கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2024-04-19
6:42 AM

Welcome Guest | RSS Main | 2திருடன் சிரிப்புகள் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

2திருடன் சிரிப்புகள்


திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!
திருடன்-2:  இதிலென்னடா அவமானம்...?
திருடன்-1:  அவ என் மனைவிடா....

JJJJJ

திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்.

JJJJJ

வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?
திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன்.

JJJJJ

ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...
திருடன்: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...

JJJJJ

நீதிபதி: ஏம்பா போலீஸ் ஸ்டேசனிலேயே திருட ஆரம்பித்திருக்கிறாயே...
திருடன்: எனக்கு ஏரியாவே பிரித்துக் கொடுக்க மாட்டேன்னுட்டாங்க சார்.. நான் என்ன பண்றது...?

JJJJJ

வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..
திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...

JJJJJ

திருடன்-1:  நேற்று நான் திருட போன கம்பெனி முகமூடி தயாரிக்கிற கம்பெனியாம்...
திருடன்-2:  அப்புறம் என்ன செய்தாய்?
திருடன்-1:  பத்து முகமூடி திருடிட்டு வந்தேன்.

JJJJJ

போலீஸ்: உங்க வீட்டில திருட்டு நடந்ததற்கு உங்க பொண்ணும் உடந்தையா இருந்திருக்கிறாங்களே...
வீட்டுக்காரர்:  ஆமாங்கய்யா... அவளோட உள்ளத்தை
யும் திருடன் திருடிட்டுப் போயிட்டான்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz