கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2018-01-18
8:33 PM

Welcome Guest | RSS Main | கம்பியூட்டர் திருத்துதல் - 1 | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

Troubleshooting the computers- கம்பியூட்டர் திருத்துதல் - 1

குறுக்குவழிகள் தொடரில் தூயவன் கூறிய கருத்து (வன்பொருள் தொடர்பான உங்களின் பதிவுகளை வரவேற்கின்றோம். அதை புதிய தலைப்பில் தருவது நன்றாக இருக்கும்.) சரியென எனக்கும் படுவதால் இவ்விடயத்தை புதிய தலைப்பில் ஆரம்பிக்கின்றேன்

கம்பியூட்டர் திருத்தும் பயிற்சியில் கடந்த பல மாதங்களாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதனால் பலர் பயனடைவார்கள் என்பதும் குறுக்குவழிகள் தொடருக்கு கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என்பதும் எனது நம்பிக்கை. நான் திருத்துவதில் நிபுணன் அல்ல. சிலவேளைகளில் தவறாக ஏதாவது சொல்லக்கூடும். கோபிக்கவேண்டாம். திருத்திக்கொள்வோம்.

எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் வைக்கவேண்டாம்

பலர் தெரியாமல் விடும் தவறு என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க்கில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் Operating System, Applications, Softwares,Datas என எல்லாவற்றையும் சேமித்து வைப்பதுதான். ஹாட் டிஸ்க் பழுதடையும்போது அல்லது வைரஸ் தொற்றி Rebooting செய்யமுடியாதபோது, Datas ஐ மீட்க கஷ்ட பட்டு அல்லலுற்று பலர் தோல்வி அடைவதை கண்டுள்ளேன். இதற்கு நிவர்த்தி என்னவெனில் ஒரு ஹாட் டிஸ்க் இருந்தால் இரு பாட்டிஷனாவது செய்யுங்கள், இரு ஹாட் டிஸ்க் இருந்தால் முதலாவதில் Operating System, Applications, Softwares ஐயும் அடுத்ததில்,Datas ஐயும் சேமியுங்கள். ஒரு சிலர் பல நூறு பாட்டுக்களை டவுண்லோட்பண்ணி ஒரே பாட்டிஷனில் சேமித்து பின் எல்லாவற்றையும் ஒரேயடியாக தொலைத்தது எனக்கு தெரியும். O/S மும் applications ம் நிறுவ அதிக பட்சம் 5 GB போதுமானது.. ஆனால் ஒரு DVD Drive வைத்திருப்பவர்களுக்கு மேலதிகமாக 10 GB இடம் சினிமாப்படம் கொப்பி பண்ணவேண்டி ஏற்படின் தேவைப்படும். 15 GB தவிர மிகுதியை அடுத்த பாட்டிஷனுக்கு ஒதுக்கலாம். CD Drive மாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு 10 GB இடம் முதலாவது பாட்டிஷனுக்கு போதுமானது

இரு ஹாட் டிஸ்க் வைத்திருப்பதானால் முதலாவதை 20 GB ஆகவும் அடுத்ததை (டேட்டாவிற்கு) உங்கள் சேமிப்பைப பொறுத்து 20 லிருந்து 200 GB வரை வைத்துக்கொள்ளலாம். தற்போது 1000 GB ஹாட் டிஸ்க்கும் பாவனைக்கு வந்துள்ளது.

சரி என்னிடம் 40 அல்லது 80 GB ஹாட் டிஸ்க் உள்ளது. அதில் ஒரு பாட்டிஷனை உண்டாக்கி அதில் எல்லாவற்றையும் நிறுவி கடைக்காரர் தந்துவிட்டார்களே! என்ன செய்வது என்று சொல்லப்போகிறீர்களா? சரி கடைக்காரர்கள் அதைத்தான் செய்வார்கள். கூடை கவிழ்ந்து முட்டைகளெல்லாம் ஒரேயடியாக உடைந்தால் அடிக்கடி கடைக்கு ஓடுவீர்கள் அல்லவா! அதனால்தான். இப்படியான சந்தர்ப்பத்தில் இரண்டு வழிகள் தான் உள்ளன. Reformat பண்ணி பின் இரண்டு பாட்டிஸன்களை உண்டாக்குவது அல்லது Partition Magic என்னும் Software ஐ டவுண்லோட் பண்ணி அதன் துணைகொண்டு நிறுவப்பட்டவை யாவும் அப்படியே இருக்க இன்னொரு பாட்டிஷனை உருவாக்குவது. இந்த இரண்டும் செய்ய முடியாவிடின் Datas ஐ அடிக்கடி backup செய்யுங்கள்

இந்த விடயத்தில் கண்டிப்பாக நீங்கள் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது


Software களும் அதற்கு தேவைப்படும் இட அளவுகளும் (அண்ணளவாக)

XP with SP2 = 615 MB
MS Office 2000 = 375 MB
McAFee Anti-Virus 2006 = 105 MB
Spyware = 100 MB
Nero = 75 MB
Adobe Reader = 65 MB
Adobe Photoshop 7.0 = 142 MB
Java VM = 150 MB
__________
1627 MB
Login form
Login:
Password:

Search

Calendar
«  தை 2018  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2018 Create a free website with uCoz