நண்பி......... நட்பு.... சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு உன்னை காணும் வரை ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே அன்பு காட்டும் உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன் அன்பை எண்ணி வியந்து போகிறேன்....
நண்பி......... மொழிகளோ.... தூரங்களோ........ வயதோ....... மற்ற எதுவுமே - நட்பை எதிர் பார்ப்பதில்லை... உன்னாலே புரிந்து கொண்டேன்.. என் வாழ்க்கைத் தோட்டத்தில் எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும் மலர்ந்து மணம் வீசவில்லை கால வெள்ளத்தில் சிதறுண்டு போகும் உறவுகளில் நண்பி............. தொடர்வாயா உன் நட்பை இறுதி வரை..........?