ஒன்று
ஊரெங்கும் உன்னதமாய் உருவெடுக்கும் ஊர்வலங்கள்
தினக்கூலி ஊழியரும் ஆhப்பரிக்கும் மேதினத்தில்
மனக்கெழிர்ச்சி பொங்கியங்கே முழக்கமிடும் நாளின்று
அலுவலகத் தொழிலாளர் ஆலை நிறுவனங்கள்
கல்லுடைப்போர் மற்றும் கட்டிட வல்லுனர்கள்
உழவுசெய்து உணவளிக்கும் உத்தமத் தொழிலாளி
வழக்கம் போல் விதைகளைத் தூவிநிற்க
இன்று மூழ்கிநிற்கும் இயற்கையின் வருகையிலே
நன்றேயுழைத் தால்தான் உணவில்லா நிலைமாறும்
அன்னாளே பொன்னாளாய் ஆறுகின்ற வார்த்தையொடு
உழைப்பவரின் வியர்வையிங்கே உலருமுன்னே ஊதியங்கள்
அழைத்தங்கே அளித்திடல் வேண்டுமென ஆன்றோர்கள்
அன்போடு அறவார்த்தை அனைவர்க்கும் பொதுவாக
உன்னத கருத்துக்கள் உவந்தார்கள் அந்நாளில்
உரிமையும் கடமையதும் ஒருவழிப் பாதையன்று
உரிமைதனை கோருதற்கு உரிமையுண்டு உலகினிலே
கடமைதனை உணர்ந்தவர்கள் சரிவரச் செய்தபின்பே!!
மடமைநினை வொழித்து மருவுநல் சிந்தைகொண்டு
உழைப்பாளர் தினத்தினிலே உற்சாகம் பொங்கியெழு
கழைப்பு நீங்கவொரு களிப்பான நாளிதுவே
ஜப்பானுஞ் சீனாவும் உழைப்பதிலே யெறும்புகளாம்
ஒப்பான சுறுசுறுப்பில் உலகநாடு ஏதமில்லை
உலகமெனுஞ் சந்தைதனை உள்ளங் கைகளிலே
நலங்காண வைத்ததற்கு நற்சான்று பலவுண்டு
ஆழ்கின்ற அரசபைகள் மாள்கின்ற வகைசெய்து
கீழ்போட்டு மிதிப்பதற்கு குறிகொண்ட திருநாள்
உழைப்பவர்க்கு உலகமென்று உதித்திட்ட திருநாளாய்
சோதனையும் வேதனையும் சேர்ந்தங்கே உருவெடுத்து
ஆதரவாய் அனைவருமே யொன்றாகிக் கோஷமிட்டு
நாடியூரெங்கும் நல்முழக்கந் தானிட்டு இலட்சியமாய்
வாடிக் கிடக்காமல் வாஞ்சையுட னுழைத்திடவே
தஞ்சமென விருந்திடாமல் தரணியிலே பஞ்சம்நீங்க
நெஞ்சமது நெகிழ்ந்தங்கே நீடுவாழ உழைப்பவர்கள்
ஆதிக்க வெறியடக்கி அன்புநெறி வலியுறுத்தி
உதிரத்தை வியர்வையாக்கி உழைப்பவர்க்கு ஒருநாளாம்
சமுதாய்ச் சேவகனாய் தொழிலாளனைப் பிழயரக்கர்
மேலாண்மை தனையடக்கி சுயநலம் பேணாது
உழைப்பாழிக் கூதியமும் விடுமுறையும் கொடுத்தங்கே
நீடுபுகழ் செல்வமது நற்றொழிலால் பெறு;றுமங்கே
நாற்றிசையும் நலம்பெற்று நலமாக வாழ்நாளில்
கற்றுணர்ந்த தமிழலாலே கவிக்குமரன் நானுமிங்கே
தொழிலாளர் தினத்திலொரு சாறு;றுகவி புனைந்தேனே
ஆற்றொணாத் துயர்கொண்ட அன்புடை நம்முறவின்
மாற்று மருந்தறிய மறத்தமிழ ரொன்றுபட்டு
போற்று வையகத்தில் பொங்கியெழும் பேரணியும்
தேற்றுந்தொழிலாளர் தினத்தன்று திகழ்வாரதுதிண்ணம்
கூற்றுவ னடையாத குணமடைந்தே நம்மினங்கள்
சுற்றமொடு சுகம்பலவாய் சுதந்திர வீழத்தில்
தம்முரிமை கொண்டங்கே தழைத்தோங்கி வாழியவே!!
அளவையூர்
கவிக்குமரன் லம்போ
Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2018  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz